Advertisement

அமைச்சர்களின் ஊழலை எதிர்த்து 18ம் தேதி தி.மு.க., போராட்டம்

சென்னை: ஊழல் பேர்வழிகள் பதவி விலக வலியுறுத்தி, 18ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளது.


தி.மு.க., மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அவற்றின் விபரம்:பாசிச, பா.ஜ., ஆட்சியை வீழ்த்த, தேவையான செயல் திட்டங்களையும், களப் பணிகளையும் வகுத்து, அவற்றை தொய்வின்றி, தொடர்ந்துமுன்னெடுத்து செல்ல வேண்டும்

ஒவ்வொரு ஊரிலும், தெருவிலும், திண்ணையிலும், மக்களை நேரடியாகசந்தித்து, மாநில வளர்ச்சியை, 20 ஆண்டுகளுக்கு பின்னால் தள்ளிய, அ.தி.மு.க., அரசின் அடுக்கடுக்கான தோல்விகளை விவரிக்க வேண்டும்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில், ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களை,உடனுக்குடன் தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்து, உரிய நிவாரணம் பெற வேண்டும்
கடைமடை பகுதிகளுக்கு தாமதமின்றி, காவிரி நீர் செல்லவும், வருங்காலத்தில், காவிரி நீர், கடலில் வீணாக கலப்பதை தடுத்து, விவசாயத்திற்கு பயன்படுத்தவும், அ.தி.மு.க., அரசு, ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்
ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள ஏழு பேரை, தாமதமின்றி விடுதலை செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, நாளை நடக்கும், 'பாரத் பந்த்' வெற்றி பெற ஒத்துழைப்பு அளிக்கப்படும்

குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய, அமைச்சர் விஜயபாஸ்கரை, 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரனை, பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும்
ஊழல் அரசின் முகத்திரையை கிழிக்கும் வகையிலும், ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தியும், மாவட்ட தலைநகரங்களில், 18ம் தேதி காலை, 10:00 மணிக்கு, தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
 

வாசகர் கருத்து (46)

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  வூழலுக்கு தான் பருப்பு என்று சொல்வதற்கு,வாய் தவறி நெருப்பு சொல்லிவிட்டார் ...விடுங்க ..தேனாய் இனித்த வூழல் அவருக்கு நெருப்பாய் ஏன் எரிந்தது என்று தெரியவில்லை.

 • நக்கல் -

  உங்கப்பா இருக்கும்போது சொல்லவேண்டிய விஷயத்தை இப்போ சொல்லுவது உங்க நிழலை நீங்களே செருப்பால் அடிப்பதற்கு சமம்...

 • இ.வி.டுமீலன்,த.நா. -

  பூனை மேல் மதில், இந்தியா சுதந்திரம் அடைந்த ஜனவரி 15 தேதி, நீட் சரிதா, நடந்துக் கொண்டிருக்கும் வாழப்பாடி ஆட்சி - என்று தமிழ் தெரியாத உளறு வாயை வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராக போராட்டம் என்றொரு அறிக்கையா ? நிதானமாக உளராமல்தானே சொல்கிறீர்கள். சரி அப்படியே வைத்துக் கொள்வோம். தமிழன் அகராதியில் ஊழல் என்ற சொல்லுக்கு அர்த்தமே திருட்டு முன்னேற்ற கழகம் என்று கட்டுமரம் எழுதி வைத்து சென்றுருக்கிறது. அப்படி என்றால் திமுகவே திமுகவை எதிர்த்து போராட்டமா? பேஷ்! பேஷ்!! நல்லதுதான். சற்றும் தாமதிக்காமல் உடனே உங்க நைனா கொள்ளையடித்த 360 வகையான சொத்துக்களையும் உன் குடும்பத்தாரிடமிருந்து நீயே பறிமுதல் செய்து நெஞ்சுக்கு நீதியாக ஏழை தமிழனிடம் கொடுத்து விடு. கணக்கு சரியா போச்சு.

 • rambo - Manamadurai,இந்தியா

  மிக்க நன்று ஸ்டாலின் அவர்களே..விஜயபாஸ்கரின் மேல் ஏகப்பட்ட குற்றசாட்டு ஆதாரத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட போதும் இன்னும் பதவியில் இருக்கிறார்.. ஒரு அமைச்சர் மேல் ஆதாரத்துடன் குற்றசாட்டு இருந்தால் அவர் முதலில் பதவி விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும்.. இரண்டும் நடக்கவில்லை.. அதிமுகவும் அதன் கூட்டு களவாணி பிஜேபியும் திமிராக ஊழல் குற்றசாட்டு சுமத்தப்பட்டவரை பதவியில் நீடிக்க வைத்துக்கொண்டிருக்கின்றன.. இனி தமிழர்களின் ஒரே நம்பிக்கை அப்பழுக்கற்ற நீங்கள் தான் ஸ்டாலின் அவர்களே.. தங்கள் சென்னை மேயோராக இருந்தபோது நகரத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் அமைத்த பாலங்கள் இன்றும் தங்கள் பேர் சொல்கின்றன.. தமிழகத்தில் மணிலா வளர்ச்சி என்பது திமுக ஆட்சியில் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.. திமுக மட்டுமே ஊழல் நிரூபிக்கப்படாத தலைவர்களையும் மதவெறி இல்லாத தலைவர்களையும் கொண்ட கட்சி.. தங்கள் மேலும் தங்கள் தலைவர் கருணாநிதியின் மேலும் போட்ட பொய் வழக்குகள் என்பது வரலாறு.. அந்த பொய்யை மறைக்க கூறும் வார்த்தையே "விஞ்ஞானரீதியான ஊழல்" என்பது மக்கள் அறிந்ததே.. இன்னமும் சில சாதி வெறியர்கள் 2 g யையும், விஞ்ஞானரீதியான என்ற வார்த்தைகளை தேய்ந்து போன ரெகார்ட் போல கூறிக்கொண்டே இருப்பார்.. நீங்கள் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துங்கள்.. தமிழக மக்கள் உங்கள் பக்கம்

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  //அமைச்சர்களின் ஊழலை எதிர்த்து 18ம் தேதி தி.மு.க., போராட்டம் \\ நியூ டலீவர் . ஊழலை ஒழிச்சுட்டா அப்பாலே பொழப்புக்கு என்ன பண்ணுவீங்க ஸார் ... ?

 • மார்கண்டேயன் - Chennai,இந்தியா

  21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய காமெடி

 • Tamilselvan - Chennai,இந்தியா

  ஊழல் பேர்வழிகள் விலக வேண்டும் என்றால் சுடலையில் தொடங்கி ஒருவர் கூட பதவியில் இருக்க முடியாது .தமிழகத்தில் ஊழல் கொண்டு வந்தது ,இந்த கும்பல் தான். முதலில் இவர்கள் அனைவரும் இந்திய அரசியலில் இருந்து விரட்டி அடிக்க பட வேண்டும். சசி போல இவர்களும் சிறையில் அடைக்க பட விடும். தமிழக மற்றும் இந்திய அரசியல் சுத்தம் செய்ய பட வேண்டும்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அய்யகோ ஒரு பாம்பு???? விஷத்தை எதிர்த்து போராட்டமா???நம்ப முடியவில்லை, நம்ப முடியவில்லை.

 • sethu - Chennai,இந்தியா

  சர்க்கஸ் கோமாளி வித்தை காட்டுகிறார் ,நாமெல்லாம் இன்னும் தமிழ் நாட்டில்தானே இருக்கோம் ,அப்பன் கொள்ளைகூடத்திற்கு தலைமை தாங்கி கொள்ளை நடத்தி வெற்றியும் கண்டு ,இப்போ அரசின் சொத்தை மெரினா இடத்தை கொள்ளை அடித்து அங்கு புதைக்கப்பட்டுள்ளார் ,அவருக்கு வாரிசு என அறியப்படட இந்த கோமாளி ஊழல் அப்படினா என்னானு தமிழனுக்கு புரிய வைக்க ஒரு போராட்டத்தை நடத்துகிறார் ,தமிழனின் மானம் விமானத்தில் ஏறும் அளவிற்கு கொண்டு சென்றுவிடடார் இந்த கருணாவின் கொள்ளை கூடட வாரிசு.

 • Tamilnesan - Muscat,ஓமன்

  காவி மயமாக்கும் மத்திய பாஜகவின் கனவை நிராகரித்து வீழ்த்துவோம் அச்சச்சோ நாங்க பயந்துட்டோம் செயல் படாத செயல் தலைவரே 😁😀😁😀😁 ஸாரி ஸாரி திமுக தலைவரே எப்படி எப்படி ? சொந்தக் கட்சியின் தலைவராவதற்கே இலவு காத்த கிளியாய் பெற்ற அப்பனிடம் கெஞ்சி கொண்டிருந்த நீங்கள் உலகளாவிய கட்சியான மத்திய பாஜகவை அதன் காவி மயமாக்கும் கனவை நிராகரித்து வீழ்த்துவோம் என்கிறீர்களா ? உங்கள் கட்சியில் உள்ள யாரும் உங்களுடன் போட்டிக்கு வராமல் , பதவி வெறியால் சொந்த அண்ணனையே உறவுகளிடமிருந்து தள்ளி வைத்து குள்ளநரி வேலைசெய்து திமுக வாரிசு அரசியல் தலைவரானதற்கே இத்தனை ஆணவமென்றால் ஒரு முறை கூட முதல்வராக முடியாத ராசி கெட்ட தலைவரான நீங்கள் மூன்று முறை வரலாறு காணாத வெற்றியில் குஜராத் முதல்வராகி நான்காவது முறையும் உங்கள் காங்கிரஸ் கைப்பிள்ளை ராகுல் செய்த அத்தனை தகிடுதித்தங்களையும் மீறி குஜராத்தில் ஆட்சி அமைத்த நாடாளும் சிங்கத்தை பிரதமர் மோடியை நீங்கள் எதிர்த்து பாஜக காவி மயமாவதை தடுத்து வீழ்த்துவீர்களா ? ஹஹஹஹா சகுனியை போல் சூழ்ச்சி செய்து தமிழக முதல்வரான உங்கப்பன் கருணாநிதியாலேயே காவிகள் நாடாள்வதை தடுக்க முடியவில்லை . எழுதிக் கொடுத்த பிட் பேப்பரை பார்த்து மேடையிலே குழறும் நீங்கள் குடியரசு தினம் எதுவென்றே தெரியாத நீங்கள் 😁😁 நாடாளும் காவிகள் கனவை நிராகரித்து வீழ்த்துவீர்களா ? நீங்கள் யார் காவிகளின் கனவை நிராகரிக்க ? காவிகளின் கனவுகள் எல்லாம் நிறைவேறி விட்டது . முதலில் உங்கள் முதல்வர் கனவு நிறைவேறுகிறதா என்று பாரும் திமுக வெட்டு வேத்துத் தலைவரே . நடக்காத ஒன்றை எதற்காக நீங்கள் கனவு காண்கிறீர்களோ தெரியவில்லை திருவாளர் ஸ்டாலின் அவர்களே

 • Sudarsanr - Muscat,ஓமன்

  Mr. Pannerselvam Don't copy and paste

 • Sudarsanr - Muscat,ஓமன்

  தி மு கவை எதிர்த்து தி மு க போராட்டம் ஊழல் = தி மு க

 • R Sanjay - Chennai,இந்தியா

  ஸ்டாலின் அவர்களே நீங்கள் ஆண்ட போது கிடைத்த ஊழல் செய்த பணத்தில் இன்னமும் வாழ்கிறீர்கள் அந்த ஊழல் பணத்தை தூக்கி, இல்லாத ஏழைகள் மற்றும் இயலாதவர்களுக்கு கொடுத்து விட்டு நேர்மையாக மக்கள் முன் நின்று ஓட்டு கேளுங்கள் மக்கள் உங்களை ஆட்சியில் அமரவைப்பார்கள்.

 • Krishnamoorthy -

  கூச்சம் கொஞ்சம் கூட இல்ல.

 • sahayadhas - chennai,இந்தியா

  எந்த ஊழல் 2G யை எதிர்தா

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  கொலைகாரர்களும் இனி அகிம்சை, ஜீவகாருண்யம் பேசலாம் ...... ஸ்டாலின் அவர்களுக்கெல்லாம் துணிவைக் கொடுத்திருக்கிறார் ....

 • bal - chennai,இந்தியா

  ஊழலை எதிர்த்து ஊழலே போராட்டம்...என்ன ஒரு கூத்து....

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  ஊழலின் ஊற்று கண் நேர்மை பற்றி பேசுகிறது. நீங்க இதுல அவங்கள மிஞ்சுடீங்க.

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  இந்த நூற்றாண்டின் மிக சிறந்த நகைச்சுவை

 • Murugan - Dubai,இந்தியா

  யோக்கியர் வர்றார் உலக மகா புனித கட்சியிலிருந்து... செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்.

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  யோவ் சுடலை போய்யா அங்கிட்டு.... ஊழலின் மொத்த உருவமே உன் அப்பன் தான், உன் குடும்பம் தான். நீயெல்லாம் ஊழல் பற்றி பேச வந்தது தான் காலக்கொடுமை.

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  தோப்பனாரை புதைத்த கையேடு ஊழலின் ஊற்றுக்கண் ஒழிந்தது என்று தெரிந்தும் யாருக்கு எதிராக போராட்டம் ....அவன் இருக்கும்போது அவனை மிரட்டி அஞ்சா நெஞ்சனை கட்சிக்குள் விடாமல் பார்த்து கொண்டதாய் அவர் சொல்லுகிறார் ....நீரோ அவனை அவன் வெதுப்பி விட்டதாக நீர் சொல்லுகிறீர் ....ஆக முதன் நாட்டுமக்கள் ஆசையை அவன் பெற்ற மாக்கள் நிறைவேற்றி உள்ளீர்கள் ....மிக்க மகிழ்ச்சி ....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஆரம்பிச்சு வச்சதே உங்கள் தந்தையார் தான்... அதை எல்லாம் மக்கள்தான் தர்ம அடி கொடுத்து அழிக்கவேண்டும்.,.. அதற்க்கு பண்பு மாண்பு உள்ளவன் ஆட்சிக்கு வரவேண்டும்...

 • Siva - Aruvankadu,இந்தியா

  நுணலும் தன் வாயால் கெடும்....

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  வூழல் வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்றால் , 2g வழக்கில் சிக்கிய கனிமொழி எம்பி பதவியும் பறித்திருக்கப்பட்ட வேண்டும் . திமுக அமைச்சர்கள் வழக்கில் சிக்கியபோது அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் பறித்திருக்கப்பட்டிருக்க வேண்டும்...நீதிமன்றத்தில் எந்த தீர்ப்பும் இன்னும் வரவில்லையே.. ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள ஏழு பேரை, தாமதமின்றி விடுதலை செய்ய வேண்டும். ...என்னவோ இவரு நீதிமன்றத்துக்கு கட்டளையிடுகிற மாதிரி தாமதமின்றி என்று சொல்லி மிரட்டுகிறார் ... பொறுப்பற்ற பேச்சு .சட்டத்தையும் நீதியையும் சுதந்திரமாக செயல்பட விடுங்கள். வேறு எந்த நாட்டிலும் குற்றத்திற்குள்ளானவர்களை வெளியே விட வேண்டும் என்று அரசியல்வாதிகள் கோரிக்கை விடுவார்களா என்றால் இல்லை என்று தான் தெரிகிறது....

 • C.Elumalai - Chennai,இந்தியா

  தேனை எடுத்தவன் புறங்கையை, நக்குவான் குறளோவியம் சொன்னவர், கட்சி ஊழலூக்கு, எதிராக போராட்டம், நடத்தபோகிறது, பொருத்தம்தான்.

 • siriyaar - avinashi,இந்தியா

  Nammai naame

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சாராயத்தில் இவர்கள் அதிமுகவின் கூட்டில் அடிக்காத பணமா? குட்காவில் பங்கு வரவில்லை போலும் - அதனால்தான் இப்படி ஒரு வேகம்...

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஸ்டாலின்: "எங்களுக்கு ஊழல் செய்ய வாய்ப்பு கொடுக்காமலும், ஊழல் பணத்தில் பங்கு கொடுக்காமலும் ஏமாற்றும் அதிமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம். பங்கு சரியாக வந்து விட்டால், ஆர்ப்பாட்டத்தை வாபஸ் வாங்கி விடுவோம்".

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  கமலஹாசன் வந்துட்டார் சற்று பொறுங்கள் ஸ்டாலின் அவர்களே. ஒரே நேரத்தில் இரண்டு காமெடியன்களை எப்படி ரசிப்பது.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  இந்தியாவின் வளர்ச்சிக்கு பரூக் அப்துல்லா நேற்றே ஆதரவு தந்து தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவித்தார். இன்று ஸ்டாலின் மக்களின் நன்மைக்காக தி.மு.க விற்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளார். எனவே இந்தியாவிற்கு நல்ல காலம் தொய்வின்றி தொடரும். ( ஊழல் = தி.மு.க)

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  ஊழல்களை வீராணம் ஏரி தூர்வாரியதிலிருந்து ஆரம்பிக்க அரசு உத்திரவிட்டார் என்ன செய்வது. உங்களின் கட்சியை உடைக்க அழகிரி வேண்டாம் நீங்களே போதும். ஓ அழகிரிதான் தி.மு.க என்று மக்கள் நம்பியதால் ஏற்பட்ட விரக்தியா? தலைவராகியும் மாவட்ட செயலாளர்கள் மதிக்கவில்லையே என்று கோபமா? காங்கிரஸ் இன்னும் கண்டுகொள்ளவில்லை என வருத்தமா? தங்கை மூலம் பி.ஜே.பி நெருங்கிவருவதன் பதட்டமா?

 • குண்டலகேசி - chennai,இந்தியா

  ஓ...இந்த நமக்கு நாமே மாதிரி தன்னைத் தானே எதிர்த்து போராட்டமா...பலே செயலு... நீ நடத்து..

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  தி.மு.க விற்கு எதிராக ஸ்டாலின் போராட்டமா? என்னடா தமிழகத்தில் இப்படி சோதனை.

 • Siva Kumar - chennai,இந்தியா

  இந்தியாவில் மட்டுமே நடக்கும் அதிசயம். ஊழலை ஆரம்பித்தவர்கள் ஊழலை எதிர்த்து போராடுவது. ஊழல் என்பது திமுகவின் தனிப்பட்ட உரிமை. மற்ற கட்சிகள் அதனை பயன்படுத்த கூடாது.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  வாய்மையே வெல்லும். தி மு க வ திருட்டு கட்சினுட்டு கடைசில அ தி மு க ரங்க வரிசையா ஜெயிலுக்கு போறானுங்க ஹைய்யோ ஹைய்யோ

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஒங்க காமெடி நல்லாத்தான் இருக்கு.....ஆனா இன்னும் பெருசா ட்ரை பண்ணுங்க...."ஊழலுக்கு நான் நெருப்பு" ன்னு நைனா சொன்ன மாதிரி ....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement