Advertisement

ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க கவர்னருக்கு அமைச்சரவை பரிந்துரை

சென்னை: முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் உள்ள, ஏழு பேரை விடுதலை செய்யும்படி, கவர்னருக்கு பரிந்துரை செய்ய, தமிழக அமைச்சரவை கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது.

தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று மாலை, 4:00 மணிக்கு, சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆயுள் தண்டனை :



மாலை, 6:00 மணிக்கு, கூட்டம் நிறைவடைந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர், ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி, பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை, இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 161ன் கீழ் பரிசீலிக்கலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும், ஆறு நபர்களும், முன்கூட்டியே விடுதலை கோரும் மனுக்களை, கவர்னர் மற்றும்
அரசுக்கு முகவரியிட்டு அளித்திருந்தனர். அவர்களையும் சேர்ந்து, ஏழு பேரையும், முன்னதாகவே விடுதலை செய்ய, கவர்னருக்கு, 161 சட்டப்பிரிவின் கீழ் பரிந்துரை செய்ய, அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. சட்டப்பிரிவு, 161, மாநில

அதிகாரத்திற்கு உட்பட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் அது தான். எனவே, அமைச்சரவையை கூட்டி, முடிவு செய்துள்ளோம்.அமைச்சரவை முடிவின்படி, கவர்னருக்கு உடனடியாக பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. தாமதமின்றி செய்ய வேண்டும் என்பதற்காக, ஞாயிற்று கிழமையில், அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது.

அமைச்சரவையின் பரிந்துரையை, கவர்னர் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இதில், மறுப்பதற்கு ஒன்றுமில்லை. அரசு எடுக்கும் முடிவை, கவர்னர் செயல்படுத்துவார்.
இதை, காலதாமதப்படுத்த வேண்டியஅவசியம் இல்லை. மாநிலத்தின் நிர்வாக தலைவர், கவர்னர். எனவே, அவர் தான் உத்தரவிட வேண்டும். அரசு முடிவை, அவர் உடனடியாக செயல்படுத்துவார். ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது, தமிழக மக்களின் எண்ணம்.
அதன் அடிப்படையில், அமைச்சரவை கூடி, 2014ல் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய
அரசுக்கு அனுப்பினோம். அவர்கள் அன்றே செய்திருக்கலாம்; செய்யவில்லை.
தற்போது, உச்ச நீதிமன்ற உத்தரவு, ஜெ., முடிவுக்கு வலு சேர்க்கிறது. அமைச்சரவை முடிவு குறித்து, கவர்னர், மத்திய அரசிடம் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை. அமைச்சரவை முடிவை, கவர்னர் ஒப்புக் கொள்வார். மேலும், இந்த அமைச்சரவை கூட்டத்தில், திராவிட இயக்கத்தின் முன்னோடி தலைவரும், முன்னாள் முதல்வருமான அண்ணாதுரைக்கு, 'பாரத ரத்னா விருது' வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆர்., பெயர் :



தமிழகத்தின் வளர்ச்சிக்காக, எண்ணிலடங்கா திட்டங்களை தந்த,
எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை, சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு, 'எம்.ஜி.ஆர்., மத்திய ரயில் நிலையம்' என, பெயர் சூட்ட வேண்டும் என, மத்திய அரசுக்கு, பரிந்
துரைக்கப்பட உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க, அமைச்சரவை ஒப்புதலுடன், மத்திய அரசுக்கு, 2016 டிசம்பரில், மாநில அரசு பரிந்துரை செய்தது. அந்த கோரிக்கையை, மீண்டும் வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

ஞாயிறு கூட்டம் ஏன்? :



அமாவாசை என்பதால், நேற்று ஞாயிற்று கிழமையாக இருந்தபோதும், அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை, ராகு காலம் என்பதால், மாலை, 4:00 மணிக்கு கூட்டம் துவக்கப்பட்டது; மாலை, 6:00 மணிக்கு மேல் நிறைவடைந்தது.

குட்கா ஊழல் விவகாரம் தனியாக ஆலோசனை :



தமிழக அமைச்சரவை கூட்டத்தில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின், அதிகாரிகள் எல்லாரும் வெளியேறினர். அதன்பின், முதல்வர் தலைமையில், அமைச்சர்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். மிக முக்கியமாக, குட்கா ஊழல் வழக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை, ராஜினாமா செய்யும்படி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் விவகாரம் குறித்து ஆலோசித்துள்ளனர். அப்போது, சில அமைச்சர்கள், 'பா.ஜ.,விற்கு தொடர்ந்து, நாம் ஆதரவு அளித்தாலும், அவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்; அவர்களை, நாம் எதிர்க்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.
சில அமைச்சர்கள், 'பா.ஜ., நெருக்கடி என எடுத்துக் கொண்டாலும், குட்கா விவகாரத்தில், அமைச்சரை பதவி நீக்கம் செய்யலாமே; ஜெ., இருந்திருந்தால், இந்நேரம் செய்திருப்பாரே என, நம் கட்சிக்காரர்களே பேசுகின்றனர். எனவே, அமைச்சர் ராஜினாமா செய்யட்டும். சில மாதங்களுக்கு பின், மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளலாம்' என, கூறியுள்ளனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர், பதவி விலக மறுத்ததோடு, தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இதன் காரணமாக, குட்கா விவகாரத்தில், எந்த முடிவும் எடுக்கப்படாமல், கூட்டம் நிறைவடைந்து உள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து (45)

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    இவர்களை விடுவித்தால் அது இந்தியாவுக்கு கேவலம். எம்ஜியார் பெயரை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வைத்தால், அது மாவட்டங்களுக்கு தலைவர்கள் பெயரை வைத்தது போல் ஆகும், ஆதலால் இந்த கருத்தை ஏற்கக்கூடாது. மேலும் பாரத ரத்னா கொடுக்கும் அளவுக்கு அண்ணாவோ, ஜெயலலிதாவோ எந்த ஒரு பெரிய சாதனைகளும் செய்தவர்கள் அல்ல. கம்பரசம் எழுதியவருக்கும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவருக்கும் பாரத ரத்னா கொடுத்தால், அந்த விருதுக்கு இருக்கும் மதிப்பு போய் விடும, அப்புறம் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூட பாரத ரத்னா கொடுக்கலாம்.

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா 10-செப்-2018 10:05 /எனக்கு என் மொழி மீதும் இனம் மீதும் மரியாதையும் பெருமையும் இருப்பதால், இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். / இனம் மற்றும் மொழி மீது நம்பிக்கை இருப்பதால் தமிழர்களை கூண்டோடு அழித்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கண்டித்ததை வரவேற்கிறேன்

  • கணபதி -

    இவர்களை விடுதலை செய்வதை விட தூக்கிலிடவேண்டும். நயவஞ்சகர்கள். தமிழர்களை கொலை செய்தவர்கள்

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    .நமது பூமியில் நடந்துவிட்டதே என்பதுதான் அதுவும் ராமானுஜரே வணங்கிய கோவில் நிலத்தில்

  • nabikal naayakam - தூத்துக்குடி,இந்தியா

    நளினி சோனியாவுடன் சம்பந்தம் பேசி பார்க்கலாமே...வைகோ உதவலாம்.

  • nabikal naayakam - தூத்துக்குடி,இந்தியா

    நளினி தன் மகளுக்கு திருமணம் செய்ய மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வேறு வைத்துள்ளார்.

  • நக்கல் -

    சுவாமி இருக்கும் வரை இது நடக்காது.. பார்க்கலாம்..

  • Indhuindian - Chennai,இந்தியா

    கொலைகாரர்களுக்கு போட்டி போட்டுகொண்டு வக்காலத்து வாங்கி ரத்ன கம்பளம் விரிப்பதுதான் திராவிட சிந்தனை

  • senthil - Qatar,இந்தியா

    மிகவூம் தவறான முன் உதாரணம் ஏன் என்றால் இலங்கை தமிழர்கள் விசாய்த்தில் தமிழ் நாடு மக்கள் திரு . ராஜிவ் காந்தி மரணத்திற்கு பிறகு மிகுந்த கோவத்தில் இருக்கிறார்கள் யார் இந்த வீடுதலை புலிகளுக்கு இவ்ளயு தைரியம் கொடுத்தார்கள் என்ன ஒரு நம்பிக்கை துரோகம் வீடுதலை புலிகள் நம் இந்திய விற்கு செய்தது நம் இந்தியாவை உலக அரங்கில் முன்னெடுத்து சென்ற ஒரு மாபெரும் தலைவர் திரு. ராஜிவ் அவர்கள், நம் இந்தியாவில் இப்பொழுது அனைவர் கைகளிலும் இருக்கும் மோபைல் போன்கு முழு முதற் கரணம் திரு. ராஜீவ் அவர்கள் , ஆனால் இந்த வீடுதலை புலிகள் அவர்கள் சுய நலத்திற்கு நம் தமிழ் நாடு மக்களை ஏமாற்றி நம்மை வஞ்சித்து நம் மண்ணில் கொடூர கொலையை அரங்கேற்றி நம் தமிழ் நாட்டை உலக அரைங்கில் கேட்ட பெயர் வாங்க காரணமாக இருஇந்த இந்த நம்பிக்கை தோரோகிகள் வீடுதலை புலிகள், இந்தியாவில் இவர்கள் என்ன வேடுமானாலும் செய்வார்கள் நம் உடனே இவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமா என்ன , இவர்களுக்கு என்ன இந்தியாவில் கொலை செய்ய லைசென்ஸ் வழங்கி இருக்கிறதத என்ன , நம்மை பொறுத்தவரை திரு. ராஜீவ் கொலைகு பின் தான் இந்த கொடூர வீடுதலை புலிகள் உண்மை கொடூர முகம் வெளிப்பட்டது , ஆனால் இந்த தமிழ் நாடு போலி அரசியல் வாதிகள் , வைகோ , திருமா, சீமான், இன்னும் பல பேர் தமிழ் நாடு மக்களை திசை திருப்பி ஏமாற்றி வருகிறார்கள் , திரு தமிழ் நாடு மக்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள் , திரு . ராஜீவ் காந்தி அவர்களையம் மற்றும் பதினேழு பேர்களையும் வெடிகுண்டு வைத்து கொன்றது சரியா, இந்த கொடூர கொலையை நம் தமிழ் நாடு மக்கள் ஆதரிக்ககிறீர்களா , அப்படியென்றால் இனி எல்லோரும் சொல்வார்கள் அட நம் இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், கொலை , கொள்ளை, கடைதல் , வெடிகுண்டு , ஒரு பிரச்சினையும் இல்லை , ஏன் என்றால் நம் இலங்கை தமிழர்கள் அதனால் தமிழ் நாடு அரசியல் தலைவர்கள் நம்மை காப்பார்கள் என்று திமிரோடு சொல்வார்கள், இதற்கு நம் இடம் கொடுக்கவேண்டும் என்ன , நம் இந்திய மண் மஹாத்மா காந்திஜி மண் இங்கு வன்முறைக்கு இடம் இல்லை நம் இந்திய நாடு அகிம்சை நாடு எனவே இந்த மாதிரி கொடும் குற்றம் புரிந்த குற்றவாளிகளை வெளிய விடகூடாது, அல்லது இவர்களை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் , அன்புள்ள தமிழ் நாடு மக்களே தயாஉ செய்து சிந்தித்து பாருங்கள் , நம்மை ஏமாற்றி இவர்கள் செய்த குற்றத்தை நம் மன்னிக்கவே கூடாது , இது தொடருந்தாள் நம் எதிர்கால தமிழ் சமுதாயம் மிகவும் துன்பம் பெரும் அதை தவிர்ப்பது நம் தமிழ் மக்களின் கடமை, அதானல் நம் இதை ஆதரிக்க கூடாது, தமிழக அரசு தான் முடிவை மீண்டும் மறு பரிசீலனை செய்யவேண்டும் என்பது எனது வேடுகோள். இல்லை என்றல் இது ஒரு மிக தவறான முன் உதாரணம் என்று வரும் காலம் கண்டிப்பாக சொல்லும் . இது என் நாட்டின் மீது சத்தியும்.

  • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

    மத்திய அரசு தாமே முன்வந்தோ அல்லது ஆளுநர் மூலமாகவோ இந்த ஏழு பேரை விடுதலை செய்தால் அப்படியே இந்த நன்றி விசுவாசத்தில் பாஜகவிற்கா ஓட்டுப் போடப் போகிறார்கள்? ஏற்கனவே தமிழகம் சம்பந்தப்பட்ட.....பல வருடங்களாக காங்கிரசால் சின்னாபின்னமாக்கப்பட்ட ..... ஜல்லிக்கட்டு மற்றும் காவிரி நதிநீர் பங்கீடு விஷயங்களில் மத்திய பாஜக அரசு பெற்றுத் தந்த நீதிகளுக்கு அப்படியே நன்றி தெரிவித்து விட்டார்களா? இருப்பினும் மத்திய அரசு இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யப் போவதாகச் சொல்லி காங்கிரசிற்கு ஒரு இக்கட்டை ஏற்படுத்தலாம்...முடிவை எதிர்த்தால் காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து விடப்படும்...ஏற்கனவே ஓட்டு வங்கியும் இல்லை... ஆனால் இதன் மூலம் BJP can score a tactical /strategic point ... டேனியல் காந்தி, சைமன், கௌதமன், வளர்மதி (லேட்டஸ்டாக சோஃபியா), உதயகுமார், அய்யாக்கண்ணு இவர்களை விட இந்த ஏழு பேரால் தமிழகத்திற்கு எந்த வித பாதிப்பும்/கெடுதலும் ஏற்படுத்திவிட முடியாது... ஒரு வேளை ராஜிவ் காந்தி படுகொலையில் இந்த ஏழு பேருக்கும் தொடர்பு/ பங்கு இருந்திருந்தாலும்...அவர்களின் 'அஜெண்டா' முடிவுற்ற நிலையில் தமிழக அரசியலில் அவர்களுக்கு தற்போது என்ன "ஸ்டேக்" இருக்க முடியும்? மேலும் இந்த விஷயத்தை வைத்து பொங்கல் உப்புமா கிளறிக் கொண்டிருப்பவர்களின் வாய்களையும் அடைத்து விடலாம்...யார் கண்டார்கள் இதன் மூலம் பாஜகவிற்கு தமிழகத்தில் ஆதரவு பெருகக் கூடிய சூழ்நிலை கூட வரலாம்

  • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

    ஒருவர் குற்றவாளியா நிரபராதியா என்று தீர்மானிப்பது நீதிமன்றம். குற்றவாளியாக இருந்தால் அவர்களுக்கான தண்டனையை தீர்மானிக்கவேண்டியது நீதிமன்றம். தண்டனைக்காலம் முடிந்துவிட்டது என்று நீதிமன்றம் நினைத்தால் அவர்கள் விடுவிக்கட்டும். அதை எப்படி அரசை முடிவெடுக்க சொல்ல முடியும். அப்படியென்றால் நீதிமன்றம் தன்னுடைய கடமையை தட்டி கழிக்கிறதா? தங்களுக்கு வேண்டிய குற்றவாளிகளை இதைப்போல அரசு விடுவிக்க ஆரம்பித்தால் சிறைச்சாலை அரசியல் கட்சிகளின் கூடாரமாகிவிடாதா? யார் யார் எது எதை செய்யவேண்டுமோ அதை தான் செய்யவேண்டும். என்னுடைய வேலையை மற்றவரின் தலையில் சுமத்துவதோ அல்லது வேறொருவருடைய வேலையில் நான் தலையிடுவதோ மிகவும் தவறு. இந்த 7 பேரின் விடுதலை சம்பந்தமான நிகழ்வில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. நீதிமன்றம் அவர்களின் குற்ற செயலின் தன்மையை உணர்ந்து அவர்களை விடுவிக்க தயங்கி அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்கு பயந்து தன்னுடைய கடமையை செய்ய தவறி அதை வேறொருவரின் மீது சுமத்துவதாகவே கருதுகிறேன். அதனாலேயே அதை எதிர்க்கிறேன்.

  • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

    அஃப்ஸல் குருவிற்கு தாம் தூக்கில் தொங்கப் போகிறோம் என்று தெரிய வந்ததே ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு தான். அதே போல் ராஜீவ் கொலையாளிகள் விஷயத்தில் நடக்கவில்லை. ஜெ கூட இதை பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை. காரணம், அவரைப் பொறுத்தவரை இது கோர்ட் முடிவு செய்த ஒன்று, ஆகையால் தூக்கில் இடுதல் நடக்கப் போகிறது என்று கொஞ்சம் மெத்தனமாக இருந்து விட்டார். கேடு கெட்ட ஊடகங்கள், இதை ஒரு விவாதப் பொருளாக்கி கூவ ஆரம்பித்தன. சட்டப் பேரவையில் விவாதம் நடக்கும் போது கூட் ஜெ சொன்னது இது தான்.. " இதில் மாநில அரசு எதுவும் செய்ய முடியாது" என்று தான்.. கருணாநிதி சும்மா இருப்பாரா? தன் வாய் ஜாலத்தை ஆரம்பித்தார்.. எங்கே இலங்கை தமிழர்களின் காவலன் என்கிற பட்டம் பறி போய் விடுமோ என்கிற பயத்தில் வாய்ச் சொல் வீரர் வை கோ தொண்டை தண்ணீர் வற்ற கத்த ஆரம்பித்தார்.. உலக மகா நடிகர் அல்லவா.. கையோடு கிரிமினல்களை காப்பாற்றுவதற்காக அவதாரம் எடுத்த ராம் ஜெத்மலானி வந்தார். ஒரு நாளைக்கு லட்சம் ரூபாய் ஃபீஸ் வாங்கி வாதாடினார்.. உத்தம் புத்திரனை பெற்றெடுத்த தாய் ஜெ வை பார்த்து அழுது கூச்சலிட, தமிழ் தேசிய பஜனை கோஷ்டிகள் வெறி ஏற்றிவிட, மீடியாக்கள் தூபம் போட, சொல்லி வைத்தாற் போல் அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதோ இப்போது அவர்களை வெளியே அனுப்பத்தயார் என்பது வரை வந்தாகி விட்டது.. ஒவ்வொரு இந்தியனும் வெட்கி தலைகுனிய வேண்டும். திமுக அதிமுக பாமக விசி இன்னும் அத்தனை கட்சிகளும் இந்த அசிங்கத்திற்கு உடந்தை. கேவலம். உலகில் எங்கும் இந்த கூத்து நடக்காது. ஆனால் தமிழ் தேசம் ஆயிற்றே. இப்படி தான் நடக்கும்.

  • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

    நல்லவேளை பிரபாகரன் இவிங்க கையில மாட்டல, மாட்டியிருந்தா விடுதலை செய்து அழகு பாத்திருப்பாய்ங்க.

  • Dhamukanna - Bengaluru,இந்தியா

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர். பெற்ற மகனே என்றாலும் குற்றம் குற்றமே - மனுநீதிசோழன் குற்றம் புரிந்தாலும் குற்றமில்லை - நவீன அரசியல் வியாதிகள். விடுதலை செய்யும் முன் பாதிக்கப்பட்ட மற்ற தமிழ் குடும்பங்களின் கருத்துக்களையும் கவர்னர் கேட்டாக வேண்டும்.

  • ஆப்பு -

    இவிங்களை விடுதலை செய்யுறதிலே ஒவ்வொரு அரசியல் கட்சியும் அரசியல் ஆதாயம் தேடப் பார்ப்பதுதான் கேவலம். நம் நாட்டின் பரிதாபம். இதனால் இந்த மக்களுக்கோ, தமிழக மக்களுக்கோ ஒரு லாபமும், நஷ்டமும் கிடையாது.

  • Madhu - Trichy,இந்தியா

    ராஜிவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன் தினம் வரை ராஜிவ் காந்தி இப்போது ஜெயிலில் உள்ளவர்கள் அனைவருமே சுதந்திரமாக, உயிருடன் தான் இருந்தனர். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு கடந்த 27 வருடங்களாக மேல் உலகத்தில் வெளிவர‌ இயலாத ஒரு சிறையில் உள்ளார். அவரது கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டுவிட்டது. இப்போது இவர்கள் சுதந்திரமாக வெளிவர வேண்டுமெனில், ராஜிவ் காந்தி அவர்களுக்கும் அவர்களுடன் மாண்டவர்களுக்கும் 'சுதந்திரம்' கிடைத்து பிறகு பழையபடி நம்மிடையே வந்துவாழ வகை செய்ய வேண்டும். உச்ச‌ நீதி மன்றத்தினாலோ, மத்திய அரசினாலோ, மாநில அரசினாலோ, மேதகு கவர்னர் அவர்களாலோ இதனை செய்ய முடியாத பட்சத்தில்,ராஜிவ் காந்தி அவர்களும்+அவர்களுடன் மரணித்த மற்றவர்களும் மேல் உலகத்தில் திரும்பி வர இயலாத நிலையில் இருப்பதுபோல‌ ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களும் வெளிவராத நிலையில் சிறையிலேயே இருப்பதுதான் நியாயமான தீர்ப்பு. மரண தண்டனையையும் அறிவித்து விட்டு, அதை ஆயுள் தண்டனையாகவும் குறைத்து விட்டு இப்போது விடுதலை என்பது உச்ச நீதி மன்றத்தை கேலிக்குரியதாக்கும் செயல். Status quo should continue.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    /எனக்கு என் மொழி மீதும் இனம் மீதும் மரியாதையும் பெருமையும் இருப்பதால், இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  • AR -

    இப்போது பொட்டு அம்மனுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள இத்தாலி கும்பலை முன்பே  சரியாக விசாரித்திருந்தால் இந்தக்கூலிப்படை விடுதலைசெய்யத் தகுத்ததாயிருக்கும். ஈழவிடுதலையை விரும்பும் என் போன்றவர்களுக்கு இந்த விவகாரம் கசப்பையே  கொடுக்கிறது.

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    அப்படியே அனைத்து ஊழல் வழக்குகளிலிருந்தும் கருணாநிதி குடும்பம், சசிகலா குடும்பம் ஆகியவற்றை விடுவிக்க தீர்மானம் போடுங்கள்................. காமராஜரை தோற்கடித்து இந்த திராவிட விச செடிகளை வளரவிட்ட நமக்கு ஒரு ஓம் போடுங்க

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    உண்மையாக  சதிதிட்டம் போட்டவர்கள்  காங்கிரஸார்தான். குண்டுவெடிக்கப் போவது முன்கூட்டி தெரிந்து மேடைக்கு ஓடிப்போய் தப்பித்தவர்களும்  அடக்கம். இன்றுவரை தலைமைக்கு விசுவாசமாகவே உள்ளனர். அவர்களை நம்பிய ஈழத்தமிழனும் ஆதரிக்கும் இந்தியத்தமிழனும் அடிமுட்டாள்கள். இனியும்கூட சதிகாரர்களை  சமூகத்தில் நடமாடவிடுவது   ஆபத்து. உண்மை சதிகாரர்கள் பிடிபடும்வரை  சிறையிலிருக்கும் கூட்டாளிகளை வெளியேவிடாதீr

  • PrasannaKrishnan -

    Release and encounter them

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    திட்டமிட்டு கொலை செய்பவர்களை விடுதலை செய்ததை காரணமாக காட்டி திட்டமிட்டு கொள்ளையடித்த வழக்குகளில் தப்பிக்க தி.மு.க வின் ரகசிய திட்டத்தை அ.தி.மு.க முழு மனதுடன் ஏற்றுக்கொண்டது. காரணம் விஷால், ரஜினி,கமலஹாசன், டி.ராஜேந்தர், மற்றும் பா.ம.க வின் அதிரடி நடவடிக்கையே.

  • N.Purushothaman - Cuddalore,இந்தியா

    வெளியில இருக்கிற குற்றவாளிகள் எல்லாம் ஒன்னு சேர்ந்து உள்ள இருக்கற குற்றவாளிகளை விடுவிக்க போறாங்களாம் ...இந்த படுகொலையில் ராஜீவ் மட்டும் இல்லாமல் அவருடன் சேர்ந்து பலரும் உயிரிழந்து உள்ளனர் ...அப்பேற்பட்ட கொடூர கொலைக்கு மன்னிப்பு என்பது ஏற்க முடியாத ஒன்று ...

  • tamil - coonoor,இந்தியா

    27 வருடங்கள் தண்டனையை அனுபவித்து விட்டார்கள், அவர்களை விடுவிப்பது தான் தர்மம், ஆனால் இலங்கை குடியுரிமை பெற்றவர்களாக இருந்தால் விடுதலை செய்தவுடன் அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும், மற்றபடி சென்ட்ரல் ரயில் நிலைய பெயர்மாற்றம், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெ க்கு பாரத ரத்னா பட்டம் எல்லாம் தேவையற்ற விஷயம்

  • G Mahalingam - Delhi,இந்தியா

    கவர்னர் இறந்த 14 பேரின் குடும்பத்தின் கருத்துக்களை கேட்க வைண்டும். இவர்கள் கோர்ட்டில் மனு செய்யலாம்

  • G Mahalingam - Delhi,இந்தியா

    கருத்துக்களை இறந்த 14 பேரின் குடும்பத்திடமும் கேட்க வேண்டும். ராகுல் காந்தியிடம் கேட்டால் மட்டும் போதுமா. எல்லோருக்கும் உடலில் ரத்தம்தான் உள்ளது தக்காளி சட்டினி இல்லை.

  • Shanu - Mumbai ,இந்தியா

    Don't release them. Don't release them. Don't release them.

  • Shanu - Mumbai ,இந்தியா

    Do not release them. They are criminals. See the face of Murugan, Petarovalan and Nalini. They will again plan and do something bad.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    ஜெ இருந்து இருந்தால் இந்நேரம் அவர்கள் ஜெ ஜெ என்று வெளியே வந்து இருப்பார்கள்.. நடவடிக்கையில் வேகம் இல்லை..

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    இலங்கை தமிழர்களை இலங்கைக்கே அனுப்பி விடவும்.

  • Siva - Aruvankadu,இந்தியா

    ராஜீவ் கொலை வழக்கில். ஒரே ஒரு கொலை என்பது போலவே மக்கள் நினைக்கும் வகையில் இந்த கேசை திசை திருப்பி விட்டார்கள்....சுமார். 15 பேர் கொலை மற்றும் 50 பேர் ஊனம்... இதை செய்த கொலைகார கும்பல் விடுதலை.... அநியாயம் வெகுநாள் அடுக்காது.....

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பெரியார், அண்ணா, MGR, JJ மற்றும் A2 போன்ற தியாகிகளின் பெயர்களின் முதல் எழுத்தை வைத்து மாற்றி விடலாம்.. அல்லது குறைந்தபட்சம் சென்னை திராவிட ரயில் நிலையம் என்று மாற்றி விடலாம்...

  • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

    முட்டாள்தனமான தீர்மானம்

  • Anjatha Singam - Bangalore,இந்தியா

    மாநில அரசின் கோரிக்கையை தமிழக கவர்னர் நிராகரித்து , முன்னாள் பிரதமரை படுகொலை செய்த கொலையாளிகளை உடனே தண்டிக்க வேண்டும்.....

  • கைப்புள்ள - nj,இந்தியா

    கருத்து சொல்லி எல்லாம் திருத்துற லெவல் தாண்டி போய்ட்டாங்க எல்லோரும். இனிமேல் கருத்து சொல்லி ப்ரயோஜம் இல்ல, மூடும் இல்ல. இனி எல்லாம் பட்டு திருந்தினால் தான் உண்டு. பை பை...

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    ராஜிவ் கொலை குற்றவாளிகள் நளினி முருகன் சிறையில் 25 வருசத்துக்கு மேலா இருக்காங்க ஆனா அவங்க மகள் லண்டனில் டாக்டருக்கு படிக்கிறாங்க , அதுக்கு பணம், வசதி, வாய்ப்பு எப்படி வந்தது ? சாதாரணமானவங்க ஜெயில்ல இருந்துகிட்டு அவங்க குழந்தையை லண்டன்ல அதுவும் டாக்டருக்கு படிக்க வெக்க முடியுமா ? சிந்தியுங்கள் மக்களே

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    ஊழல் குற்றவாளிகள் கொலை குற்றவாளிகளுக்கு வக்காலத்து

  • கைப்புள்ள - nj,இந்தியா

    தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதம், பயங்கரவாதம் இதை பற்றி எல்லாம் நீங்கள் பேச எந்த ஒரு அருகதையும் கிடையாது.

  • Shanu - Mumbai ,இந்தியா

    நம் நாட்டின் ஒரு தலைவரை கொல்ல உறுதுணையாக இருந்த இவர்களை விடுவிக்க கூடாது. ஓட்டுக்காக கொலை கைதிகளை வெளியே விடுவது தவறு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement