Advertisement

கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய்

மப்பேடுஊமப்பேடு பகுதியில், கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் இருப்பது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இங்கு உள்ள, காலனி பகுதியில், 200க்கும் மேற்பட்டகுடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ள பகுதியில் குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கழிவுநீர் கால்வாயில் அமைந்துள்ள குடிநீர் குழாயை அகற்ற பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம்
சாட்டுகின்றனர்.

எனவே, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் கால்வாயில் அமைந்து உள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement