Advertisement

விபத்துகள் குறைந்தன : ரயில்வே அறிக்கை

புதுடில்லி: கடந்த ஓராண்டில் நடந்த, 75 ரயில் விபத்துகளில், 40 பேர் உயிரிழந்துள்ளதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட ரயில் விபத்துகள் குறித்து, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2017 செப்.,
முதல், 2018 ஆகஸ்ட் வரை, ஏற்பட்ட, 75 விபத்துகளில், நாடு முழுவதும், 40 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல்,2016 செப்., முதல், 2017 ஆக., வரை, 80 விபத்துகளில், 249 பேர் இறந்துள்ளனர். இதில், 2016ல், இந்துார் - பாட்னா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில், 150 பேர் உயிரிழந்துள்ளனர்.


கடந்த, 2013 - 2014ல், நாட்டின் பல்வேறு பகுதிகளில், 139விபத்துகள் ஏற்பட்டு, 275 பேர் இறந்துள்ளனர்.
கடந்த, 2014 - 2015 ஆக., வரை, 108விபத்து களில், 196பேர் உயிரிழந்துள்ளனர். 2013ம் ஆண்டை விட, 2017- 2018ல், ரயில் விபத்து கள் வெகுவாக குறைந்துள்ளன. 2020ம் ஆண்டுக்குள், 'ஆளில்லா லெவல் கிராஸிங்' அனைத்தையும் மூட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • ஆப்பு -

    இதுக்கெல்லாம் பா.ஜ அரசும், மோடியின் கடும் உழைப்பும் காரணம்பாங்க...பெட்ரோல் விலை ஏண்ஏறுதுன்னா அதுக்கு நாங்க காரணமில்லேம்பாங்க...

  • RAMESH - CHENNAI,இந்தியா

    Great News

  • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

    அதெல்லாம் ஒத்துக்க முடியாது ...மோடி ஒழிக ..பாசிச பா.ஜ ஒழிக ..இது மட்டும் தான் எங்களுக்கு தெரியும் ..,எங்க மைண்ட் அப்படிதான் மாற்றி வச்சி இருக்காங்க ...இப்படிக்கு திராவிடால்ஸ் ...

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    வீணா ஜம்பம் அடிக்காதீங்க சாமி... விபத்தே இல்லாத ரயில்வே என்றால் எப்பிடி...

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    சாலை பயணங்களில் தான் விபத்துகள் அதிகம் நடக்கிறது.

  • ஆப்பு -

    நாத்தம் அதிகரிப்புன்னு போடவேயில்லை...

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    இதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்... ஒரு சிறிய விபத்துக்கூட நடக்கக்கூடாது... இல்லை என்றால் காங்கிரசுக்கு ஓட்டுப்போடுவோம்...

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    மக்களைவிட கரப்பான் பூச்சிகளும் மூட்டை பூச்சிகளும்தான் இண்டியன் ரயில்வேயில் அதிகம் பயணிக்கின்றன இதனால் இண்டியன் ரயில்வேக்கு நஷ்டம்தான். மூட்டை பூச்சியும் கரப்பான் பூச்சியும் ரயில் டிக்கட் வாங்கி பயணித்தால் அதிக லாபம் வரும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement