Advertisement

பார்வையிலும் 'குட்', 'பேட்'... சிறுமிகளுக்கு இலவச கவுன்சிலிங்

ராஜபாளையம்:மிருதுவானதும், விலைமதிப்பில்லாத உடலை பற்றி குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்குத் தெளிவாகக் கற்றுத் தராமல் விடுகிறோம். இதற்குகலாசாரம் என தடைபோட்டு, அடிப்படை புரிதல், தேவையான உடல் பற்றிய புரிதல்களை தவிர்த்து வருகிறோம். பள்ளிக்குப் போவதற்கு முன் தெரிந்து கொள்வதுதான் முறை. ஆனாலும் திருமணம் முடிந்து கடைசி காலம் வரை இது பற்றி அறிவியல் பூர்வ தெளிவின்றியே பலரும் வாழ்க்கையை முடித்து விடுகின்றனர்.
இது தொடர்பாக பள்ளி, கல்லுாரி மாணவியர்களுக்கு இலவச வகுப்பு எடுத்து வருகிறார். ராஜபாளையத்தை சேர்ந்த பிருந்தா தனலட்சுமி.
அவர் கூறுகையில், நவீன காலத்தில் 'குட் டச்', 'பேட் டச்' மட்டுமல்ல, பார்வையையும் பிரித்து உணர செய்வதில் குழந்தைகளோடு பெற்றோர்களுக்கும் வகுப்புகள் அவசியமாகிறது. குழந்தை விரும்பாததை உடனே சொல்ல பழக்கப்படுத்துதல் பெற்றோர் கடமையே.உறவினர், அக்கம் பக்கத்தினர், அருகில் வசிக்கும் ஆண்கள் இப்படி யாராவது உங்களை தவறான நோக்கத்தில் அனுகி உள்ளனரா என்பதை பேச்சு வாக்கில் புரிய வைத்து, அச்சூழ்நிலை ஏற்பாடமல் அறிவுறுத்துகிறேன்.
'டீன் - ஏஜ்' பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், உணர்வுகள் அதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்த ஆலோசனை , நேர்மறையான எண்ணங்கள், அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருவது என அறிவியல் மற்றும் ஆன்மிக ரீதியாக கற்று தருகிறேன்.
எனது மகள்களுக்காக உளவியலோடு, உடற்கூறியலை கற்று ஆரம்பித்த தேடல், சமூகத்திற்கும் உதவட்டுமே என இலவசமாக ஆயிரக்கணக்கான பள்ளி குழுந்தைகளிடம் நேரில் சென்று கவுன்சிலிங் தருகிறேன்.
புரிதல் பெற்ற மாணவியரின் நன்றிகள், நாள் தோறும் எனது அலைபேசியில் ஒலிப்பது தொடர்வதே நோக்கத்திற்கான வெற்றியாக கருதுகிறேன்,'' என்றார்.
இவரது ஆலோசனை சேவையை பாராட்ட 96776 71680ல் பேசலாம்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement