Advertisement

உற்சாகமாக கொண்டாடப்பட்ட ஆசிரியர் தினம்

மதுரை, மதுரையில் பள்ளி,
கல்லுாரிகளில் ஆசிரியர் தின விழாக்கள் உற்சாகமாக கொண்டாடப்பட்டன. ஆசிரியர்களை கொண்டாடும் வகையில் கலை நிகழ்ச்சிகள்
மற்றும் பரிசுகள் வழங்கி மாணவர்கள்
கவுரப்படுத்தினர்.
மதுரை
அருப்புக்கோட்டை ரோடு
கிருஷ்ணம்மாள்
ராமசுப்பையர் பள்ளியில் முதல்வர் சாந்தி தலைமையில் விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் வாழ்த்து தெரிவித்து இனிப்பு
மற்றும் பரிசு வழங்கி
கவுரவித்தனர்.
மதுரை காமராஜ்
பல்கலையில் தமிழியற்புலத்தில் புலத் தலைவர் ராமராஜபாண்டியன்
தலைமையில் நடந்தது. ஆய்வு மாணவர்
விஜயராஜன் வரவேற்றார். மாணவர்கள் லலிதா,
பாண்டியராஜன்,
மருதபூரணி, பூப்பாண்டி, செல்வா, கிருஷ்ணவேணி பேசினர். தமிழியல் துறைத் தலைவர் சத்தியமூர்த்தி, ஒப்பிலக்கியத் துறை தலைவர் கருப்ப
தேவன், பேராசிரியர்கள் பெருங்குடி அமுதம் மெட்ரிக் பள்ளியில்
தாளாளர் ஜெயவீர
பாண்டியன் தலைமை வகித்தார். முதல்வர்
ஜெயசீலா பேசினார். ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர். விரகனுார் கே.எல்.என்., வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் செயலாளர் ராதா
கிருஷ்ணன் தலைமை வகித்தார். முதல்வர் வேணி வரவேற்றார்.
ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன. மாணவர்கள் பரிசு
வழங்கினர். நிர்வாக
அதிகாரி ராஜபிரபு நன்றி கூறினார்.
திருப்பாலை அரசு
உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியை சோலை தலைமையில் விழா நடந்தது. ஆசிரியைகள் கீதா, ஆதிலட்சுமி, சுசீலா, உஷாராணி,
சுகுமாரி ஆகியோர்
பங்கேற்றனர். ஆசிரியை தமிழரசி நன்றி கூறினார்.
நாகனாகுளம் அரசு
உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியர்
அதிராமசுப்பு தலைமை வகித்தார். இன்னர் வீல் கிளப் சார்பில் நாகனாகுளம் கண்மாயை மாணவர்கள் துாய்மைப்படுத்தினர். கிளப்
நிர்வாகிகள் ஸ்ரீதேவி, கமலா, ஆசிரியர்கள்
சேதுலிங்கம், மைனாவதி உட்பட பலர்
பங்கேற்றனர். பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளிக்குடி அரசு மேல்நிலை பள்ளியில் தலைமையாசிரியை கலைச்செல்வி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியை ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். ஆசிரியைகள் திருப்பதி, பிரேமானந்தி, சித்ராதேவி உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்கள் மற்றும் பி.எட்., பயிற்சி மாணவிகள் பங்கேற்றனர்.
வடபழஞ்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவி பாக்யலட்சுமி
வரவேற்றார். தலைமையாசிரியர் பிச்சைமணி தலைமை வகித்தார்.
ஆசிரியைகள் உமா
மகேஸ்வரி, சத்யா பேசினர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவி காவ்யா நன்றி கூறினார்.
திருமங்கலம்
ஆலம்பட்டி அன்னை பாத்திமா கல்லுாரியில் தாளாளர் ஷா தலைமையில் ஆசிரியர் சங்கரலிங்கம் வரவேற்றார். வக்கீல் சங்க தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். வேளாண் இணை செயலாளர் கருணாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் ராஜேஷ்வரி, துணை முதல்வர் தபசு கண்ணன் பங்கேற்றனர். 18 ஓய்வு பெற்ற
ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜபூபதி தலைமை வகிக்க, உதவி தலைமை ஆசிரியர் பத்மாவதி முன்னிலை வகித்தார். தமிழாசிரியை வெங்கடேஷ்வரி தொகுத்து வழங்கினார். மாணவிகள் பங்கேற்ற பேச்சு போட்டிகள் நடந்தன.
திருப்பரங்குன்றம்
திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைவர் சரவணன் தலைமை வகிக்க, செயலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இயக்குநர் நடன குருநாதன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் அர்ச்சுனன் பேசினார். தமிழாசிரியர் சரவணன் தொகுத்து வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருப்பரங்குன்றம் ஜோதி நடுநிலைப்பள்ளியில் செயலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தலைமை ஆசிரியர் சித்ரா, ஆசிரியர்கள் துர்கா, வெங்கிட்ராஜ், சாந்தி, மனோன்மணி, பாக்கியலட்சுமி பங்கேற்றனர்.
மேலுார்
மேலுார் செட்டியார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்பமய அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார். சதுரங்க போட்டியில் மாணவர்களை வெற்றி பெறச் செய்த ஆசிரியர் செந்தில்குமாருக்கு, சமூக சேவகர் ரஞ்சிதா குனியா பரிசு வழங்கினார்.
கொட்டாம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சித்ராெஹலன், மில்டன் பள்ளியில் தாளாளர் ரவிச்சந்திரன், ஆர்.வி., பள்ளியில் தாளாளர் விஜயலட்சுமி, ஜாஸ் பள்ளியில் தாளாளர் ஷ்யாம் தலைமையில் விழா நடந்தது.
எழுமலை
மல்லப்புரம் திருவள்ளுவர் மகளிர் கல்வியியல் கல்லூரி விழாவில் மாணவி ஹேமமாலினி வரவேற்றார். முதல்வர் கருப்பசாமி, நிறுவனர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் ராமராஜ், சுப்பிரமணி, பெருமாள், சென்னகிருஷ்ணன், லோகநாதன், செல்வராஜ், நிர்வாக அலுவலர் சந்திரன், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் செல்வக்குமாரி, பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சுப்பாராஜன், மெட்ரிக் பள்ளி முதல்வர் செல்வக்குமார் பங்கேற்றனர். மாணவி
நந்தினி நன்றி கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement