Advertisement

மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 13 ஆசியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக அரசு சார்பில் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது, துாய்மை பள்ளி விருது வழங்கும் விழா கடந்த 5ம் தேதி நடந்தது.
விழாவில், விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 13
ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.
மேலும், 2017-18ம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்று 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றும் கல்வி மற்றும் பிற இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் பத்தாம் வகுப்பு 15 பேர் மற்றும் பிளஸ் 2 வகுப்பு 15 பேர் என 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், பிளஸ் 2 மாணவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையை முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம் வடசிறுவள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு துாய்மை பள்ளிக்கான விருது மற்றும் ரூ.30 ஆயிரத்திற்கு காசோலை வழங்கப்பட்டது.
விருதுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை விழுப்புரம் சி.இ.ஓ., முனுசாமி பாராட்டினார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement