Advertisement

காற்றில் பறக்கும் கழிவுப்பஞ்சு திறந்தவெளி குடோனால் அவதி

கணியூர்;கணியூர் அருகே, திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ள கழிவுப்பஞ்சு, குடியிருப்புகளில் பரவுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.சூலுார் ஒன்றியம், கணியூர் - கரவளிமாதப்பூர் சாலையில் அண்ணாநகர் அருகே உள்ளது குமரன் நகர். இங்குள்ள தனியார் பஞ்சாலை ஒன்று, கம்பிவேலி அமைத்து திறந்தவெளியில், சாலையின் ஓரத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் கழிவுப் பஞ்சுப் பொதிகளை கொட்டி வைத்துள்ளது.

இந்தப்பஞ்சு காற்றுக்கு பறந்து சாலையில் வாகனங்களில் செல்வோர் மீதும், அருகிலுள்ள குமரன் நகர் குடியிருப்புகளிலும் பரவுகிறது. கழிவுப்பஞ்சு நாசியில் புகுந்தால், சுவாசக்
கோளாறுகளை ஏற்படுத்தும். காசநோய் வரும் அபாயமும் உண்டு.
அப்பகுதி குடியிருப்போர் கூறுகையில், 'சாலை ஓரத்திலும், தரிசுக்காட்டிலும், வீடுகளுக்குள்ளும் கழிவுப்பஞ்சு நிறைகிறது. அதிகமாக காற்றடித்தால் அவ்வப்போது வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement