Advertisement

திருச்சி ரயில்வே கோட்டப் பகுதிகளில்.பராமரிப்பு!.. ரயில் சேவைகள் மாற்றியமைப்பு

விருத்தாசலம்: திருச்சி ரயில்வே கோட்ட ரயில்பாதையின் பல பகுதிகளில் இன்ஜினியரிங் பணிகள் நடப்பதால், ரயில் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி - தஞ்சாவூர் பயணிகள் ரயில்கள் வரும் 8, 9, 22, 29ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன.

திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்கள் வரும் 8 ம் தேதி முதல் 12ம் தேதி வரை கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்படுகின்றன.திருநெல்வேலி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்கள் 6ம் தேதி (நேற்று) முதல் 30ம் தேதி வரை, திருச்சி - தஞ்சாவூர் இடையே ரத்து செய்யப்படுகின்றன.

திருச்சி - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (எண்: 16234) ஆலக்குடி - தஞ்சாவூர் பாதையில் இயக்கப்பட்டு, 60 நிமிடம் தாமதமாக மயிலாடுதுறை சென்றடையும்.
மயிலாடுதுறை - கோயம்புத்தார் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர் - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்கள் ஆலக்குடி - தஞ்சாவூர் இடையே 20 நிமிடம், 6.9.2018 முதல் 30ம் தேதி வரை ரெகுலேட் செய்யப்படும்.

சென்னை எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் வரும் 29, 30, 1.10.2018 ஆகிய மூன்று நாட்கள் விருத்தாசலத்தில் ரெகுலேட் செய்யப்பட்டு, 10 நிமிடம் திருச்சிக்கு தாமதமாக சென்றடையும்.
திருச்சி - நாகூர் பயணிகள் ரயில்கள் வரும் 8 ம் தேதி முதல் 20 வரை 10 - 15 நிமிடங்கள் வரை திருவாரூரில் ரெகுலேட் செய்யப்படும்.

சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் குருவாயூர் எக்ஸ்பிரஸ் 6ம் தேதி செந்துறை - அரியலுார் இடையே 45 நிமிடம் ரெகுலேட் செய்யப்பட்டு, 60 நிமிடம் திருச்சிக்கு தாமதமாக சென்றடையும்.
நாகர்கோவில் - சத்ரபதி சிவாஜி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ், குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிஸ், வரும் 6 ம் தேதி, 15 நிமிடம், செந்துறை - அரியலுாரில் ரெகுலேட் செய்யப்பட்டு, 15 நிமிடம் தாமதமாக விழுப்புரம் சென்றைடையும்.

காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்கள் காரைக்காலிலிருந்து 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை பகல் 12:40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1:30 மணிக்கு புறப்படும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement