Advertisement

முக்கொம்பு கதவணைக்கு திட்ட அறிக்கை தயார்

முக்கொம்பு கதவணை திட்ட அறிக்கைக்கு, நிதித்துறையின் ஒப்புதல் பெற, பொதுப்பணி துறையினர் முடிவு செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், முக்கொம்பில் இருந்த, பழமை வாய்ந்த அணை, ஆகஸ்ட், 22ல் இடிந்து விழுந்தது. அதிலிருந்து, கொள்ளிடம் வழியாக, காவிரி நீர் அதிகளவில் வெளியேறியது. இந்த அணையின் உடைந்த பகுதியை, முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். 'இடிந்த அணைக்கு மாற்றாக, 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,

கதவணை கட்டப்படும்' என, அறிவித்தார்.தற்போது, அங்கு நீர் வெளியேற்றத்தை தடுக்க, 96 லட்சம் ரூபாய் செலவில், தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.புதிய கதவணை கட்டுமான பணிகளை, விரைந்து துவங்க வேண்டும் என, பொதுப்பணித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து, புதிய கதவணைக்கான திட்ட மதிப்பீடு, வரைபடம் தயாரிப்பு பணிகளை, பொதுப்பணித் துறையினர் முடித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கதவணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. கதவணையின் திட்ட அறிக்கை, விரைவில், முதல்வர் பழனிசாமி மற்றும் நிதித்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய கதவணை, 30க்கும் மேற்பட்ட மதகுகளுடன், பிரமாண்டமாக அமையவுள்ளது. இதில், தேக்கப்படும் நீரை பயன்படுத்தி, மின் உற்பத்தியும் செய்யப்பட உள்ளது. கதவணையின் மேல் பகுதியில், திருச்சி - கரூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில், இரு வழி மேம்பாலம் அமைக்கப்படும்.இதன் வாயிலாக, போக்குவரத்துக்கும், இந்த கதவணை உதவும். நிதித்துறை ஒப்புதல் கிடைத்த வுடன், ஒப்பந்ததாரர் தேர்வு உள்ளிட்ட, அடுத்தகட்ட பணிகள் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • ஆப்பு -

    என்னாது கதவணையா? என்ன த்ண்ணிய உள்ளே போட்டு கதவைச் சாத்தி பூட்டிருவாங்களா? தமிழன் மூளையே மூளை.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நீரை பயன்படுத்தி, மின் உற்பத்தியும் செய்யப்பட உள்ளது....அப்பிடியா... எத்தனை மெகாவாட்...?

  • Velu Karuppiah - Chennai,இந்தியா

    காமராஜர் ஆட்சி காலத்தில் இப்படி ஓர் நிகழ்வு நடந்ததாம் உடனடியாக சிமெண்ட் மூட்டைகளை உடைந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் கொட்டி இரண்டு மூன்று நாளில் அடைத்தார்களாம் இவங்கள் என்னவென்றால் வெட்டி எடுத்து காசாக்கி வந்த மணலை மீண்டும் போட்டு அதையும் காசாக்கி கொள்ளை அடித்தது தான் மிச்சமாகும்

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    கதவுக்கு 25 கோடி. என் சம்பந்திக்கு 300 கோடி.

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    முக்கொம்பு கதவணைக்கு 'முக்கொம்பு மணல்மூட்டை அணைன்னு' பேர் மாத்தி வெச்சுருங்க செலவு மணல் மூட்டையோடு போகும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement