Advertisement

கெஜ்ரிவாலை நேருக்கு நேராக சாடிய மல்யுத்த வீராங்கனை

புதுடில்லி: தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என முதல்வர் கெஜ்ரிவால் முன்னிலையில் வீராங்கனை ஓருவர் சீறினார்.


இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் மல்யுத்த பிரிவில் டில்லியை சேர்ந்த திவ்யா கக்ரன் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார். நேற்று டில்லியில் திவ்யா கக்ரன் உள்ளிட்ட வீரர் வீராங்கனைகளுக்கு அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.


ஆதரவு அளிக்கவில்லை

இந்த விழாவில் திவ்யா கக்ரன், கெஜ்ரிவால் முன்னிலையில்பேசியது, ”கடந்த கோல்டு டெஸ்டில் நான் தங்கப்பதக்கம் வென்றபோது நீங்கள் எனக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்தீர்கள், அதை ஏன் நிறைவேற்றவில்லை. எனது தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்கக்கூட இல்லை. இப்போது நீங்களே எங்களுக்கு பாராட்டு விழா நடத்துகிறீர்கள்”.
எங்களுக்கு தேவையான நேரத்தில் நீங்கள் எவ்வித ஆதரவும் அளிக்கவில்லை. சரியான நேரத்தில் உதவி செய்திருந்தால், தங்கப்பதக்கம் வென்றிருக்க முடியும்" என்று கூறினார்.இது குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பேசியது, இந்த அரசு செய்ய முயலும் அனைத்து பணிகளுக்கும் தடைகள் உண்டாக்கப்படுகிறது என்பதை பத்திரிகை மூலம் தெரிந்துக்கொள்ளவேண்டும். உங்களைப் போல் பல விளையாட்டு வீரர்கள் குறை சொல்லுகின்றனர்” . நாங்கள் உருவாக்கும் கொள்கைகள் மற்றும் நல திட்டங்கள் சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரிகளால் நிராகரிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாகவே எங்களால் பாராட்டு விழாவையாவது நடத்த முடிகிறது" என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (90)

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  அப்போ முதல்வர் பதவி எதற்கு..தெருவில் இருக்கும் டீ கடைக்கு நடந்து சென்று டீ குடிக்கவா....முடியல என்றால் ஒதுங்கிக்க வேண்டியதுதானே...

 • தாமரை - பழநி,இந்தியா

  உன்னாலேயே முடியவில்லை. அப்புறம் அடுத்தவர் மீது பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறாயே ...வெட்கமாயில்லையா உனக்கு? த்தூ.......

 • Ramachandran Madambakkam - Chennai,இந்தியா

  இந்திய தேசம் முழுவதிலும் உள்ள பத்திரிக்கைகளில் நான்கு முழு பக்க சுய விளம்பரங்களை கொடுப்பதில் நீங்கள் எந்த குறையும் வைக்கவில்லையே? நாட்டிற்கு நல்ல பெயரை உருவாக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு கஞ்சத்தனம்,

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  ஒரு பேச்சுக்கு நலத்திட்டங்களை தடுத்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம். போனில் பேசுவதற்கு கூட தடை விதித்தார்களா என்ன? என்ன ஒரு அயோக்கியத்தனம்?

 • Anand - chennai,இந்தியா

  கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்தை மேலும் தூண்டி கேடு விளைவிக்க நினைத்து அவ்வளவு தூரத்திலிருந்து வரும்போது மட்டும் யாரும் தடை உருவாக்கவில்லை. நாட்டிற்க்காக விளையாடும் வீராங்கனைக்கு தடையா? அந்த வீராங்கனை உன்னுடைய பதிலை பார்த்து உம்முகத்தில் காரி துப்பியிருக்க வேண்டும்.

 • Sivagiri - chennai,இந்தியா

  வசதியாக தன்னை நோக்கி வரும் அம்புகளை . . பிஜேபி பக்கம் திருப்பி விடும் எம்ப்டன் . . . கல்லூழிமங்கன் என்பதற்கு எடுத்துக்காட்டு யாரென்றால் அது கெஜ-வால்தான் என்பது பல வருடங்களாக நிரூபிக்கப் பட்டு வருகிறது . . .

 • nicolethomson - bengalooru,இந்தியா

  ஆட தெரியாத... என்றொரு சொல் வழக்கு உண்டு கேஜ்ரிவாலு

 • murugu - paris,பிரான்ஸ்

  நேருக்கு நேராக சொல்லியும் கஜ்ரிவாலின் நிதானமான விளக்கம் ,கஜ்ரிவாலின் அனுபவத்தின் ஆளுமையை கண்டு வியக்காமல் இருக்க முடிய வில்லை இதுவே பி ஜே பி யின் தமிழ் நாட்டு தலைவியாக இருந்தால் ?????

 • கைப்புள்ள - nj,இந்தியா

  பா.ஜ.க வை தவிர வேறு எந்த கட்சிக்காரன்கிட்ட சவுண்டு விட உங்கள்ள யாருக்காச்சும் தைரியம் இருக்கா? நாளைக்கே போயி திருட்டு தி.மு.க ஒழிக ன்னு கோஷம் போட்டுட்டு உயிரோட திரும்பி வர முடியுமா? சவால்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  பா.ஜ.க மட்டுமே மக்கள் எந்த நேரத்திலும் எதிர்த்து கேள்வி கேக்க கூடிய ஒரே கட்சி. வேறு எந்த கட்சியாக இருந்தாலும் ...

 • கைப்புள்ள - nj,இந்தியா

  வழக்கம் போல மோடி எதிரிகள் சும்மா போனாம்போக்கியாக சரத்தே இல்லாமல் சப்பை கட்டு காட்டுகிறார்கள் தவிர பா.ஜ.க வோ, பா.ஜ.க சார்பாகவோ பாயிண்டாக கேக்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்வதே இல்லை. சும்மா அப்புடியே தொங்குது பொங்குதுன்னு அடிச்சு விட்டுகிறது. நன்றாக பாயிண்டாக பேசினால் அந்த பக்கம் தலை வைத்தே படுப்பதில்லை. ஐயோ பாவம்.

 • hasan - tamilnadu,இந்தியா

  இதே கெஜ்ரிவாலுக்கு பதில் தமிழிசை இருந்திருந்தால் காட்டு கத்து கத்தி விழாவையே நாறடிச்சிருக்கும், தமிழிசை மட்டுமல்ல ஒட்டுமொத்த பா ஜ வில் உள்ள அணைத்து தலைவர்களும் அப்படிதான் செய்திருப்பார்கள் , அவர்கள் சித்தாந்தம்(rss ) அப்படி , கெஜ்ரிவால் செயல் பாராட்டத்தக்கது

 • Kaliyan Pillai - Chennai,இந்தியா

  அரசியல்வாதி என்றாலே பொய்யன் புளுகன் பிராடு என்பதை மீண்டும் மீதும் நிரூபிக்கிறார்கள். பாராட்டிவிழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து அவன் மூஞ்சியில் கரியைப்பூசி இருக்க வேண்டும்.

 • கோகுல்,மதுரை -

  புதுகோட்டை வீரர் லட்சமணன் கோவிந்தன் சமீபத்தில் நடந்த ஆசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்று பின்பு சிறிய பிழையின் காரணமாக அந்த பதக்கம் ரத்து செய்யப்பட்டது. அவருக்கும் நேற்று மத்திய அரசு கௌரவித்து 10 லட்சம் ரூபாய் வழங்கியது. சும்மா அஞ்சு பத்து லட்சம் கொடுப்பதற்கு மேல் மட்டம் அல்லது மத்திய அரசு தடை விதிக்கிறது என்பது ஏற்று கொள்ள முடியாது.

 • SUNA PAANA - Chennai,இந்தியா

  Arvind Kejriwal is bloody lier. Some time back he has thrown many charge sheets both on Arun Jaitely and Reliance Industries. When Jaitely filed defamation suite in the court, he realised and then made public apology for the fake charges. Like this only, he has come to power in Delhi and could not sustain it. He made lot of money when he was Assistant Commissioner of Income tax Delhi region. He was passing favorable orders to Sonai, Rahul & Priyanka Family. We all know about his true colours. For even not doing his personal daily routines, he will blame Modi and BJP. Absolute Idiot.

 • anand - Chennai,இந்தியா

  கவர்னர் அனுமதித்தால் தான் தொலைபேசியில் பதில் அளிப்பாரா கெஜ்ரிவால்?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தொலைபேசியை எடுக்கக்க்கூட கவர்னரின் அனுமதி பெற்ற பின்னர்தான் முடியுமாம்...

 • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

  இது கருத்து சுதந்திரம் எனும்பெயரில் வரம்பு மீறும் செயல். இது ஆதங்கத்தின் வெளிப்பாடாக நான் பார்க்கவில்லை .. இதுதான் இன்றைய தலைமுறை மத்தியில் காணப்படும் மனநிலை.. இன்றய இளைஞர்கள் இடையில் அமைப்பு சார்ந்த அரசியல் கட்சிகளின், நீதி துறை மற்றும் அரசு எந்திரம் இவற்றின் மீது பரவலாக வெறுப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அரசியலில் நாட்டம் இருந்தாலும் அவர்கள் அரசியல்ரீதியாகக் களம் இறங்குவதை விட, தெருவில் இறங்கிப் போராடுவதில் தான் கூடுதல் நாட்டம் கொள்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது..9% முதல் 17% வரையிலான 40 வயதுக்கு உட்பட்டவர்கள் தெருவில் இறங்கிப் போராடுவதிலும் லூயி சோபியா பாணியில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவதிலும் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அய்யாக்கண்ணு போல முறையாக பதியப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஜனநாயக முறையில் போராட அனுமதி கேட்பது மட்டுமல்ல அது மறுக்கப்படும் பொழுது நீதிமன்றத்தை அணுகுவதும் ( மெரினாவில் இடம் கேட்டு நீதிமன்றம் அணுகியது) போன்ற சட்டதிட்டங்களுக்கு உடன்பட்டு மக்களுக்குகாக பாடுபடுகிறார்கள்.. ஆனால் இன்றய இளைஞர்கள் கட்சி உறுப்பினர்களாகவோ, தொண்டர்களாகவோ இருப்பதில் நாட்டம் இல்லாதவர்களாகவும், தெருவில் இறங்கிப் போராடுவதிலும், சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவு செய்பவர்களாகவும் தான் அதிகமாகக் காணப்படுகின்றனர். மக்கள் ஆட்சி முறைதான் பெரும்பாலானவர்களால் விரும்பப்படுவதாக இருந்தாலும் கூட, வாக்களிப்பில் பங்குபெறும் இளைஞர்களின் எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கிறது. சென்னை வெள்ளத்தின் போது ஆளும்கட்சியின் மீது அத்தனை விமர்சனங்களையும் முகநூலிலும் இணையத்திலும் பதிவிட்டு அடுத்து வந்த பொது தேர்தலில் தங்களின் ஓட்டை பதியாமல் விட்ட முரண் அதேசமயம் தமிழக மக்களை பார்த்து காசு வாங்கி ஓட்டுப்போட்டன் எனும் குற்றஞ்சாட்டி தாங்களும் தமிழக மக்களில் ஒருவர் என்பதை ஏனோ வசதியாக மறந்து விடுகின்றனர்...உலகில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 2% மட்டும்தான் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.( 2016 அமெரிக்கத் தேர்தலில் வாக்களிக்காதவர்களில் 3-இல் 2 பங்கு வாக்காளர்கள் 50 வயதிற்கும் கீழே உள்ளோர்)...பொதுவாக அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் ஊழல்வாதிகள், பணத்தாசையும், பதவி வெறியும் பிடித்தவர்கள் அந்த அதிகார மோகத்திற்காக எதையும் செய்யத்துணித்தவர்கள் என்கிற கருத்து இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது. சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் களமிறங்கும் இளைஞர்களுக்கு அரசியல் கட்சிகளில் இடமில்லாமல் இருப்பதுதான் ( ஜல்லிக்கட்டு போன்ற அமைப்பு சாரா போராட்டம்) அவர்களை ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகின்றன. முறையான எல்ல வழிகளிலும் தங்களின் கோரிக்கையை கூறி அது நிறைவேறாமல் போகும்போதுதான் பெரும்பாலான போராட்டங்கள் நடிக்கின்றன... ஆனால் எந்த ஜனநாயகவழிமுறையிலும் அணுகாமல் தெருவில் இறங்கு உன் போராட்டம் வெற்றி எனும் எண்ணம் மேலோங்கி நிற்கிறதே ஏன்? அதுமட்டுமா, போராட வேண்டும் என களம் இறங்கியபின் அதில் ஏற்படும் சட்டபின்விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும் எனும் என்னும் ஏன் வரவில்லை..? சட்டம் மறுத்தும் சமுகத்துக்காக அதை எதிர்க்கும் பொது அதனால் சட்டப்பிரச்னைகளை சந்தித்தே வேண்டும் ..முன் சொன்னதில் இருக்கும் தைரியம் அதை தொடர்ந்து ஏற்படும் விளைவுகளை சந்திக்க துணிச்சல் இல்லாமல் போய்விடுகிறதே ஏன்? ஜனநாயக படுகொலை, கருது சுதந்திரம், ஆட்சியாளர்களின் அராஜகம் எனும் ஓலம் ஏன்? சுதந்திர போராட்ட வீரர்களை தியாகிகள் என்கிறோம். சுதந்திர போராட்டத்தில் வந்த அடக்குமுறையை சந்தோசமாக தாங்கிக்கொண்டு அதனால் ஏற்படும் விளைவுகளை தெரிந்தும் கூட புண் முரவலுடன் அதை ஏற்றுக்கொண்டு அஹிம்சாயின் வழி நின்றதால்... இன்றய போராட்டக்காரர்களை தியாகிகள் என வரலாறு அடையாளப்படுத்துமா? சம்பத்தில் கருது சுதந்திரம் எனும் பெயரில் பிரபலமான ஒரு பெண்ணை வீரத்தமிழச்சி, வேலுநாச்சியார் எனும் பரப்புரை அப்போ உண்மையா போராடும் பெண் போராளிகள்? திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு திரைப்பட கதாநாயக தன்மை கொண்ட ஒரு அரசியல்வாதியை நாம் தேடுகிறோம்... இதனை நினைத்து சிரிப்பதா அழுவதா?

 • venkat - chennai,இந்தியா

  சம்பந்தம் இல்லாத, பொருத்தம் இல்லாத இடங்களில் பிரதமர் மோடியின் ஊழலற்ற நல்ல வளர்ச்சி ஆட்சியை பற்றி தவறாக திரித்து பலர் உள்நோக்குடன் கருத்து இடுகின்றனர். இந்த தவறை சரி செய்ய மோடி தலைமை பி ஜெ பி என் டி ஏ ஆட்சியின் சில சாதனைகளை பதில் கருத்தாக வெளியிடுவது இந்திய முன்னேற்றத்தில் விருப்பம் உள்ள குடிமக்கள் கடமை பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய பொருளாதார GDP வளர்ச்சி விகிதம் 7 % மேல் உயர்ந்து உலகில் முதல் இடம் அடைந்தது. நிதி பற்றாக்குறை காங்கிரஸ் ஆட்சியில் 4.5 % இருந்ததை பி ஜெ பி அரசு 3 .5 % ஆக குறைத்துக் காட்டியது. பண வீக்கம் காங்கிரஸ் ஆட்சியில் 10 % மேல் இருந்ததை மோடி பி ஜெ பி அரசு 3 .3 % ஆக குறைத்து சாதித்தது. ஒரு பொருளின் மீது விதிக்கப் பட்ட 7 மத்திய மற்றும் 7 மாநில பன்முக கூட்டு வரிகளை ஒழித்து ஒரே வெளிப்படை வரியாக வளர்ந்த நாடுகளைப்போல் ஜி எஸ் டி வரி அமுல் செய்தது. மாநில எல்லைகளில், செக் போஸ்ட் லஞ்ச லாவண்யம், தேக்கம், நேர விரயம் இன்றி சரக்கு ஊர்திகள் விரைந்து செல்ல மின்னணு வழி கட்டண முறை (e-way bill) இந்தியா முழுதும் அறிமுகம். . மறைமுக வரி செலுத்துவோர் 30 லட்சத்திற்கு மேல் (50%) அதிகரிப்பு PMAY பிரதம மந்திரி அவாஸ் எல்லோருக்கும் வீடு திட்டத்தில் குறைந்த வட்டி, மானியம், மலிவு விலையில் ஒரு கோடிக்குமேல் வீடுகள் நாடு முழுதும் கட்டப் பட்டு வருகின்றன. பிரதமர் மோடியின் ஊக்குவிப்ப்பால் சூரிய மின் உற்பத்தி புதிய உருவாக்கத்தில் 2017 ல் உலகில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்தது. 28 ஏப்ரல் 2018 அன்று இந்தியாவில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் மின் வசதி இணைப்பு ஏற்படுத்தி கொடுத்தது இந்தியாவில் உள்ள 3.64 கோடி வீடுகளில் எல்லா விரும்பும் வீடுகளுக்கும் 2018 க்குள் மின் இணைப்பு தர சவுபாக்கியா திட்டம் 2017 ல் தொடங்கி Rs 16320 கோடி நிதி ஒதுக்கியது. காங்கிரஸ் அரசு 2013-14 ல் 1562 கி மீ ரயில் பாதை அமைத்ததை, மோடி அரசு 2017 -18 ல் 3200 கி மீ மேல் இரட்டிப்பு ஆக்கியது. மோடி அரசு 12 நகரங்களில் 1000 கி மீ மேல் மெட்ரோ ரயில் திட்டங்களை திட்டமிட்டும் நடைமுறைப் படுத்தியும் வருகிறது. மோடி அரசு தனியார் பங்களிப்புடன் PPP மாடல், நம்பகத்தன்மை ( viability) இடைவெளி உதவி, 50:50 பங்களிப்பு போன்ற திட்டங்கள் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் பண உதவி செய்கிறது. தமிழக அரசு இதை பயன் படுத்தி, டெல்லியில் 250 கி மீ மேல் மெட்ரோ ரயில் உள்ளது போல் தமிழக எல்லா நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் கொண்டு வர முனைய வேண்டும். காங்கிரஸ் அரசில் தினம் இருந்த 11 கி மீ தினசரி நெடுஞ்சாலை கட்டுமானம் மோடி அரசில் தினம் 22 கி மீ மேல் அதிகரித்தது. ரூ 7 லட்சம் கோடியில் பாரத் மாலா திட்டம், ரூ 8 லட்சம் கோடியில் சாகர் மாலா திட்டம் அறிமுகம். மோடி பி ஜெ பி அரசில் 12 பெரிய துறைமுகங்கள் 2016-17 ல் 106 கோடி டன் (காங்கிரஸ் 2012 -13 ல் 74 கோடி ) சரக்குகள் கையாண்டன. மோடியின் உதான் திட்டத்தால் 31 + 25 புதிய நகரங்கள் விமான வசதி, வருடத்திற்கு 13 லட்சம் புதிய விமான இருக்கைகள், 1 மணி நேரம் பறந்து செல்ல ரூ 2500 மட்டும் என இந்தியா உலகில் 3 வது பெரிய விமான போக்கு வரத்து ஆக உயர்ந்தது. பிரதமர் மோடி அவர்கள் பிரகதி திட்டத்தில் 25 வீடியோ காட்சி மூலம் 227 சமூக பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு திட்டங்களை Rs 10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு மேல் விரைவாக அனுமதித்தார். PFMS உருவாக்கி எல்லா அரசு திட்டங்கள், பணம் பெரும் அமைப்புகள், வங்கிகள், மாநில கருவூலங்கள் இணைத்து செலவினங்கள் பயன்பாடு நேரடியாக கண்காணித்து, தேவை நேரத்தில் மட்டும் பணம் கொடுத்து, திறமையாக செயல் படுத்தப் பட்டது. இந்திய மக்கள் தொகை 131 கோடியில் 117 கோடி பேருக்கு (89.2 % மேல்) ஆதார் அடையாள எண். நேரடி மானிய உதவி திட்டம் - 437 திட்டங்கள் செயலாக்கம். 2.75 போலி ரேஷன் கார்டு ஒழிப்பு - 3.85 கோடி போலி காஸ் இணைப்பு ஒழிப்பு. வீணான மக்கள் பணம் சேமிப்பு Rs 83,000 கோடி. மானியம் சரியான நபருக்கு சரியான நேரத்தில் சரியான அளவில் சென்று அடைகிறது. புதிய இந்திய ரூபே கார்டு பயன் எண்ணிக்கை அந்நிய விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளை முந்தியது. புதிய இந்திய பீம் யு பி ஐ இலக்கமுறை பரிவர்த்தனை எண்ணிக்கை வருடத்திற்கு 100 கோடிக்கு க்கு மேல் அதிகம். உலகில் எளிதில் தொழில் வணிகம் செய்யும் வரிசையில் இந்தியா 42 இடம் முன்னேறியது. காங்கிரஸ் அரசு தனது கடைசி இரண்டரை வருடங்களில் 350 கி மீ கண்ணாடி நூலிழை இணைப்பு நிறுவி 60 பஞ்சாயத்துகளை இணைத்ததை மோடி அரசு தூள் தூளாக்கி 248,000 கி மீ மேல் மூன்றரை ஆண்டுகளில் அமைத்து 1 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களை (3 லட்சம் கிராமங்களை) இன்டர்நெட் வசதி பெற வைத்து, டிஜிட்டல் இந்தியா உருவாக்கினார். ஜன் தன் வங்கி கணக்கு சேமிப்பு Rs 80,000 கோடியை தாண்டியது. உலகில் புது வங்கி கணக்குகளில் 55 % இந்தியாவில் துவக்கம். கணக்கு எண்ணிக்கை வயது வந்தோர் 2014 ல் 53 % 2018 ல் 80 % உயர்வு, நவம்பர் 9, 2016 பண மதிப்பு இழப்பிற்கு பின் 25.51 கோடியில் இருந்து ஏப்ரல் 2018 ல் 31.45 கோடியாக உயர்வு. 62,000 தபால் நிலையங்கள் மின்னணு பரிவர்த்தனை இணைப்பு. 187 தபால் பாஸ்போர்ட் கேந்த்ரா மூலம் 7 லட்சத்திற்கு மேல் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பாரிசீலிக்கப்பட்டன. புதிய தபால் பெமென்ட் பேங்க் மூலம் 1 .5 லட்சம் தபால் அலுவலகங்களில் கிராம மக்களுக்கு நேரடி மானியம் மற்றும் கிராம வங்கி வசதி. விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்க மண் சோதனை கார்டு, PMKSY, PMFBY, PKVY , E-NAM, தானிய கொள்முதல் சேமிப்பு திட்டம் செயல் படுத்தப் பட்டது. கிசான் இன்சூரன்ஸ் பெரும் விவசாயிகள் எண்ணிக்கை 18.5 % உயர்ந்து பயன் தொகை இரட்டிப்பாகியது. கடன் இல்லாதவர் இன்சூரன்ஸ் பெற்றது 6 மடங்கு அதிகமாகி 102 லட்சமாகியது. மண் சோதனை மூலம் சரியான உரங்கள், நீர் பாசன உபயோகத்தில் நவீன முறைகள் அறிமுகப் படுத்தப் படுகின்றன. உள்நாட்டு நதி நீர் போக்குவரத்து திட்டங்கள் 5 என்று இருந்ததை, மோடி அரசு 111 திட்டங்கள் உயர்த்தியது. இதன் மூலம் சரக்கு போக்கு வரத்து செலவு கி மீ க்கு சாலை மூலம் ரூ 1 .50 மற்றும் ரயில் மூலம் ரூ 1.00 இருப்பது நதி மூலம் 25 பைசாவாக குறையும். 3 நதிகளில் 2800 கி மீ மேல் சரக்கு படகு கப்பல் போக்கு வரத்து தற்போது நடக்கிறது. நதிகள் இணைப்பு கென் பத்வா திட்டம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் ஒத்துழைப்பு பொறுத்து முன்னேற்றம் காண முடியும். ரூ 5 .5 லட்சம் கோடியில் 30 திட்டங்கள் தென்னக நதிகள் இணைப்பு உட்பட பரிசீலிக்கப் படுகின்றன. பெட்ரோல் டீசல் விலை ஏற்றம், அதிகரிக்கும் இறக்குமதி, அந்நிய செலாவணி வீணாகுதல், தடுக்க இந்தியாவில் எல்லா ஊர்திகளையும், மின் இயக்கத்தில் கொண்டு வர திட்டம், EESL , FAME , பாட்டரி மாற்றும் திட்டங்கள் அறிமுகம். பெட்ரோலிய பொருள் இறக்குமதி விலையேற்றத்தை தடுக்க, மெத்தனால் உற்பத்தி பெருக்க, பெட்ரோலில் 15 % உபயோகிக்க மாற்று ஏறி பொருள் கொள்கை அறிமுகம். ஊரக சுகாதாரம் 70 வருட காங்கிரஸ் ஆட்சியின் 39 % இருந்ததை மோடி அரசு மூன்றே வருடத்தில் 6 .2 கோடி வீடுகளில் கழிப்பிடம் கட்டி, 11 மாநிலம் 32000 கிராமங்கள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாதாக்கி சுகாதாரம் 79 % ஆக உயர்த்தி சாதித்தது. அறிமுக வருமான வரி விகிதம் 5 % உலகிலேயே மிகக் குறைவு. ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களை மாவட்ட மருத்துவ மனைகளோடு மின்னணு தொடர்பு ஏற்படுத்துகிறது. ஆதார் மூலம் பணமின்றி மோடி கேர் திட்டம் 50 கோடி இந்திய குடிமக்களுக்கு Rs 5 லட்சம் மருத்துவ காப்பீடு அளிக்கிறது. மதரசா பள்ளிகளில் கணிதம் விஞ்ஞானம் பாடங்கள் அறிமுகம். முஸ்லீம் பெண்கள் படிக்க பண உதவி. மும்முறை தலாக் ஒழிப்பு. இஸ்ரோ ராக்கெட் தொழில் நுட்ப வல்லமையை உலகில் முதன்மையாகக்க மோடி 25 % அதிக திட்ட பண உதவி அளித்து 100 செயற்கைக்கோள்களுக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே அதி வேகமுடன் கூடிய பிரமோஸ் ஏவுகணையை இந்திய டிஆர்டிஓ, ரஷ்யா தொழில் நுட்பம், 70 % தனியார் பாகங்களுடன் உருவாக்கியது இந்தியாவில் தயாரிக்கப் பட்ட தேஜாஸ் போர் ரக விமானம் நமது விமானப் படையில் சேர்க்கப் பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்தில் முப்படைகளுக்கு தேவையான கருவிகள் இந்தியாவில் தயாரிப்பு ஊக்குவிக்கப் படுகிறது. இறக்குமதியும் ஊழலும் ஒழிக்கப் படுகிறது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையைச் சேர்ந்த, சர்வதேச வளர்ச்சி மையம் - அடுத்த, 10 ஆண்டுகளில், உலக அளவில் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறும் நாடுகளின் பட்டியலில், இந்தியா(7.9%) முதலிடம். பலதரப்பட்ட துறைகளில் முதலீடு உள்நாட்டு உற்பத்தி மூலம், . ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் ஏற்றுமதி அதிகரித்து, வேலைவாய்ப்பு பெருகும்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  செய்தியின் தலைப்பில் கூடவே "நிஜ நிலை விளக்கம் அளித்த கேஜ்ரிவால்" என்றும் சேர்த்தே போட்டிருக்கலாம். மிகத் தெளிவான அழகான நிஜமான விளக்கம். டெல்லி அரசின் கைகளை ஆணவ அராஜக அதிகாரத்தால் கட்டிப் போட்டிருக்கும் பிஜேபி யின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. இந்த பாராட்டுவிழாவே நீதிமன்றம் தலையிட்டதால் தான் நடத்த முடிந்தது என்றும் சொன்னார். அதற்கு அந்த வீராங்கனை என்ன சொன்னாராம்? மத்தியில் ஆளும் பிஜேபி யை நேருக்கு நேராக வேண்டாம் ட்விட்டர் அல்லது முகநூல் மூலமாகவாவது இந்த வீராங்கனை சாடுவாரா? முடியுமா?

 • Loganathan Balakrishnan - Salem,இந்தியா

  இங்க கருத்து போடுபவர்கள் எல்லாம் இங்க நடந்த சம்பவத்தையும் ஒப்புவிடுகிறார்கள் இதற்கும் அதற்கும் வித்தியாசம் உள்ளது தன் உரிமையை நேரடியாக கேட்பதும் ஒருவர் ஒழிக என்று பொது இடத்தில சத்தம் போடுவதும் ஒன்று அல்ல.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  பா.ஜ.க வாக இருப்பதால் மட்டுமே இவ்வளவு தூரம் நீங்கள் வெறுப்பில் கழுவி ஊத்தினாலும் தமிழிசை அவர்கள் இதுவரை ஒரு கொச்சை சொல் சொன்னதில்லை. எவ்வளவு கேவலமாக பேசினாலும் பொறுமையின் எல்லைக்கே போனாலும் பா.ஜ.க வினர் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். இதே கெரிரிவால் ஒருத்தனை போட்டு அடித்து கொலை கேசில் போக வேண்டிய நிலைமை வந்தது. சுடாலின் பற்றி சொல்லவே வேண்டாம். தி.மு.க பத்தி எல்லாம் நெனச்சாலே கொன்னு போடுவானுக, அ.தி.மு.க கஞ்சா கேசு போட்டு சைலென்ட்டா கில் பண்ணிடுவாங்க. ஆமை கரி அண்ணனை தொட போனதுக்கே உழுந்திச்சு பாரு போலீஸ்காரனுக்கு அடி. அப்புறம் இருக்கவே இருக்கு மரம் வெட்டி குறுப்பு. அவங்க பொழப்பே வெட்டி போடுறதுதான். அப்புறம் இண்டு இடுசு எல்லாமே ரவுடித்தனம். இதுல எங்க இருந்து வந்திச்சு பா.ஜ.க மேல பழி? பொய் பொய் பொய். எப்படியாச்சும் பொய்யை பரப்பி பா.ஜ.க வராமல் தடுக்கணும். அதுதான் உங்க குறிக்கோள்.

 • பிசெபியை வெறுப்போர் சங்கம் - ஒட்டுமொத்த இந்தியா,இந்தியா

  அந்த வீராங்கனை சாட வேண்டியது கேசரிவாளுடன் அரசியல் செய்து அவரை நிம்மதியாக ஆட்சி செய்ய விடாமல் தடுமாற வைக்கும் மத்திய பிசெபி ஆட்சியைத்தான். பிசெபி ஒட்டுமொத்த இந்தியாவின் சாபக்கேடு.

 • SUNDAR - chennai,இந்தியா

  நொண்டி சாக்கு - வாக்குறுதி கொடுத்து விட்டு பின் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை அப்படி இப்படி என்று அடுத்தவன் மேல் பழி போடுவது இயலாமை . கேஜரிவால் வாய் பந்தல் போடும் ஆசாமி.

 • tamil - coonoor,இந்தியா

  தமிழ்நாடாக இருந்திருந்தால் அந்த வீராங்கனை இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பார், அரவிந்த் கெஜ்ரிவால் தமிழிசை போல நடந்துகொள்ளவில்லை, இது தான் பண்பாடு

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  வாக்குரிதி கெஜ்ரிவால் வாயால் கொடுத்தது அதை கூட்டத்தில் பெருமைக்காக அறிவித்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் போனது அவருடைய தவறு இதில் இவர் மத்திய பாஜக அரசை குறைகூறுவது இவரின் பொறுப்பின்மையை காட்டுகிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மத்திய அரசின் உதவியை கோரியிருக்கலாம் ..தன் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்திலிருந்து கொடுக்க முயன்றிருக்கலாம் அதுசரி இந்த பெண்ணின் தொலைபே‌சி அழைப்புக்களை புறக்கணித்ததேன். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ?

 • Lodakku Paandi - Lodakkanenthal,இந்தியா

  அருமையாகச்சொன்னீர் ரகுராமன் வெங்கட்.

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  இதற்குப் பெயர்தான் அரசியல் நாகரிகம், இதுதான் தலைவனின் பண்பாடு. இப்படித்தான் பொது இடங்களில் ஒரு அரசியல்வாதி நடக்க வேண்டும். இதே கெஜ்ரிவால் தமிழிசை போல பாஜக தலைவர்கள் இருந்திருந்தால் இந்நேரம் அந்த வீராங்கனை சிறையில் இருந்திருப்பார். அவர் மீது பல வழக்குகள் பாய்ந்திருக்கும். அப்பெண்ணைப்பற்றி அருவருப்பான அவதூறுகளை பாஜகவினர் பரப்பி இருப்பார்கள். சு சாமி போன்றவர்கள் அந்தப்பெண் ஒரு தீவிரவாதி என புலம்பியிருப்பர். இந்த கேவலங்கள் எல்லாம் நடக்காமல் ஒரு முதல்வர் சாதாரண குடிமகளின் குற்றச்சாட்டுக்கு பொறுமையாக பதில் சொல்லியுள்ளார். அந்தப்பெண் பாஜக ஆதரவாளராக்கூட இருக்கலாம். பரவாயில்லை. கெஜ்ரிவால் மக்களின் பேரன்பு பெற்ற முதல்வர் என மதிக்கப்படுகிறார். பொறுமை, எளிமை, நேர்மை, மக்கள் எளிதில் அணுக வல்லவர் போன்ற பல நற்குணங்களால் பாஜக தலைவர்களுக்கு நேர் எதிரானவர் கேஜ்ரிவால். இவரைப்பார்த்தாவது தமிழிசை போன்ற பொது இடங்களில் வீண் அலப்பறை தந்து அசிங்கப்படும் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  நல்லாட்சி என்றால் பிஜேபி க்கு பிடிக்காது . தொந்தரவு கொடுப்பார்கள் . இதுலயும் அப்படிதான் 56 இன்ச் மார்பழகன் , 70 வயது வாலிபர் ஏழைத்தாயின் மகன் ஆட்டம் ஆடிவிட்டார், அதனால் இந்த பழி கெஜ்ரி மீதே.

 • Kounder Bell - Kodambakkam

  சோனியாவையும் ராகுலையும் அனுதினமும் எவ்வளவு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக பாசக கட்சியினர் விமர்சித்து வருகின்றனர் அவர்கள் அதை கண்ணியமாக எதிர்கொண்டு வருகின்றனர் எனக்கு தெரிந்து ஒரு கண்ணியமான பாசக தலைவரையோ கட்சித்தொண்டரையோ காட்டுங்கள்

 • Kounder Bell - Kodambakkam

  கேள்வி கேட்ட வீராங்கனையின் தைரியத்தையும் அதற்கு பொறுமையாக பதிலளித்த கெச்ரிவாலையும் பாராட்டியே ஆகவேண்டும் ஆரோக்கியமான சனநாயகத்திற்கு இது நல்லது நேற்றைக்கு நடந்த ஒரு சம்பவம் ஒரு கட்சித்தலைவர் அவர் எந்த அமைச்சரோ கிடையாது அவர் கூறுகிறார் பாராளுமன்ற எதிர்கட்சிதலைவரைப் பார்த்து கேள்வி கேட்க உரிமையில்லையாம் ஏனென்றால் இது சர்வாதிகார ஆட்சியாம்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இப்பிடியெல்லாம் நொந்து கொள்ளக்கூடாது... வீராங்கனையின் கேள்விக்கு நேரடி பதில் எங்கே...?

 • Kounder Bell - Kodambakkam

  கெச்ரிவால் படித்தவர் பண்புள்ளவர் அவர் மீது வைக்கப்பட்ட எத்தனையோ விமர்சனங்களையும் பொய் கேசுகளையும் தாங்கிக்கொண்டு போராடுகிறார் இவர் மட்டுமே ஊழல் பாசக காங்கிரசு கட்சிகளுக்கு மாற்றாகும் மக்களே சிந்தியுங்கள்

 • K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா

  தொலைபேசி அழைப்பைக்கூட ஏற்கவில்லை என்பது, என்ன பதில் சொல்லுவது என்ற மனக்குறையாக இருக்கலாம். டெல்லியில் கேஜரிவால் அரசை பி ஜெ பி அரசு செயல்பட விடாது தடுத்துக்கொண்டு இருக்கின்றது. கேஜரிவாளால் எதையும் செய்யமுடியாத நிலையில் உள்ளது. எனவே தான் அவரால் ஒரு தொலைபேசி அழைப்புக்கு கூட பதில் அளிக்கமுடியாதநிலை . அத்தகைய சூழ்நிலையை பொதுமக்கள் மத்தியிலே கூறிவிட்டார். ஜனநாயக விரோத பி ஜெ பி / ஆர் எஸ் எஸ் அரசை கண்டிப்பதற்கு மாறாக , ஆம் ஆத்மீ அரசை குறைகூறுவது கண்டிக்கத்தக்க செயலாகும்.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  இது தான் இந்தியா இது தான் ஜனநாயகம்... ஒரு முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் துணிச்சலாக நேருக்கு நேராக தனது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் தெரிவித்த வீராங்கனை திவ்யா கக்ரன் அவர்களுக்கும் இவர்க்கு பதில் அளித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருவருமே பாராட்டுக்குரியவர்கள்.. இங்கே தமிழகத்தில் இதே போல முன்பு ஒரு சமயம் அன்றய முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் நடிகர் அஜித் பேசியது மற்றும் சமீபத்தில் விமானத்தில் சாதாரண நோட்டாவிடம் தோற்ற கட்சி தலைவருக்கு குரல் கொடுத்த ஒரு சகோதரிக்கு நடந்தது அவர்கள் எப்படி அலைக்கழிக்கபட்டார்கள் என்பதையும் பார்க்கவேணும்.... இதே வீராங்கனை ஒருவேளை முதல்வர் யோகிக்கு முன்பு இப்படி பேசி இருந்தால் என்ன நடந்து இருக்கும்.... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாராக இருந்தாலும் சரி மக்களுக்கு கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள்... இந்த வீராங்கனை போல அனைவர்க்கும் ஆட்சியாளர்களின் குறை நிறைகளை நேருக்கு நேராக பேச துணிச்சல் பெறவேணும்.. வாழ்க ஜனநாயகம்...

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  மேடையிலேயே தைரியமாக இந்த முதல்வரை விமரிசிக்க முடிகிறது.. ஆனால், உண்மையை சொன்னால் நோட்டா கட்சி தலைவிகளுக்கு பின்புலத்தை விசாரிக்க சொல்லும் அளவுக்கு கோபம் வருகிறது.

 • Indhuindian - Chennai,இந்தியா

  வாய் சொல்லில் வீரரடி

 • Princey - Edison,யூ.எஸ்.ஏ

  தொலைபேசி அழைப்பை கூட ஏற்கக்கூடாதென மத்திய அரசு இவர் வாயை பூட்டி வைத்துவிட்டது. என்ன செய்ய. புளுகுவதற்கும் ஒரு எல்லை இல்லையா?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கம்மிகளின் கொள்கையே கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் low hanging fruit என்றால் வேகமாக வந்து பறிப்பார்கள்... ஆனால் பாவம் இந்த விளையாட்டு வீராங்கனையிடம் மாட்டிக்கொண்டார் கேஜ்ரிவால்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement