Advertisement

தெலுங்கானா சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம் சூசகம்

புதுடில்லி : தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலை நடத்த, தயார் நிலையில் இருப்பதாக, தலைமை தேர்தல் ஆணையர், ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.


தெலுங்கானா மாநில சட்டசபை, ஒன்பது மாதங்களுக்கு முன்பே கலைக்கப்பட்டதை அடுத்து, அந்த மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடத்தப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.



இது குறித்து, தலைமை தேர்தல் ஆணையர், ஓ.பி.ராவத், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஒரு மாநில சட்டசபை கலைக்கப்பட்டால், அடுத்த, ஆறு மாதங்களுக்குள், அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். தெலுங்கானா மாநில சட்டசபை, முன்கூட்டியே கலைக்கப்பட்டுள்ளதால், அங்கு, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.


தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, காபந்து அரசு, இடைப்பட்ட காலத்தை, தங்களுக்கு சாதகமாக்கும் முன், தேர்தல் நடத்தப்பட வேண்டும். ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய, நான்கு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதோடு சேர்த்து, தெலுங்கானா சட்டசபை தேர்தலை நடத்தவும், தேர்தல் ஆணையம் தயார்.


அதற்கு தேவையான, ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என, அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. எனினும், மாநில தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து, அங்குள்ள நிலவரம் குறித்து அறிக்கை கோரப்படும். அதன் பின், தெலுங்கானா சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • ஆப்பு -

    இந்த மாதிரி ஏடா கூடங்களுக்கு இடமளித்து உதவாக்கறை சட்டங்களை வகுத்த சட்ட மேதைகள்.... பேசாம பார்லிமெண்டையும் கலைத்து மத்திய ஏடாகூடத்தையும் காமிங்க..

  • nabikal naayakam - Chennai,இந்தியா

    இந்தமுறை ஹைதராபாத்தில் அமைதி மார்க்க கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறது.

  • tamil - coonoor,இந்தியா

    எல்லாமே திட்டமிட்ட படி சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறது, நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து தெலுங்கானா சட்டசபைக்கு தேர்தலை நடத்துவது தான் சரியாக இருக்கும், இப்போது நடத்துவதினால் என்ன நன்மை நடந்துவிடப்போகிறது

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    இதுல என்ன சூசகம்?? நாலு நாள் முன்னாடியே சட்ட சபையை ச.சே.ராவ் கலைக்கப் போறார்னு தெரியும். கலைத்தால் அடுத்தது தேர்தல் தான். இது ஸ்கூல் பசங்களுக்கே தெரியும்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    எந்த ஒரு கட்சியும் பெரும்பாண்மை பெற போவதில்லை...

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    சந்திரசேகர் ராவ் பிஜேபி உடன் கூட்டணியில் இருப்பதால், ஏதோ தானே தலைமை தேர்தல் ஆணையர் மாதிரி நவம்பரில் தேர்தல், டிசம்பரில் ரிசல்ட் என்று சொல்லி உள்ளார். தெலுங்கானாவில் தெலுகு தேசமும் காங்கிரஸ் ம் ஒன்றாக தேர்தலை சந்தித்து, சந்திருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால் தான் சரி ஆவார்.

    • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

      என்னது தெலுகு தேசமும் காங்கிரசும் கூட்டணியா? என்னதான் முயற்சித்தாலும் தெலுங்கு தேசம் எனும் ஆந்திரர் கட்சிக்கு தலங்கானாவில் வெற்றி நடக்காத விஷயம் காங்கிரஸ் இரண்டு மாநிலங்களிலும் மூன்றாம் நாலாம் இடம்தான் பல காலமாகவே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement