Advertisement

இந்தாண்டில் சாலை விபத்துக்களில் இறந்தவர்கள் 130 பேர்!டூவீலரில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் அதிகம்

மதுரை;மதுரை நகரில் இந்தாண்டு சாலை விபத்துக்களில் 100 ஆண்கள் உட்பட 130 பேர் பலியாகி உள்ளனர். இதில் டூவீலரில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் அதிகம்.
கவனக்குறைவு, அதிவேகம், போதையில் வாகனம் ஓட்டுதல், மோசமான ரோடு போன்ற காரணங்களால் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. விதிமீறினால் விதி முடியும் என்று தெரிந்தும் வாகன ஓட்டிகள் வேகமாக சென்று விபத்தை சந்திக்கின்றனர்.

ஆண்டுதோறும் மதுரை நகரில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், போக்குவரத்து குற்றப்பிரிவு துணைகமிஷனர் அருண் பாலகோபாலன் ஆகியோர் வேக கட்டுப்பாடு உள்ளிட்ட சில நடவடிக்கைகளை எடுத்தனர்.
இதன்மூலம் விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டில் ஆகஸ்ட் வரை 130 பேர் சாலை
விபத்துக்களில் பலியாகியுள்ளனர்.
இதில் 45 - 55 வயதுள்ளவர்கள் அதிகம். 40 பேர் இறந்துள்ளனர். அடுத்ததாக 35 - 45 வயதுள்ளவர்கள் 31 பேர், 55 வயதிற்கு மேலானவர்கள் 29 பேர், 25 - 35 வயதுள்ளவர்கள் 13 பேர், 18 - 25 வயதுள்ளவர்கள் 11 பேர், 18 வயதிற்குட்பட்டவர்கள் 6 பேர் இறந்துள்ளனர்.

விபத்தை பொறுத்தவரை டூவீலர் ஓட்டி இறந்தவர்கள் அதிகம். 58 பேர் இறந்துள்ளனர். டூவீலர் பின்னால் உட்கார்ந்து கீழே விழுந்து இறந்தவர்கள் 15 பேர். நடந்து சென்றவர்கள் 41 பேர், காரில் பயணித்தவர்களில் 2 பேர், ஆட்டோவில் பயணித்தவர்களில் 4 பேர் இறந்துள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் விபத்தும், உயிரிழப்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான விபத்துகள் கவனக்குறைவால் ஏற்படுகின்றன. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,' என்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement