Advertisement

ரூ.56 ஆயிரம் அபேஸ் மர்ம நபர்களுக்கு வலை

கள்ளக்குறிச்சி:வங்கியில், நகை அடகு வைத்து எடுத்துச் சென்ற 56 ஆயிரம் ரூபாயை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த நின்னையூரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முத்துவேல்,33; இவர், நேற்று முன்தினம் தனது தந்தை சீனுவாசனுடன் தியாகதுருகம் வங்கியில் மூன்றரை சவரன் நகையை அடகு வைத்து 56 ஆயிரம் ரூபாய் பெற்றார். பணத்தை பையில் வைத்துக் கொண்டு இருவரும், பஸ் ஏறி நின்னையூர் கிராமத்திற்கு வந்து இறங்கினர். அங்கு, பணப்பையை சைக்கிளில் மாட்டிவிட்டு, அருகில் இருந்த கடைக்கு சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்தபோது பணப்பையை காணவில்லை. இதுகுறித்த புாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement