Advertisement

'குட்கா' முறைகேடு: சசிகலா சூத்திரதாரி!

தமிழகத்தை உலுக்கும், 'குட்கா' முறைகேட்டுக்கு சூத்திரதாரியாக, சசிகலா இருந்திருக்கலாம் என, சி.பி.ஐ., வட்டாரத்தில் சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில், 'அப்ரூவர்' ஆன, குட்கா ஆலை உரிமையாளர், யார் யாருக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பதை, விசாரணையில் அம்பலப்படுத்தி உள்ளார். இதன் காரணமாக, சி.பி.ஐ., அதிகாரிகள், புதிய கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


தமிழகத்தில், 2013ல், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட, போதை பொருட்களை விற்க, ஜெ., அரசு தடை விதித்தது. எனினும், கடைகளில் அவை விற்பனை செய்யப்பட்டு வந்தன. வருமான வரித்துறை அதிகாரிகள், 2016ல், சென்னையில் உள்ள, குட்கா, பான் மசாலா நிறுவனங்களில், அதிரடி சோதனை நடத்தினர்.


அப்போது, 250 கோடி ரூபாய் அளவிற்கு, தமிழகத்தில், சட்ட விரோதமாக, குட்கா வர்த்தகம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா தயாரிப்பாளர் மாதவ ராவுக்கு சொந்தமான, சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள, குடோனில் நடத்திய சோதனையில், 'டைரி' ஒன்று சிக்கியது. அதில், குட்கா விற்பனை செய்ய, அமைச்சர்கள், மூத்த போலீஸ் அதிகாரிகள் போன்றோருக்கு, எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விபரத்தையும், மாதவ ராவ் எழுதி வைத்திருந்தார்.


இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள், அப்போது,
தமிழக, டி.ஜி.பி.,யாக இருந்த அசோக்குமாருக்கு, கடிதம் அனுப்பினர். அவர் அந்தக் கடிதத்தை, முதல்வருக்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தின் மீது, தமிழக அரசு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


அதன்பின், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, 2017ல், குட்கா ஊழல் குறித்து, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கு விசாரணை, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.


சி.பி.ஐ., அதிகாரிகள், சில தினங்களுக்கு முன், மாதவ ராவிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல் அடிப்படையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர், ஜார்ஜ், வணிக வரித்துறை முன்னாள் அமைச்சர், ரமணா மற்றும் பல்வேறு அதிகாரிகள் வீடுகளில், செப்., 5ல், அதிரடி சோதனை நடத்தினர்.


சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், குட்கா நிறுவன உரிமையாளர்களான மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் வரி அதிகாரி பாண்டியன், மாநில உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள், சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இவர்களுக்கு மத்தியில், இடைத்தரகர்களான ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். கைதான குடோன் உரிமையாளர், அப்ரூவராக மாறி உள்ளார். அவர், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், முன்னாள் முதல்வர், ஜெ.,வின் தோழியும், தற்போது பெங்களூரு சிறையில் இருப்பவ ருமான, சசிகலாவும் சிக்குவார் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.


குட்கா ஊழல் குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள், 2016ல், டி.ஜி.பி.,க்கு எழுதிய கடிதம்; அது தொடர்பாக, முதல்வருக்கு, டி.ஜி.பி., அனுப்பிய கோப்பு ஆகியவை, 2017 நவ., 17ல், போயஸ் கார்டனில் உள்ள சசிகலா அறையில் கண்டுபிடிக்கப்பட்டன.


முதல்வர் பார்வைக்கு, டி.ஜி.பி., அனுப்பிய கடிதமும், கோப்பும், சசிகலா அறையில் கண்டுபிடிக்கப்பட்டது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு, குட்கா ஊழலில் பங்கு உள்ளதா; வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் அடிப்படையில், விசாரணை நடத்த விடாமல், அவர் தடுத்தாரா; ஜெ., பார்வைக்கு கடிதம் செல்லாமல் மறைத்தாரா என்ற, கேள்விகள் எழுந்தன.


இதுகுறித்து, தற்போது, சி.பி.ஐ., விசாரணையை துவக்கி உள்ளது. இதன் காரணமாக, குட்கா ஊழல் வழக்கில், மேலும் பல தலைகள் சிக்கலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.

காவலில் விசாரிக்க திட்டம்! 'குட்கா' முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட 'குடோன்' உரிமையாளர்கள் உள்பட ஐந்து பேரை, காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன் மற்றும் கலால் வரி அதிகாரி எம்.கே.பாண்டியன் ஆகியோரை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களை, ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்று மற்றும் நாளை விடுமுறை தினம் என்பதால் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் திங்கள் கிழமை தாக்கல் செய்ய உள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement
 

வாசகர் கருத்து (134)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    சசிகலாவின் பங்கை மறைக்கத்தான் ஸ்டாலின் விவகாரத்தை திசை திருப்புகிறாரா?

    • Manian - Chennai,இந்தியா

      அப்பா மட்டும் விஞ்சாக் கொள்ளை அடிக்கலாமா? நானும் அதை சசி மூலம் நிறைவேற்றுவேன். அப்பா தூங்கிகிடடே எல்லாத்தையுமே பாத்துக்கிட்டுக்காரே - சூளுறை தொளபதி.

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    விரைவில் பட்டி மன்றம் நடக்கலாம் -எது அதிக வருமானத்தை தரும்? 2G யா அல்லது குட்காவா?

  • Sahayam - cHENNAI,இந்தியா

    சசிகலா களவாணி அம்மா உத்தமர் என எப்பாடுபட்டு முயற்சித்தாலும்

  • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

    All the roads lead to Rome... All the kickbacks reach the Ma'am...

  • dandy - vienna,ஆஸ்திரியா

    கேவலம் கேட்டிடஅரசியல் வியாதிகள் பணத்திற்காக ..குடி பழக்கத்தையும் ..போதை பழக்கத்தியும் பழகினார்கள் ..அனால் திருந்தவே முடியாத தமிழர்கள்...இந்த பிறவிகளை ஆட்சியில் அமர்த்த தயார்

  • kandhan. - chennai,இந்தியா

    இப்போ நடக்கும் ஆட்சியையும் மத்தியில் இருக்கும் பி ஜே பி யும் கூட்டுகளவாணிகள்தான் என்பது இதன் மூலம் மக்களுக்கும் தெளிவாக புரிகிறது காரணம் கடந்த 28 ஆண்டுகளாக (எம் ஜி ஆர் முதல் )அம்மாவின் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்திருக்கிறது அப்படி இருக்க அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்களை பற்றி எதுவும் எழுதாத தினமலர் எப்படி இது நடுநிலை நாளேடு என்பது...சிந்திக்கவேண்டிய விஷயம் இது .... முழு பூசணிக்காயினை சோற்றில் மறைக்கும் செயல் அல்லவா இதில் பாதிக்கப்படுவது நம் மக்கள்தான் மக்களுக்கு புரிந்தால் நல்லது கந்தன் ,சென்னை

  • murugan - chennai,இந்தியா

    தமிழிசைக்காக பிஜேபி பெயரை காப்பாற்ற தான் வருமான வரித்துறை சோதனை பேப்பர் தலைப்பு செய்திகள் எல்லாம்.

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    தி.மு.க ஆட்சியில் நடைபெறாத ஊழலா அவர்கள் எங்கும் எதிலும் மாட்டவில்லையே. எனவே அவர்களிடம் ஊழல் செய்வது எப்படி என்று பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

  • jagan - Chennai,இந்தியா

    இது போன்ற "மக்கள் நல" சட்டம் போடுவதே நாலு காசு பாக்கத்தான். உலகத்தில் எந்ததெந்த நாடுகளில் மிக குறைவான சட்டங்களோ அங்கே தான் மிக குறைந்த ஊழல் காணப்படும்...அதிக அரசாங்க சட்டம் = அதிக ஊழல்

  • rajan - kerala,இந்தியா

    இந்த சிறை கிழவி ஒரு பெண் முக. அத்தனை ஊழல் வித்தைகளும் இவருக்கு அத்துப்படி.

  • vaishnavi - nainital,இந்தியா

    இதை வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்தலாம்

  • லூயிஸ்சோஃபியா -

    இவர்களுக்கு எல்லாம் முதலில் பாதை போட்டு கொடுத்த மஞ்சள் துண்டை நாம் மறந்து விடக்கூடாது..

    • வந்தியதேவன் - காஞ்சிபுரம்

      அவ்வளவு மனஎரிச்சல்... மன அரிப்பு... அவர் மேலே உங்களுக்கு என்பதை உங்க கமெண்ட் எடுத்துக்காட்டுது... “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்”...ங்கற கதையா...?

    • dandy - vienna

      தேவை பட்டு இருந்தால் மஞ்சள் துண்டு அபின் பழக்கத்தையும் ..அறிமுகப்படுத்தி செல்வம் சேர்த்து இருப்பான் ...

    • dandy - vienna

      ஊழல் ..குடி இவைகளில் உலக அளவில் கொண்டு சேர்த்தவன் எங்கள் மஞ்சள் துண்டு

  • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் நிர்வாக சீர்கேடு தலை விரித்து ஆடுகிறது அரசியல் வியாதிகள் இதில் கட்சி பாரபட்சம் இல்லை அடுத்தது பெரும் தொழில் அதிபர்கள் என்று கூறிக்கொள்ளும் கொள்ளையர்கள் மற்றும் அரசியல் புரோக்கர்கள், அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் அடுத்தது திரைப்பட துறையினர் தயாரிப்பாளர்கள் இவர்கள் அரசியல் வியாதிகளின் கொள்ளை அடித்த பணங்களை வைத்தது காய் நகர்த்துபவர்கள் இவைகளை எல்லாம் யாரும் முற்றிலும் மாற்றி அமைக்க முடியுமா ?

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    இனிமேலாவது வோட்டுக்கு காசு வாங்காமல் நல்லவர்களை தேர்ந்து எடுங்கள் , இல்லை என்றால் வாக்களித்த மக்கள் தான் முதல் குற்றவாளிகள் , நமக்கு ஊழல் ரவுடிகளும் வேண்டாம் ஊழல் அடிமைகளும் வேண்டாம் நல்ல மக்கள் சேவகர்கள் தான் வேண்டும் , மக்களே இறுதி எஜமானர்கள் .

  • nabikal naayakam - Chennai,இந்தியா

    எனக்கு எப்போதுமே ஒரு தீராத சந்தேகம் உண்டு. சதிகாரி சசிகலா கட்டுமரத்தால் ஜெயாவை வீழ்த்த அனுப்பப்பட்டவர் என்று. ஏனென்றால் கட்டுமரத்திடம் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அனைத்திலும் ஊழல் செய்யும் அபார திறமை பெறமுடியும்.

  • Chandra - Chennai,இந்தியா

    சசிகலா சரி ..விஜயபாஸ்கர் பத்தி தினமலர் எழுதாதது ஏன் ?

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    என்னாது சதிகாரி தான் இத்தனைக்கும் காரணமா???அப்போ ஜெயலலிதா கனல், புரட்சித்தலைவி, மிகச்சிறந்த உத்தமர், மிகச்சிறந்த தலைவி, அம்மா எல்லாம் ஒரு பைசாவுக்கு பிரயோஜனமில்லையா????வெறும் ஜோடனை செய்து சதிகாரியால் பரப்பப்ட்டதா???

    • vigneshh - chennai,இந்தியா

      ஜெயலலிதாவின் மரணத்திற்கு இது தான் முதல் காரணம்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    /1967ல் அதிகாரிகள் நேர்மையானவர்களாகவும், அரசியல் வாதிகள் பொறுக்கிகளாகவும் இருந்தனர் - காமராஜர், கக்கன், ராஜகோபாலாச்சாரி, வாஜ்பாய், ஜெயபிரகாஷ் நாராயண் - இவர்களையெல்லாம் இப்படியா அவமானப் படுத்தி எழுதுவது?? மிகவும் தவறு இது. அவர்கள் அமரர்கள் ஆகிவிட்டனர். வெரி ஸாரி.

    • கல்யாணராமன் S. - பெங்களூரு,இந்தியா

      புகழ், நான் யாரைப்பற்றி எழுதினேன்னு உங்களுக்கு நன்றாக தெரியும்.................if you want to twist, misinterpret and score some brownie points, go ahead, by all means

  • rajan - jeddah,சவுதி அரேபியா

    சீனா வந்து நம் நாட்டை கைப்பற்றினால் மிகவும் நல்லது.இந்த அரசியல்வாதிகளையும் சினிமாக்காரர்களையும் நோண்டி நொங்கு எடுத்துவிடுவான் . பொது மக்கள் முன்னேறிவிடுவார்கள்.

    • dandy - vienna,ஆஸ்திரியா

      ஒரு 5 வருடம் ராணுவ ஆட்சி வந்தால் போதும் மொத்த கோல்-மால் -புர குடும்பமும் களி தின்னும்

    • truth tofday - india,இந்தியா

      அது கூட வேண்டும் அங்கு போய் டீ மட்டும் அருந்தி சமயம் கழிக்காமல் அவர்கள் நம்மை விட 100 ஆண்டுகள் முன்னேறியுள்ளதை ஒத்துக்கொண்டு அவர்கள் முறையில் அவர்களைப்போல அவர்களிடம் கேட்டு ஆட்சி செய்தால் அவர்களின் சட்ட திட்டங்களை நாமும் நமது சட்ட திட்டங்களின் ஓட்டைகளை நீக்கி நல்ல சட்ட திட்டம் கொண்டுவந்தாலே போதும் இப்போது உள்ள மஜுரிட்டி இந்த parliament டோடல் வேஸ்ட் ஆகிவிட்டது இனி இது பூல் majority கட்சிகளுக்கு கிடைப்பது அரிது

  • Young Prince - Bangalore,இந்தியா

    புரிஞ்சிச்சி டா புரிஞ்சிரிச்சி ... அடுத்த 10 வருஷத்துக்கு சின்ன அம்மாவை உள்ளாற போடத்தான் பிளான் போடறீங்க

  • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

    2011 ஆம் ஆண்டிலிருந்தே விசாரணையை துவக்க வேண்டும்.அப்போதுதான் குட்கா ஊழல் மட்டுமல்ல, அனைத்து ஊழல்களும் வெளிச்சத்துக்கு வரும்.

  • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

    ஆட்டம் போட்டுக்கிட்டே ஆட்டையை போடுற கலையில் கௌரவ மருத்துவர் பட்டம் பெற்றவர்கள் தான் இந்த திராவிடால்ஸ்...

    • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

      ரபேல் ஊழலில் சிக்கி 2019 இல் சிறைக்கு போகும் மத்திய மங்குனி அமைச்சர்கள்.

  • kowsik Rishi - Chennai,இந்தியா

    தினமலர் உடனே இந்த செய்தியை தடை செய்யவேண்டும் மேடம் சசிகலா சிறையில் தண்டிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் அவருக்கு வெளியே நடக்கும் அரசியல் வேலைகள் தெரியாது உடனே இதை தடை செய்யவும்

    • இந்தியன் kumar - chennai,இந்தியா

      விதை போட்டது அவர் இன்று விருட்சமாய் இருக்கிறது.

    • மோகன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்

      சிறையில் இருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.. தண்டனையை அனுபவிக்கிறார் என்ற சொல்லாதீர்கள்... சிறையில் அவருக்கு ராஜ மரியாதையாமே.. அவர் எப்போதும்போல் ஷாப்பிங் சென்றுகொண்டுதான் இருக்கிறார்...

  • A.Navarajan - Coimbatore ,இந்தியா

    மாஸ்டர் பிளான். எல்லாப்பழியையும் சசி மீது போட்டு விட்டு மற்ற அனைவரும் தப்பிவிட்டு தொடர்ந்து ஆட்டையை போட முடிவு செய்து விட்டார்கள் என சந்தேகம் வருகிறது.

  • chandrasekar - THOOTHUKUDI,இந்தியா

    சசி குற்றவாளியா அல்லது பொறுப்பில் இருந்த முதல் அமைச்சரா ? அல்லது ஏனைய அமைச்சர்களா?

    • இந்தியன் kumar - chennai,இந்தியா

      அனைவருக்கும் பொறுப்பு உண்டு , குற்றம் செய்யா அமைச்சர்கள் யாரவது இருக்கிறார்களா என்ன ?

  • A.Robet - chennai,இந்தியா

    எல்லாவற்றிற்கும் சசிகலா எப்படி பொறுப்பாவார் சசிகலாவா முதலமைச்சர் இல்லையே ஜெயலலிதா தானே முதலமைச்சராய் இருந்தார் அவரது நிர்வாக திறமை இவ்வளவு தானோ அவர் எதோ பெரிய திறமை சாலி என்று பில்டப் கொடுத்தீர்களே அதெல்லாம் டுபாக்கூர் தானா

  • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

    வேலைக்காரி என்று சொன்ன நீங்கள்..இப்போது மட்டும் எப்படி சூத்திரதாரி என்கிறீர்கள்? எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் சகட்டுமேனிக்கு கேவலம் பேசுவது அருவருப்பானது. முடிந்தால் நேர்மையோடு அரசியல் பேசுங்கள். நம்புகின்ற அளவுக்கு சிலர் இருக்கலாம்..அவர்கள் அறியாமையில் ஊறிப்போனவர்கள். முகம் தெரியாத முட்டாள்கள் விமர்சிப்பார்கள். ஆட்சியை இழக்கவைத்துவிட்டு சிறையில் தள்ளிவிட்டு இப்படி மனம் போன போக்கில் செய்தி வெளியிடுவது கேவலமான செயலாகும். சசிகலாவை குறை சொல்வது பெண்ணினத்தை கீழாக சிந்திப்போரின் மனப்போக்கு அது.

    • raghavan - Srirangam, Trichy,இந்தியா

      ஆமாம்..சிறையில் இருந்து கொண்டே ஷாப்பிங் செல்லக்கூடிய வல்லமை படைத்தவரை இகழ்ந்து பேச கூடாது..

    • சிவ.இளங்கோவன் . - Kuwait ,குவைத்

      கூடிய சீக்கிரம் தினகரன் திகார் கரனாக வாழ வாழ்த்துக்கள்

    • dandy - vienna,ஆஸ்திரியா

      ஹி ஹி ஹி ஆகா வேலைக்காரி ..நவீன கண்ணகி என்று கூட விரைவில் சொல்வார்கள் பான் ரசிகர்கள் ஜெயலலிதா வேலைக்காரியை வைக்க வேண்டிய இடத்தில வைத்து இருந்தால் இன்றும் முதல் அமைச்சர்

  • ஓரி -

    இப்பயும் அந்த அப்பிரண்டிக "அம்மா ஆட்சி" என்று சொல்லி தான் நடத்திகிட்டு இருக்கானுங்க ! மைசூரு சுந்தரம், சிங்கை சேகரன், சிங்கப்பூர் ராமா எல்லோரும் வந்து மைக்கை புடிங்கப்பு ! வாங்க..

  • Kailash - Chennai,இந்தியா

    எதிர்பார்த்தது தான் சசியின் 4 வருட தண்டனையில் 2 வருடம் முடிய போகிறது அடுத்த இரண்டு வருடத்தில் திரும்பி வந்துட்டேன் என்று சொல்ல கூடாது அதனால் இந்த குட்கா வழக்கில் இவருக்கு மட்டும் தண்டனை கொடுத்து மற்றவர்களை அப்பாவிகளாக்கி இவரை உள்ளே இன்னுமும் சில ஆண்டுகள் தள்ளுவதற்கு பிளான் என்று சாமானியனுக்கு புரிகிறது ஆட்சியில் உள்ள யாரும் கைது செய்ய மாட்டார்கள் புலி வருது புலி வருது என்று மிரட்டி எடுபிடிக்களை வைத்து ஆட்சிபுரிவார்கள்.தமிழகத்தை பிடித்த பீடை 2019 மே மாதம் வரை இருக்கும் பிறகுதான் விமோசனம்...

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      அந்த புலி வருது கதைபோல தான் மல்லையாவை இந்தியா கொண்டுவருவதும்.

    • dandy - vienna,ஆஸ்திரியா

      ஆயா திரும்பி வந்தால் அபின் வியாபாரம் கூட செய்வாள்

  • Ramaa,Singapore -

    தியாகத்தின் திரு உருவம் சின்னம்மா வின். புகழை கெடுக்கவே இது மாதிரியான புனையப்பட்ட செய்திகள் வருகின்றன. நீதி மன்றத்தின் தவறான புரிதலினால் தான் சின்னம்மா உள்ளே இருக்கிறார். உண்மை விரைவில் தன்னாலே வெளிவரும்.. !

    • sivakumaran - Coimbatore

      குடகா 120 420 எல்லாத்தையும் ஒண்ணா போட்டுட்டியா இப்படி உளறியேப்பா

  • ManiS -

    Evvalavu kettalym thamizhanukku aeivu vara poradhu illa.... thirumba aduththu DMK Ku thaan vote poduvaan.... ADMK ke pottaalum aacharya pada mudiyaadhu.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இப்பேற்பட்ட கிரிமினலை அருகில் வைத்திருந்த ஜெவுக்கு என்ன தண்டனை தருவது

  • Shanu - Mumbai ,இந்தியா

    'குட்கா என்றால் என்ன?

    • ஓரி - ,

      குனிந்து காட்டு என்பதன் சுருக்கமே குட்கா என அழைக்கபடுகிறது.

    • கல்யாணராமன் S. - பெங்களூரு,இந்தியா

      @ஷானு, இப்போதைக்கு குட்கா அப்படீன்னா அதீத திருடர்கள் முன்னேற்ற கழக (அதிமுக) ஆட்கள் மேல தொங்கிட்டிருக்கற கத்தி...............

    • இந்தியன் kumar - chennai,இந்தியா

      நல்ல விளக்கம் ஓரி, அடித்த கொள்ளை எல்லாம் காட்டு என்பதன் விளக்கம்.

  • tamil - coonoor,இந்தியா

    ஒட்டுமொத்த அமைச்சரவை, அத்துணை பேரும் கூட்டுக்களவாணிகள் தான், இவர்களை முட்டுக்கொடுத்து காப்பாற்றி வரும் மத்திய அரசும் குற்றவாளி தான்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    சசி காசு சம்பாரிக்க எல்லா முறை கேடுகளையும் அரசு இயந்திரத்தை வைத்து செயது உள்ளார்...

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    லஞ்சத்திற்கும், நீர்நிலைகள் கபளீகரம் செய்ததற்கு மு க எப்பிடி காரணமோ அதே மாதிரி கெட்டது அனைத்துக்கும் ஏகபோக உரிமையாளர் சசி

    • Sudarsanr - Muscat,ஓமன்

      ரெண்டு பெரும் கூட்டு களவாணியாத்தான் இருந்து இருப்பாங்க... காரணம். ரெண்டு பக்கத்து ஊரு காரங்க.. சசி அப்பா பக்கா தி மு க காரர்.. நடராஜனும் கூட... சசி - நடராஜன் திருமண செஞ்சுவெச்சதே கட்டுமரம்தான்...

    • dandy - vienna,ஆஸ்திரியா

      ஆயா நடராஜனுக்கு second hand தான்

  • ருத்ரா -

    சிறைவாசம் தொடருமா மீணடும் மௌனவிரதம். கர்நாடக அமைச்சரின் ஆறுதல். குறுக்கு விசாரணை. புதிய சீரியல் part 2 Oh GOD.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    இரும்பு பெண்மணி/ ரெண்டு வாட்டி முதல்வர் / அறிவாளி என்றெல்லாம் கொண்டாடுபவர்களே... கூடவே இருந்து கொண்டு, ஒரு குடும்பம், தனி கவர்மென்ட்டே நடத்தியிருக்கிறது... அதுகூட தெரியாத டம்மி பீஸாக இருந்தவர் கையில் ஆட்சி யை குடுத்தவங்க, இப்பவும் அவர் வழியில் ஆட்சி நடத்தறதா சொல்றாங்க.. அதை நல்ல ஆட்சி என்று ம.இணை அமைச்சர் பொ.ரா.கி. வேற ஒருவாட்டி சொன்னார்

    • raghavan - Srirangam, Trichy,இந்தியா

      என்ன இருந்தாலும் மு.க குடும்பத்துக்கு முன்னால் இந்த குட்கா வெல்லாம் மண்டிதான் போடணும்..அவரு லெவெலே வேற.

    • dandy - vienna,ஆஸ்திரியா

      கோல்-மால் -புர குடும்பம் உலக அளவில் சாதனை செய்யும் பகுத்தறிவு கொண்டவர்கள்

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    இந்த அரசும் சசியும் ஊழல்வாதிகள் என்பதற்காக டுமீளன் ஒன்றும் நாளையே ஒரு மகாத்மாவுக்கு வாக்களிக்கப் போவதில்லை இன்னொரு திராவிஷனுக்குத் தான் வாய்ப்பு கொடுப்பான். விநாசகால விபரீத புத்திதான்/ .விவாதித்தே பலனில்லை . டுமீளன் திருந்தாத ஜென்மம் .என்னவோ மனசு கேட்காமல் எழுதுகிறேன்

    • Kumar - Chennai,இந்தியா

      ஜோதியில் சங்கமம் ஆகிவிடுங்களேன்

    • dandy - vienna,ஆஸ்திரியா

      டாஸ்மாக் நாட்டு தொமிழன் 3018 இல் கூட திருந்த மாடடான் ...

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    சின்னம்மாவின் மெகா ஆட்டங்களை வெளிக்கொணர்வதில் வெற்றி பெற்றால் எல்லோரும் வாயைப்பிளக்கும் அளவுக்கு பணம் அடித்து வைத்து இருப்பது ஒரு வேளை வெளியே வரலாம்...

  • K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா

    குட்கா ஊழலில் மட்டுமல்ல , தமிழகத்தை ஜெயலலிதாவின் ஆட்சியில் , ஜெயலலிதா பொம்மை முதல்வராகத்தான் இருந்துள்ளார். நிஜ முதல்வராக ஜெயலலிதாவின் பின்னால் இருந்து அவரை இயக்கி , உண்மையான முதல்வராக சசிகலா தான் செயல்பட்டுள்ளார்.

  • ராம.ராசு - கரூர்,இந்தியா

    ஆச்சரியமாக இருக்கிறது " 'குட்கா' முறைகேட்டுக்கு சூத்திரதாரியாக, சசிகலா இருந்திருக்கலாம்" என்று சொல்லுவது. ஆளும் கட்சியில் எந்த பதவியிலும் இல்லை, எந்த ஒரு அரசு நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை. ஆனால்.. மெத்தப்படித்த, உயர் பொறுப்பில் இருந்த IAS , IPS அதிகாரிகள் அவரின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இருந்துள்ளார்கள் என்றால் அந்த அதிகாரிகள் மொத்தமாக சுய நலமாக இருந்துள்ளார்கள். ஆனால் எந்தப் பதவியிலும் இல்லாத, திருமதி.சசிகலாவை முழுக்குற்றவாளியாக காட்டுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இன்னும் சொல்லப்போனால் இதற்க்கு முழு முதல் குற்றவாளியாக, அரசு நிர்வாகத்தில் குழறுபடிகளை கண்டுகொள்ளாமல் அல்லது கண்டுகொள்ள முடியாத திறமையில்லாதவராக இருந்த மறைந்த முன்னாள் முதல் அமைச்சரைத்தான் சொல்லவேண்டும். மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த அதிகாரிகள் தனது கடமையை முறையாகச் செய்யாமல், தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள, மேலும் பதவி உயர்வைப் பெறுவதற்காக, தெரிந்தே குற்றங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு இப்போது எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாத ஒரு பெண்ணை காட்டுவது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் செயலே. இதில் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தங்களது பொறுப்பை உணராமல் இருந்த உயர் அதிகாரிகளும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்த முன்னாள் முதல் அமைச்சரும்தான். அவர் மறைந்து விட்டதால் கண்டிப்பாக உயர் அதிகாரிகள்தான் பொறுப்பாக முடியும். நிர்வாக சட்ட திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் கடமையும் பொறுப்பும் இருக்கவேண்டிய அதிகாரிகள்... அரசியல் ஆளுமைக்கு கட்டுப்படுவது அவர்கள் வகித்த , வகிக்கும் பொறுப்புக்கு சரியானது அல்ல. அரசியல்வாதிகளின் இழுப்புக்கு போகாமல் தங்களது கடமைகளைச் செய்கின்ற IAS , IPS அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பொறுப்பில்லாத சுயநலமுள்ள அதிகாரிகலாளால் நாடு எந்த அளவிற்கு ஊழலால் ஊறிப்போய்விட்டது என்பதை இப்போதாவது உணரவேண்டும். கீழ் மட்ட அளவில் நடக்கின்ற, ஊழல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுகிறது. ஆனால் மிகத் தெளிவாகத் தெரிந்தும் உயர்மட்டத்தில் நடந்ததால் இன்னும் விசாரணை என்ற அளவிலேயே இருக்கிறது. நல்ல ஆட்சி. நல்ல நிர்வாகம். எதற்க்காக வாக்கு அளிக்கிறோம், சரியானவர்களைத் தெரிவு செய்கிறோமா என்ற சிந்தனை இல்லாத மக்களுக்கு இதுவும் வேண்டும்... இன்னமும் வேண்டும்... பணத்தைக் காட்டி வாக்குகளைப் பெறுபவர்கள்... அதை இன்னும் கூடுதலாக பெறுவதற்காகவே அரசியல் செய்கிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்.

    • கல்யாணராமன் S. - பெங்களூரு,இந்தியா

      @ராம. ராசு, பெரும்பாலானவை உண்மையான கருத்துக்கள்............ஒரே ஒரு இடத்தில் உங்களிடம் இருந்து நான் வேறுபடுகிறேன்............எந்த பொறுப்பிலும் இருந்திராத, இல்லாத சசிகலாவை மட்டும் எப்படி குற்றம் சாட்டமுடியும் என்று நீங்கள் கேட்பீர்களானால் அது உண்மை..........ஆனால் சசிகலாவுடன் மற்ற அரசு அதிகாரிகளும் குற்றவாளிகளே என்று நீங்கள் சொல்லும் பட்சத்தில் அது ஒப்புக்கொள்ளக்கூடியதே ..............1967ல் அதிகாரிகள் நேர்மையானவர்களாகவும், அரசியல் வாதிகள் பொறுக்கிகளாகவும் இருந்தனர்........காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, இப்போது அரசு என்றாலே, அதில் உள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஊழல்வாதியாகி விட்டார்கள்.. முன்னாள் முதல்வர் ஆட்டிவைக்கப்பட்டவர் என்பது அப்போதிருந்தே கண்கூடாக தெரிந்த ஒன்றே.............அதே போல் பணம் அடிக்கும் எந்த வாய்ப்பிலும் சின்னம்மா இல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்பது தெளிவு.................கேள்வி என்னவென்றால் முதல்வருக்கு அனுப்பப்பட்ட ஆவணங்கள் சின்னம்மா அறைக்கு சென்றது எப்படி?

    • AR - ,

      அதிமுக வேட்பாளர்களையே தேர்ந்தெடுத்து பட்டியலையும் சசியே வெளியிட்டதை இப்போதுள்ள அமைச்சர்களே ஒப்புக்கொள்கின்றனர். ஜெயா இறந்தபின்னும் கூட சசி காலில் அனைவரும்   விழுந்தனர். இதுபோதாதா அதிமுக அரசு யார் பிடியிலிருந்து என்பதைக்காட்ட?. பிளாக் மெயில் மூலம் மெத்தப்படித்த   ஜெயாவையே ஆட்டிவைத்தது சும்மாயில்லை. உங்கள் கருத்து சொல்வது?  ..சசிக்கு சொந்தசாதி ஆதரவுபோல வேறு யாருக்கும் இருந்ததில்லை. இப்போதுமில்லை.

    • dandy - vienna,ஆஸ்திரியா

      சிலருக்கு புத்தி மாத்திரம் அல்ல சூடு சுரணை கூட வராது ஒரு கட்டிடத்தில் ஆயாவை தாண்டி தான் முதல் அமைச்சருக்கு எல்லாம் சென்றன

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    இனி சசியைக் காப்பாற்ற காங் ஆதரவு நீதிமான்களும் கபில் சிபல் சிங்க்வி போன்றோரும் ஓடோடி வருவர். சக ஊழல்வாதியைக் காப்பாற்றி கூட்டணி வைக்க காங்கிரஸ் எப்போதுமே தயார் .சிறையிலேயே ஐந்து நட்சத்திர வசதி செய்து கொடுத்த புண்ணியவான்களாயிற்றே

  • Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா

    இந்த விவகாரத்தில் தொடர்புபட்டவர்கள் சிறுவர்கள் அல்ல. ஆகவே, பொய் கூறி தப்பிக்க அவர்கள் முயற்சிக்கலாம். ஆனால், சட்டம் சரியாகச் செயல்பட்டு குற்றவாளிகள் அனைவரையும் சிறையிலடைக்க வேண்டும்.

  • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை ஊழல் பெருகிவிட்டது பயங்கரவாதிகள் இருக்குகிறார்கள் என சொல்லிய அமித்ஷா மற்றும் பொன்னார் ஏன் அரசை கலைக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கவில்லை

    • rajan - kerala,இந்தியா

      கலைத்து விடலாம். ஆனால் அடுத்து இருப்பது அந்த உலக மகா கேடி குடும்ப கட்சி தமிழகத்தையே சாசனம் பண்ண தயாரா இருக்கே. எனவே மொத்த ஊழல்வாதிகளை விரைவில் ஒடுக்க வேண்டும். அப்போ தான் மக்களுக்கு விமோசனம் கிட்டும். எத்தினி வருஷத்து களை செடிகள் அதன் வித்துக்கள் இல்லாத இடம் எங்கே. அந்த சமாதிலே கூட இருக்குமே.

  • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

    ஆளும் கட்சி மீது ஊழல் புகார் மற்றும் சோதனைகள் ஆனால் மத்திய அரசின் சார்பில் ஏதேனும் நடவடிக்கை உண்டா

  • R.Nagarajan - CHENNAI,இந்தியா

    இதெற்கெல்லாம் சூத்திரதாரி ஜெயலலிதா இறந்து போய் விட்டார். அதனால் அவரது தோழியின் மீது பழி போட்டு டயர் நக்கி அடிமைகள் தப்பித்து கொள்ள பார்க்கிறார்கள். முதலில் குட்கா விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை கைது செய்து 'முறையான' விசாரணை செய்தால் பல உண்மைகள் வெளியே வரும். அப்போது இபி எஸ் -ஓ பிஸ் உட்பட ஜெயக்குமார் என்று மந்திரிகள் பட்டாளமே ஜெயிலுக்கு போக வேண்டி வரும்.

  • sudharshana - Aukland ,நியூ சிலாந்து

    அதானே,, பருப்பில்லாமல் கல்யாணமா... ..

    • ManiS - ,

      Biryani Ku edhukku paruppu? ...

  • VOICE - CHENNAI,இந்தியா

    உண்மையான சூத்திரதாரி ஜெயலலிதா இருக்க வாய்ப்பு உள்ளது . No 2 பிசினஸ் அனைத்தும் சசிகலா மற்றும் அவரது சொந்தங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அவரகள் அதை “திறம்பட” கையாளும் அமைச்சர்கள் மூலம் செயல்படுத்துவார்கள். எவரேனும் கமிஷன் இவர்களுக்கு தெரியாமல் அடித்து விட்டால் உடனே அமைச்சரவை மாற்றம் நடக்கும். ஜெயலலிதா தெரியாமல் அனைத்தும் நடக்க வாய்ப்பு இல்லை நடத்தவும் முடியாது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு மக்களுக்கு பணம் கொடுக்கவேண்டும் என்றல் சம்பாதிக்கவேண்டாமா ? மொத்தத்தில் பார்த்தால் தேர்தலுக்கு பணம் வாங்கி ஓட்டுப்போடும் தமிழகத்தை சேர்ந்த நமது மக்கள் தான் முதல் திருடர்கள் . மக்கள் எவ்வழியோ அவ்வழியில் தலைவர்கள் அவ்ளோதான்.

    • இந்தியன் kumar - chennai,இந்தியா

      சரியாக வாய்ஸ் கொடுத்துள்ளீர்கள் , மக்கள் மாறாதவரை மாற்றம் என்பது சாத்தியம் அல்ல

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    So, the case has now landed on Sasi Easy way to escape by the minister and the Police personnel The godown owners, or even CBI would have been 'instructed' to take a deviation in this journey

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    tamil naattin mudhalamaicharraaka vendum enra alavil peraasaippattu thirai maraivu velaikal anaithaiyum seydha thiramai konda sasiyai kurithu eppadi madhippidukiraarkal.?melum kaalam senra natarajn thane pinnaniyil irundhu ivarai iyakkiyadhu?

  • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

    போச்சு....,மன்னார்குடி பேர் வந்தாச்சா....நிறைய பலி விழும். டாகுமெண்ட்கள் தீ பற்றி எறியும். கடைசியில் எல்லாம் அடங் கி போகும். யாருகிட்ட மோதுரீங்க. கூண்டில் இருந்தாலும் சிங்கம்.....சிங்கம் தான்

    • dandy - vienna,ஆஸ்திரியா

      சாராயம் ..குட்கா ..விரைவில் அபின் வரும் ஆயா விடுதலை ஆனதும்

  • கைப்புள்ள - nj,இந்தியா

    நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேக்கும். நீ விதைத்த வினை எல்லாம் உனை அறுக்க காத்து இருக்கும். லெட்ஸ் கோ.

    • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

      யோவ்... கைப்புள்ள.... நீர் வேற ஏனய்யா உசுரை வாங்குறீர்.... எல்லா இடத்துலயும் இதே கமெண்ட் ஐப் போடுறீர்..... ஏற்கெனவே இதே கமெண்ட்டத்தான் விக்கு மண்டையன்ங்குற பேர்ல யாரோ சுரா கோபாலன் பதிவு பண்றாருன்னா..... நீருமா....

    • raghavan - Srirangam, Trichy,இந்தியா

      சீறும் பாம்பை நம்பலாம், சிரித்து மயக்கும் பெண்ணை நம்பாதேன்னு ஆட்டோ பின்னாலே எழுதி வைப்பாங்களே அந்த மாதிரி ஆயிடுச்சா?

  • கைப்புள்ள - nj,இந்தியா

    தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு கழகங்களும் நயா பைசாவுக்கு உபயோகம் இல்லாத கொள்ளைக்காரர்கள். அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கலாம், எதிலெல்லாம் கொள்ளை அடிக்கலாம் என்பது தான். இதுக்கெல்லாம் பா.ஜ.க வந்து ஒரு முடிவு கட்டினால் ஒழிய தமிழ்நாட்டில் இதெல்லாம் கண்டிப்பா சரி ஆகாது. இதெல்லாம் மக்களாக பார்த்து திருந்தி நல்ல ஒரு மாற்றம் வேண்டி பா.ஜ.க வுக்கு பெருவாரியான ஓட்டுக்கள் போடணும். அப்போதான் முடியும். இல்லேன்னா இப்படித்தான், சாராயம், மது, மாதுன்னு சீரழியுவோமே தவிர எந்நாளும் முன்னேற மாட்டோம்.

    • பச்சைதமிழன் - ,

      இது ஜெ சசி பெயரில் களங்கம் ஏற்படுத்துவதற்காக மழுக்க முழுக்க ஜோடிக்க பட்ட நடவடிக்கை கைபுள்ள கனவு எப்போதும் நிறைவெறாது

    • c.k.sundar rao - MYSORE,இந்தியா

      Mindset of people of Tamilnadu is they are ready to spoil themselves and their next generation but will not support a party which tries to cleanse the political tem in the country because only reason is party consists of aryan's culture,

  • ragunathan - chennai,இந்தியா

    எந்த முறைகேட்டிற்கும் குற்றம் சாட்ட முனையும்போது வசதியாக சசிகலா மேல் பழியை போடலாம். ஜெயலலிதாவின் பெயரை காப்பாற்றலாம் என்று நினைக்கும் மீடியாவை என்ன சொல்ல. மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். பழ karuppiah அனைத்து ஊழலுக்கும் ஜெயலலிதாவை காரணம் என்று வெளியே வந்தார்.

    • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

      வெளியே வந்து ஊழலே இல்லாத தி மு கவில் சேர்ந்தார் ஹா ஹா ஹா

    • Sudarsanr - Muscat,ஓமன்

      ரகுநாதன் அவர்களே... பழ கருப்பையா சொன்னால் அது வேத வாக்கா? a தி மு ka vil serum munnar kattumaratha பற்றி தாறு மாறாக குற்றம் சொன்னாரே அப்போ அதுவும் உண்மைன்னு ஆகுமே....

    • mindum vasantham - madurai,இந்தியா

      திமுக சந்தனம் மனம் மணக்கும் கட்சியப்பா , பிரச்னை என்னவெனில் பிஜேபி திமுக எதிராக ஒரு துரும்பும் கிள்ளாததே , மற்றும் ஆ ராஜா போன்றோர் விடுதலை , மாறனின் சுதந்திரம்

  • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    நிரந்திரமாக உள்ளே வைக்க திட்டம்.......சசிகலாவை

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    இப்பொழுது உச்ச பதவியில் உள்ள இருவருக்கும் இதில் தொடர்பு உண்டு. ஆனால் பிரச்சினையை திசை திருப்ப சிறையில் இருக்கும் சசிகலா மீது பழி போடுவதாகவேதான் தோன்றுகிறது. ஏனென்றால் சசிகலா இது போன்ற ஊழலை செய்யும் அளவுக்கு திறமைசாலி இல்லை. அவரின் (சசிகலாவின்) முன்னாள் அடிமைகள், இந்நாள் உச்ச பதவியில் இருக்கும் நன்றி கெட்ட கூட்டம் அவருக்கு உதவி செய்திருக்கும். (நான் சசிகலாவின் ஆதரவாளன் இல்லை. இருந்த போதும் அவரின் மூலம் பதவி அடைந்தவர்கள் நன்றி மறந்ததால் இதை குறிப்பிடுகிறேன்).

    • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

      என்னது சசி திறமைசாலியில்லையா? நீங்கதான் நம்பணும்

    • கல்யாணராமன் S. - பெங்களூரு,இந்தியா

      @மணி, சின்னம்மா ஒரு CEO மாதிரி.............. அவங்க டார்கெட் குடுத்துடுவாங்க.............. டார்கெட் மார்க்கெட்டையும் குடுத்துடுவாங்க ........டார்கெட் மார்க்கெட் எது? எங்கெங்கெல்லாம் நிறைய பணம் வருமோ அதுதான்.........................டார்கெட் குடுத்தப்புறம், மற்ற employees அதை செய்வாங்க......... வேலை சரியா செஞ்சவங்களுக்கு ப்ரோமோஷன், சம்பள () உயர்வு மற்றும் ஊக்கத் தொகை சரியா செய்யாதவர்களுக்கு பணி, மற்றும் ஐடா மாற்றம்............ சின்னம்மா ஒரு உண்மையான கார்பொரேட் CEO மாதிரிதான் வேலை செஞ்சுருக்காங்க..............

  • s t rajan - chennai,இந்தியா

    எவ்வளவு ஆதாரம் கொடுத்தாலும் நம்ப நீதிமன்றம் - போறாதுன்னு சொல்லி அரசியல் வியாதிகளை வெளியே விட்டுடும்.

  • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

    ஜுபிடர் வீனஸ் (குரு, சுக்ரன்) இணைவு செய்யும் வேலை

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    "புதிய கோணம்", ஒரு திகில், மரும, சமூக, அரசியல், அசிங்க சித்திரம்.. விரைவில் தமிழக அரசியல் களத்தில்.. குட்கா பாஸ்கர் உண்மையிலேயே கடவுளின் அவதாரம். ஜார்ஜ் தேவனின் இன்னொரு சீடன், ராஜேந்திரன் ஒரு நாயன்மாரின் அவதாரம் என்று நிரூபிக்கும் இதிகாச படைப்பு. பெரும் பொருட்செலவில் 400 கோடியையும் மிஞ்சும் பட்ஜெட்டில்.. "புதிய கோணம்"..

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    ஒரு பெண்ணை அதுவும் தமிழ் பெண்ணை சிறைக்கு அனுப்பிவிட்டு நாமெல்லாம் சந்தோசமா வெளியே இருக்கோம் என்ன சமூகமோ நம்ம சமூகம் ? இந்த பாவம் நம்மை சும்மா விடாது

    • nicolethomson - bengalooru,இந்தியா

      சுடிதார் போட்டதெல்லாம் பெண்ணா? அட பாவி அப்பா எங்கூரு சோளக்காட்டு பொம்மைக்கு கூட சுடிதார் போட்ருப்பாங்களே, அது காக்கைகளை மிரட்ட அல்லவே பயன்படுகிறது

    • c.k.sundar rao - MYSORE,இந்தியா

      Your arguments are sheer nonseness ,why bring tamil pride rather u are statement is disrepute to Tamil women folk .

    • கல்யாணராமன் S. - பெங்களூரு,இந்தியா

      சுந்தர் ராவ், அவர் வஞ்சப்புகழ்ச்சியணியிலே பேசறாரு என்பதை நினைவிருத்துங்கள்..............

  • Arasu - OOty,இந்தியா

    இதில் ஜெயா முதல் குற்றவாளி.... சசிகலா மறைக்காமல் ஜெயாக்கு சொல்லி இருந்தாலும் ..ஜெயா நடவடிக்கை எதும் எடுக்க மாட்டார்.....யாரையாவது பழி வாங்க வேண்டும் என்றால் ..ஜெயலலிதா உடனே பழி வாங்கிடுவார்....

  • கைப்புள்ள - nj,இந்தியா

    தி.மு.க வுக்கு எப்படி 2G, மற்றும் சேது சமுத்திர தூர் வாரும் திட்டம், சிங்கார சென்னை, செந்தமிழ் மாநாடு போன்றவை லட்சம் கோடிகள் கொள்ளை அடிக்க உபயோகப்பட்டதோ அதே போல அ.தி.மு.க வுக்கு மணல் அள்ளுதல், குவாரிகள், மண் கடத்தல், சாராய ஆலைகள் மற்றும் இது போன்ற சட்ட விரோத குட்கா பொருட்கள் பல லட்சம் கோடிகள் கொள்ளை அடிக்க உபயோகப்படுகிறது. இதற்கு எல்லாம் பலி ஆவது தமிழ் மக்கள் மட்டுமே. இதுதான் கழகங்கள் தமிழ்நாட்டுக்கு செய்யும் சேவை. இவங்க ரெண்டு பேரும் கொள்ளையோ கொள்ளை அடிப்பாங்க. அதனாலதான் பா.ஜ.க உள்ளே வருவதை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறார்கள் இவ்வளவு மென கேட்டு பா.ஜ.க மீது வெறுப்பை வளர்க்க என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள்.

    • c.k.sundar rao - MYSORE,இந்தியா

      100 percent TRUE.

    • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

      கழக கண்மணிகள் உங்க கருத்துக்கு மதிப்பு கொடுப்பதில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். கணினி எலியை புடிக்க தெரியாதவர்களுக்கு கூட அறிவாலயத்தில் எலியை எப்படி உபயோகிப்பது என்று பயிற்சி கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது ....சுடலை வேற புதுசா தலைவராயிருக்கிறார் புதுசு புதுசா நவீன தொழில் நுட்பங்களை கையாள முயற்சிக்கிறார் போலிருக்கு.

    • கல்யாணராமன் S. - பெங்களூரு,இந்தியா

      @கைப்புள்ளே, நீங்க கத்திக்கிட்டே கிடக்க வேண்டியது தான்.............. உங்களுடைய இந்த நியாயமான கருத்துக்கு நூறுக்கு மேல எதிர்மறை வோட்டு போட்டிருக்காங்க......... அவங்களுக்கு தேவையெல்லாம், கம்மி விலைக்கு சாராயம், ஓசி பிரியாணி, ஊழல் பணம், வேலை செய்யாம சம்பாதிக்கிரத்துக்கு என்னென்ன வசதி, வாய்ப்புகள் உண்டோ அது அத்தனையும் ...............நேர்மை போன்ற வார்த்தைகளை தமிழர்கள் அகராதியிலிருந்து எடுத்து ரொம்ப நாளாச்சு.........................இப்போ அவங்களுக்கு தெரிந்ததெல்லாம் (பொய்) மதசார்பின்மை, கருத்து சுதந்திரம் போன்றவைதான்................

    • Muhundan - Kumbakonam,இந்தியா

      ///இதுதான் கழகங்கள் தமிழ்நாட்டுக்கு செய்யும் சேவை. இவங்க ரெண்டு பேரும் கொள்ளையோ கொள்ளை அடிப்பாங்க/// சிறுது நாட்களுக்கு முன்...தமிழகத்தின் சிறந்த ஆட்சியாளராக ஈபிஎஸ் இருக்கிறார்....ஊழல் இல்லாத ஆட்சி செய்கிறார்... அதனால் மறுபடியும் அவர் முதல்வராக தமிழக மக்கள் ஆதரிக்க வேண்டுமென்று சொன்ன இதே கைப்புள்ள. ஓ அது வேற வாய்....

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    சூத்திரதாரியை மட்டும் சிறையில் போட்டுவிட்டு, மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை வைத்து கொண்டால் குட்கா தமிழகத்தில் குறைந்துவிடும் என்று தமிழக முதல்வர் குருமூர்த்தி நினைக்கிறாரா? ஒட்டுமொத்த அரசை கலைக்க வேண்டும். ராமன் ஆண்டாளும் சரி, ராவணன் ஆண்டாளும் சரி, மக்களிடம் சென்று ஊழல் செய்வதற்கு அனுமதி பெற்று வாருங்கள். அதுவரை இந்த அரசை பொது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    • Darmavan - Chennai,இந்தியா

      கலைத்தால் மறுபடியும் யார் வருவார்கள். இந்த புத்தி கெட்ட தமிழன் திருந்தினாலொழிய இதற்கு விடிவு இல்லை.

    • Sudarsanr - Muscat,ஓமன்

      அன்பு அவர்களே அவர்கள் விற்றால் நம் ஏன் வாங்க வேண்டும்.. நமக்கு புத்தி இல்லையா... kadayil எலி பாஷாணம் இருக்கிறது... அதை வாங்கி குடித்து விடுவோமா... இறப்பு வரும் என்றும் தெரியும்... இதுவும் நமது உடல் நலத்திற்கு தீங்கு என்று தெரிந்து அதை ஏன் வாங்கி குடிக்க வேண்டும் / மெல்ல வேண்டும்.... தவறு மக்கள், அரசியல் வியாதிகள், ஊழல் அதிகாரிகள் என்று அணைத்து இடத்திலும் உள்ளது.. அரசு அலுவலகங்களின் தன் கடமையை செய்ய கைக்கூலி கேட்கும் அலுவலர்கள், அடுத்தவரை ஏமாற்ற / விரைவில் தன்னுடைய வேலைய முடிக்க இவர்களுக்கு லஞ்சம் குடுக்கும் சமூகம்.. பின் இவரு நம் முன்னேற இயலும்... மற்ற மொழிகளை படிக்கச் விடுவதில்லை ... குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டினால் மட்டுமே இந்த வியாதிகள் நம் படிப்பை கெடுத்தார்கள்... (முழு பொறுப்பு - தி மு க) மக்கள் எப்போது தெளிவாக சிந்தித்து பேராசை படாமல் போதும் என்ற மனமே போன் செய்யும் மருந்து என்று நினைக்கிறானோ அன்றுதான் நம் மாநிலத்திற்கு விடிவுகாலம்...

    • dandy - vienna,ஆஸ்திரியா

      சிந்திப்பதை டாஸ்மாக் நாட்டு டொமிழர்கள் இழந்து பல மாமாங்கங்கள் ஆகி விடடன

  • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

    தமிழன் என்று சொல்லடா, எங்கே ஆட்டை போடலாமேயென்றே இரு.

    • வீர சொம்பு கேசரி - New Delhi,இந்தியா

      களவாணிகள் கிட்டேயே ஆட்டையை போடும் களவாணிகள்

  • நக்கல் -

    தினகரன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்லீபெர் செல்களில் முக்கியமானவர் இந்த விஜயபாஸ்கர் என்று சந்தேகப்படுகிறேன்.. ஜெயா அப்பொல்லோவில் இருந்தபோது கூடவே இருந்தவர் இவர்...

    • இந்தியன் kumar - chennai

      முற்றிலும் சரி விஜயபாஸ்கர் தினகரன் ஆள் , ஆர் கே நகரில் தினகரனுக்காக தேர்தல் வேலை பார்த்தவர் விஜயபாஸ்கர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement