Advertisement

'யாராலும் வெல்ல முடியாத இந்தியா' : பிரதமர் நரேந்திர மோடியின் புதிய கோஷம்

அடுத்தாண்டு நடக்கஉள்ள லோக்சபா தேர்தலுக்காக, 'யாராலும் வெல்ல முடியாத இந்தியா - உறுதியான பா.ஜ.,' என்ற புதிய கோஷத்தை, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். மத்தியில் ஆளும், பா.ஜ.,வின் தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் நடந்தது. இரண்டாவது நாளான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: வரும் லோக்சபா தேர்தலை, யாராலும் வெல்ல முடியாத இந்தியா -- உறுதியான பா.ஜ., என்ற கோஷத்துடன் எதிர்கொள்வோம். யாராலும் வெல்ல முடியாத இந்தியாவை, மிகவும் உறுதியான கொள்கையுடைய, பா.ஜ.,வின் மூலம் உருவாக்குவோம்.

நாடு நன்கறியும் :கடந்த, 31 ஆண்டுகளில், நாம் பதவிக்காக அலையவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வந்துள்ளோம்; இதை, இந்த நாடு
நன்கறியும்.அடுத்த, நான்கு ஆண்டுகளில், புதிய இந்தியாவை உருவாக்குவதில் உறுதியுடன் உள்ளோம். வறுமையில்லாத, பயங்கரவாதம் இல்லாத, ஊழல் இல்லாத, மதவாதம் இல்லாத இந்தியாவை, 2022க்குள் உருவாக்குவோம்.ஆட்சியில் இருந்தபோது தோல்வியடைந்த கட்சி, தற்போது எதிர்க்கட்சியாகவும் தோல்விஅடைந்துள்ளது. நம் அரசின் பணிகள், சாதனைகள் குறித்து பேச முடியாது என்பதால், பொய்யான தகவல்களை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்துகின்றன. நாட்டில், 48 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் செய்த பணிகளை, 48 மாதங்களில் நாம் செய்த பணிகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், யார் உண்மையில் மக்களுக்காக உழைத்துள்ளனர் என்பது தெரியவரும். சரியான, நிலையான தலைமை இல்லாத, எந்த ஒரு கொள்கையும் இல்லாத, தவறான நோக்கத்துடன் கூடியதாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி உள்ளது. நம் வளர்ச்சியை தாங்க முடியாமல், நம்மை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், அவர்கள் தற்போதைக்கு இணைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.


பா.ஜ., ஆட்சி தான் :பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது:பா.ஜ., அரசின் செயல்பாடுகளால், பல கோடி பேர் பயனடைந்துள்ளனர். அதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்

. அடுத்த லோக்சபா தேர்தலிலும், பா.ஜ., தான் ஆட்சி அமைக்கும். அதன்பின், 50 ஆண்டுகளுக்கு நம் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தை பின்பற்றுங்கள் :பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித் ஷா பேசியது குறித்து, தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: சமீபத்தில், அமித் ஷா தமிழகத்துக்கு வந்தார். அப்போது, கட்சியில் அமைக்கப்பட்டுள்ள, 1.5 லட்சம் பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து, மக்களிடையே செய்யப்படும் பிரசாரம் குறித்து, அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். தமிழகத்தைப் போலவே, அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும் என, மோடியும், அமித் ஷாவும் செயற்குழுவில் கூறினர். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (78)

 • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  பலமான இந்தியா என்றால் ஒன்றுபட்ட இந்தியாவாகத்தான் இருக்க முடியும். ஒன்றுபட்ட இந்தியாவிற்கு ஊழலின்மை, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, இவற்றுடன் பெரும்பான்மை மக்களின் ஆதரவு என்கிற மூன்றும் இருந்தால் ஒரு கட்சி சிறப்பாக வெற்றியடையும். இதைத்தான் பாஜக குறிவைக்கிறது. ஆனால் பெரும்பான்மை மக்களின் ஆதரவு அரசின் கொள்கையையும், மக்களின் எளிதான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க அரசின் திட்டங்களும் உதவி செய்யும். ஆனால் இப்போது பெட்ரோல் டீசல் விலை மக்களை அச்சுறுத்துகிறது. எப்படி வெங்காயத்தால் டெல்லியை இழந்ததோ அவ்வாறு பெட்ரோல் டீசலால் இழக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் ஒரு சாதகமான விஷயம், திரு மோடியின் தலைமை. அவரது தலைமைக்கு சமமான தலைமை எதிர்கட்சிகளிடம் இல்லாமல் இருப்பது பாஜவிற்கு சாதகம்.

 • hafeezur - Chennai,இந்தியா

  இந்த நாட்டை 60 வருஷம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றம் எங்களுடையதுதான் என்று சொல்ல துணிந்ததில்லை.60 வருஷம் ஆண்டவர்கள் இந்த அளவுக்கு ஆட்டம் போடவில்லை.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  ரொம்ப சரியாக உண்மையை சொன்னார்கள் ..அதாவது உண்மைகளும் அவர்களது வாய் மூலமாக வாய்ஸ் ஆக வெளிவரும் உண்மையை மறைக்கவே முடியாது . தமிழகத்தை போல பின்பற்ற அணைத்து மாநிலங்களுக்கும் அறிவுரை நிச்சயம் பின்பற்றி 2019.தேர்தல் முடிவில் பார்க்கலாம் . இந்த பதிவை அனைவரும் பிரதியாக வைத்து 2019.தேர்தல் முடிவில் சரிபார்த்து அதன் பின்பு கருத்துக்களை பதிய வேண்டுகிறேன் ..

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  பிஜேபிக்கு யுக்தி தான் பிரதானம் . யுக்தி என்றால் பகட்டு வார்த்தையில் மக்களின் மனங்களை வெல்வது

 • indian -

  ஆம். diesel, petrol விலையில் இந்தியாவை வீழ்த்த முடியாது தான்.

 • Snake Babu - Salem,இந்தியா

  காசிமணி போன்ற பிஜேபி நண்பர்களே இப்படியே பேசிக்கொண்டு இருங்கள், இப்போது தான் பிஜேபி ஒட்டு சிந்தாமல் சிதறாமல் அப்படியே உங்களுக்கு கிடைக்கும். உங்களை பற்றிய ஒரு ஆழ்ந்த சிந்தனை நம்மிடையே இருந்துகொண்டே இருக்கும் இப்படியே பேசிக்கொண்டு இருங்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • Anandan - chennai,இந்தியா

   சரியாய் சொன்னீர்கள்.

 • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

  சொல் வேண்டாம் செயலில் காட்டு பழமொழி ஜபாகம் வருகிறது , வெட்டி பேச்சு

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மக்கள் என்ன மன நிலையில் இருக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவில் தான் தெரிய வரும்.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  உறுதியான தேச தலைவரால்தான் உயர்ந்த சிந்தனைகளை மக்களிடம் விதைக்க முடியும் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை தள்ளினும் தள்ளாமை நீத்து என்ற வள்ளுவன் வாக்கின் படி யாரும் வெல்லமுடியாத இந்தியா உருவாகட்டும் வெளிநாட்டு எதிரிகளை இணைந்து உறுதியோடு சமாளிப்பது எளிது சீனா அரேபிய ஆங்கிலேய கைக்கூலிகளான உள்நாட்டு துரோகிகளை இனம் கண்டு களையெடுங்கள் வெற்றி உறுதி

  • Anandan - chennai,இந்தியா

   மாட்டு பேரை சொல்லி மனிதனை கொல் போன்ற உயரிய சிந்தனைகளா கணபதி?

 • arun veli - chennai,இந்தியா

  புண்ணியமா போகும்...கொஞ்சம் பேசுவதை நிறுத்திவிட்டு எதாவது ஆக்கபூர்வமா பண்ணினால்...

 • Nathan - Bengaluru,இந்தியா

  காசி மணி, 21 நூற்றாண்டு... இங்கு ஆரியமும், திராவிடமும் கலந்து பல நூறு வருடமாச்சு.... இன்னும் ஆரியம் திரவிடம் கதை சொல்லிக் கிட்டு இருக்கே நீ.... ஆளத் தெரியாத முட்டாள்கள் கூட்டத்தை சேர்ந்தவன் நீ மட்டும் எப்படி பேசுவாய்... கொள்கை அடிப்படையில் தேர்தலை மக்களை எதிர் கொள்ளத் தெரியாத பேடிகள் இப்படித்தான் பேசுவார்கள்...

 • Nathan - Bengaluru,இந்தியா

  யாராவது கொஞ்சம் உண்மையை பேசக் கற்று கொடுங்கள்... வாயைத் திறந்தால் வெறும் பொய் தானா? மக்கள் வயித்தெறிச்சலை நிறைய கொட்டிக்கிறார்....

 • Rajesh -

  vetri, vetri vadivlu comedy thaan ninaivirkku varugiradhu

 • K.Kannan - Aruppukkottai,இந்தியா

  இந்திய ரூபாயின் மதிப்பை அசையாமல் நிறுத்த துப்பில்லை, இதில் அடுத்த அதிகார ஆசை. ஆசையில்லாமலா ஊர் ஊரக மக்கள் வரிப்பணத்தில் உலகம் சுற்றியது? ஊர் ஊற சுத்தி உன் வீட்டிலுள்ள ரூபாய் காணோம் . அதனாலதான் ரூபாயின் மதிப்பு போச்சு . மக்கள் எலாம் தெருவில் நிற்கும் நிலை வந்தாச்சு , இன்னுமா முதலிருந்து .......?

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

   நமது பிரதமர் பேச்சாற்றல் மிக்கவர் .வல்லவர் .நல்லவர் என்றாலும் வாயாலேயே வடை சுட்டு விற்றும் விடுவார் ? ஒன்றை மட்டும் இவர் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும் ..தனது குடும்பத்தை மேற்கோள்காட்டி நாட்டுமக்களும் தன்னை போலவே வாழுங்கள் என்றுசொல்லும் நாளை 2019.ல் எதிர்பார்கலாமோ ?

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  இணையில்லா இந்தியா, இனியெல்லாம் பிஜேபி ....

  • Anandan - chennai,இந்தியா

   இப்படி கவர்ச்சிகரமான பேச்சுகளை நாங்க கேட்க ஆரம்பித்து 50 வருடம் மேலாச்சு வடக்கே இதை கண்டு ஏமாறுவான் நாங்கள் அல்ல.

 • Power Punch - nagarkoil,இந்தியா

  நல்ல காமெடி ஷோ ??? தொடரட்டும் தேர்தல் வரை.. விலை வாசி உயர்வு, தினம் தினம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு , ரூபாயின் மதிப்பில் சரிவு , ...யாவது பாது காக்க வேண்டுமே என்ற கவலை ......இதனை துன்பங்களுக்கு மத்தியில் நம்மை சிரிக்க வைக்க முயலும் இவரின் பணி தொடரட்டும் தேர்தல் வரை...

 • எஸ்.பொன்னப்பன் - Tambaram,இந்தியா

  'மோடி ஒரு,ராக் ஸ்டார்... இப்படி ஒரு பிரதமர் எங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும்... பாகிஸ்தான் பத்திரிகையின் உண்மை, உண்மை பேச கூட ஆண்மை வேண்டும் இந்தியாவைப் பற்றி எப்போதுமே மட்டம் தட்டி பேசுவது தான் பாகிஸ்தான் மீடியாவிற்கு பழக்கம். சமீபத்தில், பிரதமர் மோடி, அமெரிக்கா சென்று, அங்கு பார்லிமென்டில் உரையாற்றினார். இந்த பேச்சைக் கேட்ட பாக்., 'டிவி' சேனல்கள், பிரதமர் மோடியின் உரை பற்றி, பெரும் விவாதம் நடத்தின. அதில் கலந்து கொண்ட அரசியல் விமர்சகர்கள் மற்றும் அரசியல் வாதிகள் என அனைவரும்,மோடியை தலையில் துாக்கி வைத்து, ஆடாத குறை தான். இவருடைய பேச்சைக் கேட்டு, 70 முறை எம்.பி.,க் கள் கை தட்டினர்' என,சொல்லும் பாகிஸ்தான் மீடியா, ஆறு நாட்களில், ஐந்து நாடுகள் சுற்றுப் பயணம் செய்து, ஓய்வெடுக்காமல் என்னமாய் உழைக்கிறார்' என, மோடியை பாராட்டு மழையில் நனைத்தது. 'நம்ம பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இருக்கிறாரே தண்டத்திற்கு' என, பாக்., பிரதமரைக் கண்டனம் செய்தன பாக்., 'டிவி'க்கள் இது மட்டுமல்ல, இதே அமெரிக்க பார்லிமென்ட், சில ஆண்டுகளுக்கு முன், மோடிக்கு அமெரிக்கா விசா தர மறுத்தது என்பதை சுட்டிக் காட்டியபாக்., 'டிவி'க் கள், 'மோடியோடு, 'செல்பி' எடுத்துக் கொள்ள நிறைய எம்.பி.,க்கள் வரிசையில் நின்றனர் இன்னொரு பக்கம், மோடியின் ஆட்டோ கிராப்பிற்காக பெரும் கூட்டம்' என்று வர்ணித்தன. இதையெல்லாம் விட ஒரு படி மேலே போய், 'மோடி ஒரு ,ராக் ஸ்டார்' எனவும் அழைத்தன. 'மோடி பிரதமராக பாகிஸ்தானுக்கு இருந்திருக்கக் கூடாதா' என பாக்., 'டிவி' செய்தியாளர்கள், ஏக்கத்தோடு கூறினர். அவர் இந்தியாவிற்காக உழைப்பது, கடவுளுக்கு தெரிந்தால் போதும். யாருக்கும் நிரூபித்து காட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை.. உள்ளூர் பத்திரிக்கைகள் கடின உழைப்பின் மூலம் சாதிக்கும் மோடியை பாராட்டா விட்டாலும் குறைந்த பட்சம் பொய்யான தகவல்களை பரப்பாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது...

  • Ajit Kumar - Chennai,இந்தியா

   ஆமா ஆமா பேச்சில் வொன்னும் குறை இல்லை செயலில் முட்டை தான் ..பாகிஸ்தானை அழிக்க ஆயுதம் தேவை இல்லை, நம்மோ மோடி ஜி ஆட்சி பண்ணுனாலே போனதும்...

  • Madhav - Chennai,இந்தியா

   இரண்டு நாட்களுக்கு முன்னாள் இந்த பத்திரிகையில் தான் டிரம்ப் இந்தியாவிற்கு மானியம் நிறுத்துவதை பற்றி பேசியதையும், இனிமேல் மானியம் கிடையாது என்பது பற்றியும் போட்டு இருந்தார்கள். இந்த நிலையில், அமெரிக்க போய் கைத்தட்டு வாங்கியதை பற்றி இப்படி ஒரு பதிவு. அன்றைக்கு நடந்ததுக்கு எங்கே வந்து கருத்து எழுத்து பாரு. எல்லோருமே இப்படியா இல்லை இப்படித்தான் எல்லாருமா :)

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  சத்தம் அதிகம் வந்தாலே..டப்பா காலி..என்றுதான் அர்த்தம்...

  • நக்கல் - ,

   கொஞ்சம் மெள்ளமா பேசுங்க, உங்க சத்தம் தாங்கல..

  • Anandan - chennai,இந்தியா

   அருமை ஜெயந்தன்.

 • மணிமாறன் - trichy,இந்தியா

  இந்தியாவை இன்று அல்ல... என்றுமே யாராலும் வெல்ல முடியாது.. உங்களாலும் நோட்டாவை என்றுமே வெல்ல முடியாது..

 • மணிமாறன் - trichy,இந்தியா

  ஹா..ஹா...மக்களின் சிறந்த பொழுதுபோக்கு பிரதமர் இவர்தான்...

 • balaji - chennai,இந்தியா

  Mr.Pughaz, Coimbatore - nobody (except 2%) will introduce themselves as "Dravidian". Even they don't like. They would like only to introduce as tamilian. Don't label Kamarajar as Dravidian. He is an Indian, a tamilian and a great politician. Please check the quotes given by ex dmk leader about kamarajar. I agree ex dmk leader is a real Dravidian who has exposed many a time about Dravidian culture by his "MEANINGFUL" speech and action and who was the bad.... Sorry.. Good sample

 • மணிமாறன் - trichy,இந்தியா

  " அடுத்த லோக்சபா தேர்தலிலும், பா.ஜ., தான் ஆட்சி அமைக்கும். அதன்பின், 50 ஆண்டுகளுக்கு நம் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது."...இவர்கள் இப்படி பேசுவது தான் நல்லது.. ஒரு ஐந்து வருடத்திற்கே மக்களை தெருவில் நிற்க வைத்த இவர்கள் மீண்டும் அடுத்த முறை வந்தாலே தாங்காது,,பிறகு இன்னும் 50 வருடங்கள் என்று நினைத்தாலே பர லோகம் போய் விடுவார்கள் மக்கள்..ஆகவே இவர்கள் இப்படி மக்களை பீதியிலேயே வைத்திருந்தால் தான் ஒருவரும் வாக்களிக்க மாட்டார்கள்..

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  Nobody can beat India in corruption,loot by politicians and government officials, nobody can compete with us for exorbitant pay packets and perks for politicians many of whom are illiterate,and the ever increasing salary and perks for hardly working people,surely no one can compete with India against all these.

 • Karthik - Chennai,இந்தியா

  வடிவேலு ஜோக் தான் நினைவில் வருது. முதலில் நீங்கள் உங்களால் வெற்றி பெற முடியுமா?

 • A.Robet - chennai,இந்தியா

  பதவிக்கு அலையவில்லை என்றால் அத்வானி ஸ்வராஜ் சுஸ்மா அருண்ஜெட்லீ ஆகியோரின் வாயயை தட்டி பறித்தது யாரோ உழைத்தவர் வீதியில் நிற்க உழைக்காமல் அரசு நாற்காலியில் அமரவும் கலையை தங்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ளவேண்டும்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  Pugazh V. திராவிடப் பகுதி என ஆதிசங்கரர் விவரித்ததை திரித்து வெள்ளையன் நம்மைப்    பிரித்தாள கால்டுவெல் பாதிரிமூலம் உருவாக்கிய (அறிவியலுக்கே ஒவ்வாத) அயோக்கிய வார்த்தை  திராவிஷயினம் என்பது. அதனைவைத்து  சமூகத்தை ஏமாற்றும் பிழைப்பு நடத்துவது திராவிஷ இயக்கங்கள். அவர்களுக்கு  வக்காலத்து வாங்கும்  சமூகவிரோத   செயலைச்செய்வதை நிறுத்துங்கள். பெரியார் பாணியில் சொல்வதென்றால் திராவிஷ இனம் என்ற மூட  நம்பிக்கையை நம்புபவன் முட்டாள். உருவாக்கியவன்  அயோக்கியன். அதனைச்சொல்லி ஏமாற்றுபவன்  மனிதயின விரோதி.

  • velavan - Grenoble,பிரான்ஸ்

   டரவிடார் கழகத்தை உருவாக்கியவர் பெரியார் என்பதை மறந்து பேசுறீங்க ஆரூர் ......

  • Anandan - chennai,இந்தியா

   தன்னைத்தானே அறிவாளி என சொல்லிக் கொள்பவர்கள் ஏன் எங்களை போன்ற திராவிஷயின முட்டாள்களிடம் ஓட்டுக்கு கையேந்த வேண்டும். வடக்கில்தான் உங்களுக்கு ஒட்டு கிடைக்கிறதே அங்கே போகவேண்டியதுதானே, இங்கு என்ன வேலை.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  நேற்று நைட்டு தான் பாஜகவின் புதிய வசனம் Ajay India Atal BJP அப்பிடின்னு சொன்னாய்ங்க... அதுக்குள்ள பல்டியா...??? சரி அதை விடுங்க... அடுத்த முறை ஆட்சிக்கு வந்த பிறகு 50 வருடங்கள் நம்ம ஆட்சின்னு அமித்து சொல்றாப்ல.... அந்த அடுத்த முறை ஆட்சி 10 வருஷம் கழிச்சு வரப்போகிறது.... பார்த்துக்கோங்க...

 • Ray - Chennai,இந்தியா

  “எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” “ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்றார்கள் “எல்லாம் எல்லாருக்கும்” னு லோகோ போட்டு கடைகள் திறக்கறாங்க காலம் மாறிடுத்து அடுத்தவன் கஞ்சி குடித்தால் ஆறுமாதம் பட்டினி கிடக்கிற காலமிது கல்யாண மாப்பிளை குதிரையில் போவதா கண்ட கழுதையும் காரில் போறான் பல்சர் பைக்கில் ரேஸ் வுட்றான் யார் எதில் போறதுன்னு கணக்கில்லையா பக பகன்னு எரியுது பெட்ரோல் விலையைக் குறைக்கக் கூடாது எல்லாம் பஸ்ஸில் போகட்டுமே சூசகமா சாலையில் நெரிசல் குறையும்னு ஒரேபோடாய் போடுங்க மத்திய மாநில அரசுகள் தனியார் கம்பனிகள் கார்ப்ரெட்டில் உள்ளவர்களுக்கு கார் கால் டாக்சி கேன்டீன் ஹை டீ இன்னபிற சலுகைகள் உண்டு அவர்களுக்கு பெட்ரோல் விலை பற்றி கவலையில்லை மீடில் க்ளாஸ் லோயர் மீடில் க்ளாஸ் பாடுதான் திண்டாட்டம் நாட்டின் பொருளாதாரம் வேகமாய் வளர்கிறது ரயில்கள் மணிக்கு முன்னூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றன தெற்கிலிருந்து டெல்லி செல்ல ஐந்து மணிநேரம் போதும் என்றாகியுள்ளது சூப்பர் மார்க்கெட்டுகளில் ஊசி முதல் லேட்டஸ்ட் கார்கள் வரை அடுக்கி வைத்து காத்திருக்கிறார்கள் (வாங்கத்தான் மக்களுக்கு வக்கில்லை கடைகளில் நுழையாமல் சுற்றி சுற்றி வருகிறார்கள்)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இப்பிடியே ஏதாவது சொல்லியே நான்கரை ஆண்டுகள் ஓட்டிவிட்டார்... சொல்லிக்கொள்றாப்ல எந்த நற்பலனும் மக்களுக்கு இல்லை...

 • tamil - coonoor,இந்தியா

  உங்கள் சேவைகளை நாட்டுமக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள், உங்களின் நான்காண்டு சாதனைகளையும் மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள், காத்திருக்கிறார்கள்,

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  /திமிர் பிடித்த திருட்டுத் திராவிடக்கூட்டத்தை ../ இதைப் படித்த பிறகும் எந்த திராவிடராவது பீஜேபீ யை ஆதரிக்கிறார் என்றால் அவர் தன்மானமற்ற அஃறிணை வஸ்துவாக இருக்க வேண்டும். நிச்சயம் ஆறறிவுள்ள மனிதனாக இருக்க வாய்ப்பே இல்லை. யாருக்கு சார் திமிர்? ஒரு இனத்தையே - அதுவும் வ.உ.சி., திருப்பூர் குமரன் முதல்..காமராஜர், கக்கன், அண்ணாதுரை மயில்சாமி, அமரர் ஜீவா, நல்ல கண்ணு வரை எத்தனை எத்தனை திராவிடர் களை ஒட்டுமொத்த மாக அவமானப் படுத்தும் பீஜேபியை எந்த திராவிடரால் எப்படி ஆதரிக்க முடிகிறது. உங்களை அல்ல உங்கள் பெற்றோரை மட்டுமல்ல உங்கள் மூதாதையர் முதல் நாலைந்து பரம்பரையை - உங்கள் மொத்த இனத்தையே கேவலப்படுத்துகிறார்களே - எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்??

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   உங்களைப் போன்ற திக அல்லக்கைகள் தான் தங்களை திராவிடர் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். எங்கள் கலாச்சாரம் இந்து , எங்கள் தாய்மொழி தமிழ் , நாடு பாரதம்.

  • நக்கல் - ,

   உங்க லிஸ்டுல இருக்கற அத்தனை பேரயும் முக கேவலப்படுத்திய அளவு யாரும் செய்திருக்க முடியாது... முக காமராஜர் மாதிரி ஒழுக்கமானவர் என்று உங்கள் வாய் கூட சொல்லாது... திராவிட கட்சிகளுக்கு பேச தெரியவில்லை என்றால் உடனே ஆரியன் திராவிடன், தமிழ் சமஸ்க்ருதம், ஹிந்தி... இப்படி எதயாவது பிடித்துக்கொண்டு தொங்க வேண்டியது.. ஊர ஏமாத்த வேற ஏதாவது கண்டுபிடிக்க முடியுதான்னு பாருங்க...

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

   தமிழ்நாட்டுக்கு வெளியே தென்மாநிலத்தார் தம்மை திராவிடர் எனக்கூறிக்கொள்வதில்லை.அட பெரியாரின் கன்னட இனமே ஒப்புக்கொள்வதில்லை/ அவங்க தெளிவா இருக்கிறாங்க

  • Anandan - chennai,இந்தியா

   புகழ், இப்ப கொஞ்ச நாளா பக்தர்கள் முட்டு குடுத்து குடுத்து ரொம்ப சோர்வாயிட்டாங்க. இன்னும் நாலஞ்சு மாசம் இருக்கு ரூபாயின் மதிப்பை உயர்த்த தெரியலை எந்த பக்கம் திரும்பினாலும் அடி. ஆடிய ஆட்டத்திற்கு இப்போ விழுது அடி.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லோரும்தான் அவனவன் ஆப்பு வைக்கிரானே.. தோ பக்கத்தில் இருக்கிற இலங்கைக்காரன் கிட்டே இருந்து நம்ம ஆட்களை காப்பாற்ற முடியவில்லை..

  • சிங்காரம் - chennai,இந்தியா

   ஐயா.. ஆட்சி மாறி நாலரை வருஷம் ஆச்சி. இப்போல்லாம் நீங்க குறிப்பிட்ட அந்த ஆட்சியின்போது நடந்த மாதிரி நம்ம இந்திய மீனவர்கள் யாரும் சாகறதில்ல (முதல்ல தமிழ்நாட்டு மீனவர்களை நாம 'இந்திய மீனவர்கள்'னு சொல்லுற வழக்கத்தைக் கடைப்பிடிப்போம்).. பிடிச்சி வெச்ச படகுகளுக்கு பதிலா புது படகுகள் தரப்படும்னு மாநில அரசாங்கம் கூட நேத்து அறிக்கை விட்டுருச்சி. என்னிக்கோ நடந்ததை நெனைச்சி பயந்துக்கிட்டு நீங்க கனவுல உளர்றதை நிறுத்திட்டு கொஞ்சம் கண்ணத் தொறந்துபாத்து கமெண்ட் போடுங்க.

 • krishnan - Chennai,இந்தியா

  சார் டோக்லாம்ல சீனா building எல்லாம் கட்டி குடி வந்துட்டானாமே.

  • Mani - Chennai,இந்தியா

   உங்க பப்பு (ராகுல் ) டோக்லாம் பிரச்சினை நடக்குறப்ப சீனா காரன் கிட்ட சென்று பேசிட்டு வந்தார்.... காட்டிக்குடுக்குற கூட்டமும் ஆட்களும் இந்தியாவில் இருக்கும் வரை சீனா building எல்லாம் கட்டி குடி வராம என்ன பண்ணுவான் ...... அடுத்தவனை குறை சொல்லறதே பொழப்ப வச்சிக்கமா தாய்நாட்டை நேசிக்கிற மனப்பான்மையை வலற்றுக்கொள்ளுங்கள் அதுதான் நாட்டுக்கும் நல்லது உங்கள் வீட்டுக்கும் நல்லது ....

 • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

  உலக கிருஸ்த்துவ அமைப்பே மோடிக்கு எதிராகவும், ராகுல் பேபிக்கு ஆதரவாகவும் இருக்கிறது. இந்தியாபையே கிருஸ்த்துவ நாடாக மாற்ற பாடு படுவதாக பரவலாக பேசப் படுகிறது.

  • Anandan - chennai,இந்தியா

   காசா பணமா அள்ளிவிடுங்க.

  • Karthik - Chennai,இந்தியா

   இது என்ன புது கதையாக இருக்கு. இப்படி கூட கிளம்புவர்களா.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   தெரிந்த விஷயம் தானே. நாட்டிற்கு சுதந்திரம் கொடுத்துச் சென்றாலும் இங்கு தங்கள் நடிகைகளை வைத்து ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள் வெள்ளையர்கள் , அதில் இப்போது மண் வீழ்ந்து விட்டது. இப்போது முழு மூச்சில் பிஜேபி ஆட்சியை அகற்ற முயற்சிக்கிறார்கள்.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

   வெள்ளையன் போகும்போது இங்கு விட்டுச்சென்ற லகான் கிறித்தவம் .எதிர்காலத்தில் மீண்டும் பிடிக்கவசதியாக

  • Karthik - Chennai,இந்தியா

   உங்கள் மாதிரி ஆட்கள் இருப்பதால் மோடி போன்ற ஆட்கள் ஆட்சிக்கு வருகிறார்கள்.

  • தலைவா - chennai,இந்தியா

   உண்மை உரைத்தீர் கார்த்திக்..இனிமேலும் பாஜக மதவாத கட்சி அல்ல என்று சாதிப்பவர்கள் மனநோயாளிகள் மட்டுமே???

  • Anandan - chennai,இந்தியா

   //உலக கிருஸ்த்துவ அமைப்பே மோடிக்கு எதிராகவும், ராகுல் பேபிக்கு ஆதரவாகவும் இருக்கிறது. இந்தியாவையே கிருஸ்த்துவ நாடாக மாற்ற பாடு படுவதாக பரவலாக பேசப் படுகிறது.// ஆட்சி செய்ய தெரியலை ஒரு மந்திரியும் உருப்படியா இல்லை அதனால் இப்படி கதைகளை விட்டுத்தான் பொழப்பை நடத்த வேண்டியது இருக்கு. என்ன ஒரு குறை கற்பனை திறன் ஒன்னும் சரியில்லை.

 • கட்டத்துரை - ahmadabad ,இந்தியா

  நாங்க இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் ... தேர்தல் நெருங்க நெருங்க புலம்பல்கள் நிறைய வருது.. படிக்க காமடியாவும் இருக்கு

  • Anandan - chennai,இந்தியா

   நிறைய கொலை முயற்சி செய்திகளெல்லாம் வரும்.

 • ஆப்பு -

  ஸ்வச் பாரத் முழு வெற்றி ஆளுக்கு 15 லட்சம் அமோக வெற்றி எல்லோருக்கும் வீடு சூப்பர் வெற்றி வெல்ல முடியாத இந்தியா மெகா வெற்றி வாயாலே வடை சுடுதல் அசத்தல் வெற்றி

 • ஆப்பு -

  இப்போ யாரு இந்தியாவோட சண்டை போட்டு வெல்ல நினைக்கிறார்கள்? ஏதோ இவரு வாரம் ஒரு வெளிநாடு போய்ட்டு வந்தவுடனேயே வெற்றி வந்துடும்னு நினைப்பு.... ஆகா ஓஹோன்னு புகழ ஆரம்பிச்சுடறாங்க...

  • Anandan - chennai

   சும்மா ஏதாவது புகழுந்துகிட்டே இருந்தாதான் மக்கள் கொஞ்சமாவது நம்புங்க இல்லைனே அவ்வளவுதான் அதான்.

 • இந்துத்தமிழன் - Tamilnadu,இந்தியா

  எப்படியாவது பிஜேபியை தோற்கடிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து மீண்டும் மோடிஜி தலைமையில் பிஜேபியே ஆட்சி அமைக்கும். இது நிச்சயம் நடக்கும். அயராது உழைக்கும் மோடிஜியின் உழைப்புக்கு கண்டிப்பாய் பலன் கிடைக்கும். அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது கட்சி தலைவர்களின் கடமை. மெத்தனமாக இருந்துவிடாமல், அதை அவர்கள் ஒழுங்காக செய்யவேண்டும்.

  • Anandan - chennai,இந்தியா

   பின்னே எதிர்க்கட்சிகள் பிஜேபி வெல்லணும்ணா பாடுபடுவான். என்ன ஆச்சு உங்க ஆளுங்களுக்கு?

  • Karthik - Chennai,இந்தியா

   சார் உங்களுக்கு டீ வரல.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "என்னை தவிர யாராலும் விற்க முடியாத இந்தியா".

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  திமிர் பிடித்த திருட்டுத் திராவிடக்கூட்டத்தை ஒழித்துக்கட்டினால் தமிழர்கள் மோடிக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்...சுதந்திரம் வாங்கியபின்னர் அத்தனை கயவர்களையும் ஒன்றாக ஒரே வரிசையில் நிற்கவைக்க ஒருவராலும் முடியவில்லை... மோடி அதை சாதித்துக்காட்டினார்...

  • sevvanthi - chennai,இந்தியா

   என்ன ஒரு ஆணவம் ஐம்பது ஆண்டுகள் ஆள்வார்களாம். இந்த ஆணவம் போதும் தேர்தலில் மண்ணை கவ்வ. வரும் தேர்தலில் பாஜக இல்லாத பாரதத்துக்குக்காக செயலாற்றிய மோடிக்கு வாழ்த்துக்கள்.

  • Anandan - chennai,இந்தியா

   நோட்டாவிடம் போட்டி போடும்போது இவ்வளவு பொய், எகத்தாளம் நீங்களெல்லாம் வெற்றி பெற்றால் அவ்வளவுதான். அத்தனை கயவர்களையும் ஒன்றாக வெளிநாட்டிற்க்கு அனுப்பி வைத்தார் அதான் உண்மை.

  • Karthik - Chennai,இந்தியா

   காசிமணி சார் நாங்கள் நன்றியோடு இருக்கோம். முதலில் நீங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் பணாலாக போகுது. அதை போய் காப்பாற்ற சொல்லுங்கள். GDP(காஸ், டீசல், பெட்ரோல்) வேலை ஏற்றி சாதித்துவிட்டார். டாலர் விலை ஏற்றி சாதனை பண்ணிவிட்டார்.

  • Anandan - chennai,இந்தியா

   உதார் விட்டுகிட்டு இருந்த காசிமணி இப்படி புலம்ப வச்சுட்டாரே மோடி. அய்யா இது உங்களுக்கே நியாயமா இருக்கா? பக்த கோடிகளை இப்படி தவிக்கவிட்டுடீங்களே.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  நாடு வளர பாஜகவுக்கு வோட்டு.. எதிர் கட்சிகளுக்கு வேட்டு. டுமீல் போராளிகளுக்கும் வேட்டு.

  • Anandan - chennai,இந்தியா

   உங்களுக்கு வேணும்னா ஹிந்துக்களே ஒன்று சேருங்கள் என்பீர் இல்லைனா டுமீளர்கள் அப்படினு எங்களை கேவலமா பேசுவீங்க அப்புறம் ஏன் எங்கள் வோட்டு பிச்சை எடுக்கணும்?

  • Karthik - Chennai,இந்தியா

   கனவு கண்டது போதும். நீங்கள் இருப்பது 2014 . இப்போது நடப்பது 2018 . ஏன் இன்னும் நாட்டை சீரழிக்கவா. அவர் மீண்டும் வந்தால் நாடு திவாலாக அறிவிக்கவேண்டும்.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  'யாராலும் வெல்ல முடியாத இந்தியா'ன்னு போயி சீனாக்காரன்கிடட சொல்லிப்பாருங்க

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களிலும் பின் பற்றினால், மிக பெரிய வெற்றி தான். ஐம்பது வருடங்கள் நாங்கள் தான் ஆட்சியில் இருப்போம். சுப்ரிம் கோர்ட் நம்முடையது போன்ற எண்ணங்கள் வந்திருப்பது பாராட்டுக்குரியது. பிஜேபி வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தற்போது டெல்டா பகுதியில் ஹைட்ரொ கார்பன் எடுக்க, இதே தூத்துக்குடி ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்து இருப்பது இன்னும் பாராட்டுக்குரியது. ஆட்சி போவதற்கு முன், நாட்டை சுருட்டி விடுவது நல்லது. பழனியும் இதை தான் செய்து கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து கூட்டணி அமைத்தால், 39 தொகுதியிலும் வரலாறு காணாத வெற்றி கிடைக்கும்.

  • Anandan - chennai,இந்தியா

   உங்களுக்கு ஒரு தேசபக்தர் விருது பார்சல். அட, கடைசி இரண்டு வரியை இப்பதான் படித்தேன் நீங்க எங்க இனம்தான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement