Advertisement

சிசு ஆம்புலன்ஸ் சேவை குறித்து விழிப்புணர்வு...தேவை! வாடகை வாகனங்களில் செல்லும் அவலம் 

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை குறித்து பொது மக்களிடம் போதிய அளவில் விழிப்புணர்வு இல்லாததால் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த ஆம்புலன்ஸ் சேவை குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கடலுார் மாவட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரண்டு உள்ளன. இதில், ஒரு வாகனம் கடலுார் அரசு தலைமை மருத்துவமனையிலும், மற்றொன்று சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும் இயக்கப்படுகிறது.

ஆம்புலன்சில் இங்கு பேட்டர், வெண்டிலேட்டர், உயிர்காக்கும் மருந்துகள், சிரன்ஜி இன்சுலேஷன், ஆக்சிஜன், மல்டி பாரா மானிட்டர் உள்ளிட்ட கருவிகள் உள்ளன.
வீடுகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகள் பிறந்தது முதல் 30 நாட்களுக்குள் ஏதேனும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும் போது, மேல்சிகிச்சைக்காக கடலுார் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வசதியாக இந்த ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மாவட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் வசதி கடந்த 6 மாதங்களாக செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும் இந்த ஆம்புலன்ஸ் வசதி குறித்து பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால், தாய்மார்கள் வாடகை ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு சென்று வரும் நிலை உள்ளது.

எனவே, பச்சிளங் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ வசதி குறித்து பொது மக்கள் இடையே போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் மாதந்தோறும் சராசரியாக 60 பேர் மட்டுமே பச்சிளங் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த எண்ணிக்கை மிககுறைவு. ஆம்புலன்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொது மக்கள் இந்த சேவையை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்கலாம்' என்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement