Advertisement

எதிரிகளை அழிக்கும் ராணுவ 'ரோபோ'

எதிரிகளுடன் சண்டையிடும் ராணுவ ரோபோவை, ரஷ்யாவின் ஆயுத தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது.


உலகளவில் ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, ராணுவத்தை பல வழிகளிலும் பலப்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றன. இதற்காக கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகள், அணு ஆயுதம், போர் விமானம் தாங்கி கப்பல், பீரங்கி என பல வகையிலும் நாடுகள் போட்டி போட்டு தயாரித்து வருகின்றன.


இந்நிலையில் மாஸ்கோவில் நடந்த 'சர்வதேச ராணுவ கண்காட்சி - 2018'ல், இந்த ராணுவ ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ரஷ்யாவின் கலாஷ்நிகோவ் என்ற ஆயுத தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது.


இக்கண்காட்சியில் பல்வே நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்ஸ், போர் விமானம், பீரங்கி உள்ளிட்ட 26 ஆயிரம் விதமான ஆயுதங்கள் மற்றும் ராணுவ சாதனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ரஷ்யாவின் பெரிய ஆயுத தயாரிப்பு நிறுவனமான இது, ஏகே.47 துப்பாக்கிகளை அறிமுகம் செய்த பெருமைக்குரியது.


13 அடி உயரம்:




எதிரிகளுடன் சண்டையிடும் ராணுவ ரோபோவுக்கு, 'இகோரெக்' என பெயரிடப்பட்டுள்ளது. இது நடந்து சென்று எதிரிகளுடன் சண்டையிடும் திறன் பெற்றது.


இது கையில் ஆயுதங்களை வைத்து எதிரிகளை தாக்கும். இந்த ரோபோவின் ஒரு பகுதியில் கேபின் ரூம் இருக்கும். இதில் பைலட் ஒருவர் அமர்ந்து கொண்டு, ரோபோவை இயக்க வேண்டும். கேபினுக்குள் இருக்கும் பைலட், எதிரிகளால் தாக்கப்படாமல் இருப்பதற்காக, கேபின் ரூம் புல்லட் புரூப் செய்யப்பட்டுள்ளது. ரோபோ 13 அடி உயரம் கொண்டது. எடை 4,080 கிலோ. ரோபோவை மேலும் மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    'இகோரெக்' உயிர் பலிகளை தடுக்கிறது அல்லவா..

  • GBR -

    இந்த மாதிரி robot இந்தியா தயாரித்து காஷ்மீர் பகுதியில் பயன் படுத்த வேண்டும் என்று நான் நீ‌ண்ட நாள் நினைத்தது உண்டு

  • NaanPeriyavan - Pudukottai,இந்தியா

    ஏண்டா ஆப்பு. உனக்கு வேற வேலையே இல்லையா. எல்லாத்துக்கும் குறை கண்டு புடிக்கிறத்திலேய இருக்க. யாருக்கு கைக்கூலி வேல பார்க்குறேன்னு தெரியல. உன்ன மாதிரி சில பச்சோந்திகள் மேலும் நாட்டுக்கு எதிரே, நல்ல திட்டங்களுக்கு எதிர் குரல் கொடுத்து கொண்டே... போய் சேர வேண்டியதுதான்.

  • sahayadhas - chennai,இந்தியா

    அப்படியே ஐஸ்வரியா வாக மாறி விடாதீங்க

  • கோகுல்மதுரை -

    avatar ரோபோ

  • ஜெகதீஷ்,சென்னை -

    அவதார் படத்துல வர்ற மெஷின் உல்ட்டா பண்ண மாதிரி இருக்கு..

  • ஸாயிப்ரியா -

    கண்டு பிடிப்பு பிரம்மாண்டம். இருந்தாலும் எங்க எந்திரன் ரோபோ விற்கு love தெரியுமே.

  • ஆப்பு -

    நம்ம பிரதமர் ரஷ்யா போய்ட்டு வந்துட்டாரில்லே... கூடிய சீக்கிரம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இறக்குமதி செஞ்சுருவாங்க...ரோபோவுக்கு மேலே அடிக்கப்படும் பெயிண்ட் இந்தியாவிலேயே மூலிகைகளைக் கொண்டு தயாரிப்போம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement