Advertisement

11 மாவட்டங்களுக்கு மண்டல திட்டங்கள் : ஜெர்மனி வழிகாட்டுதலில் தயாராகிறது

தமிழகத்தில், நகரமயமாதலை முறைப்படுத்த, 11 மாவட்டங்களுக்கு, ஜெர்மனி வழிகாட்டுதலில், மண்டல திட்டங்கள் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.


தமிழகத்தில், நகர்ப்புறங்களின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, வளர்ச்சி பணிகளை முறைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதில், அரசு துறைகள் சார்ந்த திட்டங்களை மேற் கொள்வது போன்று, தனி நபர்கள் தேவைக்கான பணி களையும், முறைப்படுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக, நிலத்தின் வகைப்பாடு தொடர்பான வரையறைகளை வகுப்பது, நகர்ப்புற வளர்ச்சி
துறை யின் அடிப்படை பணி. வகைப்பாடு செய்யாத நிலத்தில், அதன் தன்மை குறித்த, வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படையில், கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.


இது, சீரற்ற நகர்ப்புற வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,க்கு உட்பட்ட பகுதிகளுக்கு, 'மண்டல திட்டம், முழுமை திட்டம், விரிவான வளர்ச்சி திட்டம்' தயாரிப்பு பணிகளை, தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்கு, வழக்கமான ஒதுக்கீட்டு நிதி போதுமானதாக இல்லை என்பதால், சர்வதேச நிதி ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன.
இது குறித்து, டி.டி.சி.பி., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நகர், ஊரமைப்பு சட்டத் தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மண்டல திட்டங் கள் தயாரிக்க முடிவு செய்துள்ளோம்.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய, நான்கு மாவட்டங்களுக்கு, ஒருங்கிணைந்த மண்டல திட்டம், ஜெர்மன் அரசு நிறுவனத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ளது. இதேபோன்று, ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி யுடன்,
மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ஒரு மண்டல திட்டம்; துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ஒரு மண்டல திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழக அரசின் உயரதிகாரிகள் குழு, ஜெர்மனி சென்று, அங்கு பின்பற்றப்படும் நில வகைப் பாடு வழிமுறைகளை ஆராய்ந்து வந்துள்ளது. ஜெர்மனி வழிகாட்டுதல்கள் அடிப்படையில், மண்டல திட்டங்களுக்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Arasu - OOty,இந்தியா

    எல்லாத்திலும் ing நல்லா தான் இருக்கு... ஆனா finishing தான் இல்ல

  • Manian - Chennai,இந்தியா

    அது சரி, ஜெர்மனியில் கட்டிங் வாங்க மாட்டாங்களே, இங்கே வாங்காம இருக்க முடியாதே உள்ளுரிலே காடி வாங்கின மாதிரி ஜெர்மனியிலும் கட்டிங் வாங்க என்ன யோசனை வச்சிருக்கிய்ங்க?

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    தி.மு.க வின் கட்டிங் தொகை எவ்வளவு என பேசி முடிக்கப்பட்டதா? ஏனென்றால் பின்னாடி வந்து போராட்டம் செய்தால் கட்டிங் குறையும் என்பதுகூடவா தெரியாது

  • tamil - coonoor,இந்தியா

    நகரத்தின் உள்ளே அல்லது வெளியே கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் பெரும்பாலும் விதிகளை மீறியவையாகவே இருக்கின்றன, அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு எந்த ஒரு விதியையும் பாராமல், மதிக்காமல் அனுமதி அளித்து வருவது நன்கு அனைவருக்கும் தெரிந்த விஷயம், அரசு நினைத்தால் எந்த ஒரு வெளிநாட்டு உதவியும் இல்லாமலே சிறப்பாக செயலாற்றமுடியும்

  • ஆப்பு -

    ஓஹோ...ஜெர்மனி தரத்துக்கு ஒசத்திருவாங்க...அங்கே சமூக நீதியெல்லாம் கிடையாதே?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement