Advertisement

அமெரிக்க சந்தையிலும் பங்குகள் வாங்கலாம்!

பங்குச் சந்தையில், எந்த நிறுவன பங்குகளை வாங்குவது, வெளிநாட்டில் உயர்ந்து வரும் பங்குகளை எப்படி வாங்குவது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறது, 'ஜம்பாலா (ZAMBALA), என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனம்.


'ஜம்பாலா' உங்களுக்கு 'பாங்க்' (FAANG), 'ஹிரிதிக்' (HRITHIK) பங்குகளை வாங்க உதவுகிறது.
பேஸ்புக், அமேசான், ஆப்பிள், நெட்பிளிக்ஸ், கூகுள் நிறுவனங்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டது தான் 'பாங்க்'. எச்.டி.எப்.சி., வங்கி, ரிலையன்ஸ், இன்போசிஸ், டி.சி.எஸ்., ஹிந்துஸ்தான் யூனிலிவர், இன்டஸ்இந்த் வங்கி, கோட்டக் மகேந்திரா வங்கி ஆகியவற்றின் முதல் எழுத்துக்களை கொண்டது தான் 'ஹிரிதிக்'.


இவை போன்ற 'டாப்' கம்பெனிகளின் பங்குகளை உள்நாட்டிலும், அமெரிக்க சந்தையிலும் வாங்க உதவும் 'ஸ்டார்ட் அப்' கம்பெனிதான் 'ஜம்பாலா. 'அமெரிக்க சந்தையில் முதலீடு செய்ய அதிக பணம் வேண்டுமே' என்ற கவலை பலருக்கும் உண்டு. குறைந்தபட்சம், 400 முதல், 500 டாலர் வரை இருந்தாலே போதும், அங்குள்ள 'எக்ஸ்சேஞ் டிரேடட் பண்ட்' மூலம் முதலீடு செய்யலாம்.
இந்தியாவில் மற்ற கம்பெனிகள் எல்லாம், 10 ஆயிரம் டாலர் இருந்தால் தான் அமெரிக்க சந்தையில் முதலீடு செய்ய முடியும் என்பர். ஆனால், புனேவை சேர்ந்த இந்த 'ஸ்டார்ட் அப்' அச்சல், அமிதாப் என்ற இருவரால் துவக்கப்பட்டது. இது 'சப்ஸ்கிரிப்ஷன்' கட்ட வேண்டிய ஒரு சேவை. இவர்கள் மிகச்சிறந்த வல்லுனர்களை வைத்து முதலீடு செய்யக் கூடிய பங்குகளை ஆராய்ந்து தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் இருப்பவர்கள், அமெரிக்க சந்தையில் முதலீடு செய்ய முடியுமா, இதை ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறதா என்ற சந்தேகம் பலருக்கும் வரும். ஆம், ரிசர்வ் வங்கி ஆண்டுக்கு ஒருமுறை, இந்திய குடிமகன், அமெரிக்க டாலர் மதிப்பில் 2,50,000 வரை வெளிநாடுகளில் பல வகைகளில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது. இதற்கான இணையதளம்: www.zambalafunds.com
கருத்தரங்கு
குஜராத் மாநிலம் எல்லாவற்றிலும் முன்னணியில் இருக்கும். ஸ்டார்ட் அப் கம்பெனிகளை ஊக்குவிப்பதிலும் அவர்களே முன்னணியில் இருக்கின்றனர். 'ஸ்டார்ட் அப்'களுக்கு உதவும் விதமாக, அக்., 11 முதல் 13 வரை ஒரு மிகப்பெரிய 'ஸ்டார்ட் அப்' கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்து கொள்ள www.vgs tartup.com என்ற இணைய தளத்தில் சென்று, விவரங்களை சேகரிக்கலாம்.
சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappangmail.com அலைபேசி : 98204 51259


நிதி திரட்டிய 'கிரே ஆரஞ்ச்'


பிளிப்கார்ட், அமேசான் என்று ஆன்லைன் கம்பெனிகள் அதிகரித்து கொண்டிருப்பதால், இந்தியா முழுவதும் வேர் ஹவுசிங் தேவை அதிகரித்துள்ளது. பலர் இந்த வசதிகளை ஏற்படுத்தி தருகின்றனர். இப்படி வசதி செய்து தரும் 'கிரே ஆரஞ்ச்' என்ற கம்பெனி, 140 மில்லியன் டாலர் நிதி திரட்டியிருக்கிறது.


மருந்து எல்லாம் கடைக்கு போய் வாங்குவது குறைந்து, ஆன்லைனில் வீட்டுக்கே வருகிறது. அதுவும், 20 சதவீத தள்ளுபடியுடன். அந்த வகையில் செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் 'NETMEDS' என்ற கம்பெனி, 35 மில்லியன் டாலர், நிதி பெற்றுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement