Advertisement

'நேர்மறையான கல்வி குறித்த கண்ணோட்டம்' புதுச்சேரி பல்கலையில் புத்தகம் வெளியீடு

புதுச்சேரி:புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், 'நேர்மறையான கல்வி மற்றும் குழந்தைகள் மேம்பாடு - - ஒரு சர்வதேச கண்ணோட்டம்' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.

பள்ளி கல்வியியல், அதன் அடிப்படைத் தன்மை, முக்கியத்துவம், வளர்ச்சி, பள்ளி நிர்வாகத்தின் பொறுப்புணர்ச்சிகள், பள்ளி சூழல் ஆகிய அம்சங்கள் குறித்து, புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் சிபிநாத் தேப், இப்புத்தகத்தில் தொகுத்துள்ளார்.
பல்கலை வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த நுாலை வெளியிட்டு, துணைவேந்தர் குர்மீத்சிங் பேசியதாவது:
பணிப்பொறுப்புகளை சரியாக செய்யாத ஆசிரியர்கள் மற்றும் போதுமான ஆசிரியர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் அரசு பள்ளிகளின் வளர்ச்சி, தனியார் பள்ளிகளைவிட குறைவாகக் காணப்படுகிறது.
எனவே, திறமையான ஆசிரியர்களை நியமித்து, குறைபாடுகளை உடனடியாக சீரமைக்க வேண்டியது, அரசின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.
மேலும், பள்ளியின் முதல்வர், வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையை கண்காணிக்கவும் அதன் பின்னூட்டத்தை அறியவும் ஒரு குழுவை அமைத்து, வகுப்பறை கல்வியை முறைப்படுத்துதல் குறித்தும் இப்புத்தகத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement