Advertisement

ஆர்.டி.ஐ., அறிக்கை இழுத்தடிப்பு கர்நாடகா ஐ.ஜி., ரூபா குற்றச்சாட்டு

கோவை: ''சசிகலா தொடர்பான உயர்மட்ட குழுவின் விசாரணை அறிக்கை, தகவல் உரிமை சட்டத்தில், இதுவரை எனக்கு கிடைக்கவில்லை,'' என, கர்நாடக மாநில, ஐ.ஜி., ரூபா தெரிவித்தார்.


சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, சசிகலா மற்றும் இளவரசி, பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக, அப்போது, சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா புகார்தெரிவித்திருந்தார். இது குறித்த விசாரணைக்கு, உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஐ.ஜி., ரூபா, நிருபர்களிடம் கூறியதாவது: சசிகலா
தொடர்பான விஷயங்களில், என் கடமைகளை மட்டுமே நான் செய்தேன். அதற்காக நான் அஞ்சவில்லை. என் இடமாற்றத்தையும், நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எந்த பொறுப்பாக இருப்பினும், நான் என் கடமையை செய்வேன்.சசிகலா சிறையில் இருந்தபோது நடந்த முறைகேடு தொடர்பாக, தற்போதைய அதிகாரி, ஊழல் தடுப்பு பிரிவில் அறிக்கையை சமர்ப்பித்துஉள்ளார். அந்த அறிக்கையை, நான் பலமுறை கேட்டும், கிடைக்கவில்லை. ஆர்.டி.ஐ., எனும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தும், இதுவரை கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக, தகவல் தொடர்பு ஆணையத்தை அணுகஉள்ளேன். தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விகளுக்கு, தற்போதைய அதிகாரிகள், பெரிதாக மதிப்பு அளிப்பதில்லை. மிகுந்த காலதாமதம்
ஏற்படுத்துவதையும், தேவையற்ற விதிமுறைகள் கூறி நிராகரிப்பதையும், வழக்கமாக கொண்டுள்ளனர். ஆர்.டி.ஐ., செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவேண்டும்.இடமாறுதல் என்பது, நேர்மையான அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு தடையாக உள்ளது. சமூக மாற்றத்தில், நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. இடமாறுதல் வழங்குவதற்கான, நிர்ணயிக்கப்பட்ட கால அளவை, நடைமுறைபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • astromaniam - Trichy,இந்தியா

  ச்சிகலாவுக்கு தியாகத் தலைவி சின்னம்மா என்று ஜெயா டிவியில் தினகரன் வரிக்கு வரி பிளந்து கட்டுகிறார். அந்த அம்மா அப்படி என்ன தியாகம் செய்தார்கள்.அதுபற்றி ரூபா அம்மையாரைக் கேட்டால் தெரியும்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  சித்துவையே சித்துவேலைக்காட்டி அமுக்கியவர்கள் சாமியைசரிக்கட்ட யோசிக்க மாட்டார்களா எல்லாம் பணம் சாமி பணம்

 • ஆப்பு -

  அடப் போம்மா...பிஸ்கோத்து சந்தானம் அறிக்கையையே வெளில உடாம அதுமேல கெவுனர் உக்காந்துக்கிடிருக்காரு...இதெல்லாம் ராணுவ ரகசியம். எல்லோரும் சேஃபானப்புறம் வெளில உடுவாங்க.

 • ஸாயிப்ரியா -

  நேர்மையான அதிகாரிகள் மாற்றப் படும் போதே அரசியல் வாதிகள்தவறை ஒப்புக்கொள்கிறார்கள்.தங்களைப் போன்றவர்கள் எங்கிருந்தாலும் மக்கள் மனதில் தான் இருப்பீர்கள்.

 • Darmavan - Chennai,இந்தியா

  ஜாதியை சொல்லி ஆட்சிக்கு வந்தவனெல்லாம் எந்த மாநிலமாக இருந்தாலும் ஒரே ஊழல்தான். கட்டுமரம் முதல்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சசி காங்கிரஸ் உறவை உருவாக்க இப்படியோர் லஞ்சம் இதற்கு திமுக ஆதரவுமுண்டு .காலத்தின் கோலம்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பணம் எல்லாவற்றையும் செய்யும் .. அதில் இது ஒன்று... குமாரசாமிக்கே வெளிச்சம்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கர்நாடகத்தில் கோமாளிகள் ஆட்சி நடக்கிறது... பிறகு எப்படி அரசு இயந்திரம் வேலை செய்யும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement