Advertisement

மாநில கால்பந்து அணிக்கு பாராட்டு

மதுரை, தேசிய கால்பந்து போட்டியில் ஜூனியர் பெண்கள் பிரிவில் கோப்பை வென்ற தமிழ்நாடு அணியினருக்கு மதுரை கால்பந்து
சங்கம் சார்பில்பாராட்டு விழா நடந்தது.
தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். செயலாளர் சீனிமொய்தீன்முன்னிலை வகித்தார். தமிழக அணி கோவாவில் நடந்த இறுதி போட்டியில் மணிப்பூர் அணியை 4 - 1 என்ற கோலில் வென்று சாம்பியன் கோப்பையை வென்றது. 2008
ஆண்டிற்கு பின்இந்த வெற்றி கிடைத்துள்ளது.அணியின் தலைவர் சீனிமொய்தீன். பயிற்சியாளர் கோகிலா. 20 பேர் கொண்ட அணியில் மதுரையை சேர்ந்த சவுமியா,
இலக்கியா, ஐஸ்வர்யா, காவியா,
மின்னொளியாள், பிரியதர்ஷினி பங்கேற்றுள்ளனர். இவர்களில் இந்திய அணியில் விளையாடுவதற்கு ஐஸ்வர்யா, சவுமியா தேர்வு பெற்றுள்ளனர். பாராட்டு விழாவில் அனைத்து வீரர்களுக்கும் தலா 5,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. துணை தலைவர்கள் சுப்பிரமணியன், சடாச்சரம், நமசிவாயம், ஆனந்தம்,உதவி செயலாளர் ரமேஷ்பாபு
பங்கேற்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement