Advertisement

ரோடுகளில் கொட்டப்படும் கட்டட கழிவு:கண்டு கொள்ளாத நகராட்சி அதிகாரிகள்

உடுமலை;உடுமலை ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரோடுகள் பகுதியில், விதி மீறி கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.உடுமலை நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் நடைமுறையில் உள்ளது. கட்டடங்கள் இடிப்பவர்கள், கழிவுகளை, ரோடுகள், தெருக்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கொட்டக்கூடாது.


கழிவுகளை சொந்த பொறுப்பில் பாதுகாப்பாக அகற்றி கொள்ள வேண்டும். அல்லது, நகராட்சிக்கு, லோடுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தினால், நகராட்சி அகற்றிக்கொள்ளும் என்ற விதி உள்ளது.
ஆனால், உடுமலை நகரில் விதிமீறி கட்டட கழிவுகள் ரோடுகள் மற்றும் பொது இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது. உடுமலை பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு, தளி ரோடு மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பகுதி என பொது இடங்களில், ஏராளமான லோடு கொட்டப்படுகிறது. அதே போல், மழை நீர் வடிகால், ஓடைகளிலும் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால், சுகாதாரகேடு, வழித்தடம் மறிப்பு, விபத்துக்கள், பறக்கும் மண் துகள்களால் பாதிப்பு என சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பொது இடங்களில் கட்டட கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை நகராட்சியில், இடிக்கப்படும் கட்டடங்கள், புதிய கட்டுமானங்கள் குறித்து நகரமைப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, கட்டட அனுமதி வழங்க வேண்டும். கட்டட கழிவுகளை முறைகேடாக அகற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார பிரிவு அதிகாரிகளும், பொது இடங்களில், குப்பைகள், கட்டட கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டு
பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement