Advertisement

'பெட்ரோல், டீசல் மீது கலால் வரி குறையாது'

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை, புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், அவற்றின் மீதான கலால் வரியை குறைக்கும் வாய்ப்பு இல்லை என, மத்திய அரசு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டில்லியில் நேற்று, பெட்ரோல், லிட்டருக்கு, 79.31 ரூபாயாகவும்; டீசல், லிட்டருக்கு, 71.34 ரூபாயாகவும் விற்கப்பட்டது.


இந்நிலையில், மூத்த அரசு அதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது: அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தற்போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 71.54 ரூபாயாக உள்ளது. இதனால், ஏற்றுமதி செலவினங்கள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரித்துள்ளன.


ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை. இவற்றின் மீதான கலால் வரியை குறைத்தால், அது, நடப்பு கணக்கு பற்றாக்குறையை பெரியளவில் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (23)

 • Gopi - Chennai,இந்தியா

  எதிர்பாராததை அரசாங்கம் எதிர்பார்க்கவேண்டிய தருணம். வரி கட்டமைப்பில் கச்சா எண்ணெய் மற்றும் சாராயத்தில் வரும் பணத்தை கொண்டு குடும்பம் நடத்தலாம் என்ற மனநிலையை மத்திய மாநில அரசாங்கங்கள் விடுத்து, நாட்டில் அதிகப்படியான ஜெட்ரோபா (இயற்கை டீசல்) உற்பத்தி மற்றும் மாற்று எரிபொருளில் கவனம் செலுத்தவேண்டும். கரும்பு விவசாயத்தில் வரும் மொலாசஸ் கொண்டு வரும் எத்தில் அல்கஹால் போன்ற வற்றை கலந்து விற்பனை செய்து விலைவாசி ஏற்றத்தை குறைக்க வழிவகை செய்யவேண்டும்.

 • கார்த்திக் சுப்பிரமணி - Coimbatore,இந்தியா

  உலகம் முழுக்க பெட்ரோல் விலை கூடிக்கிட்டுதான் இருக்கு ... டாலர் விலையும் அப்படித்தானே. பெருளாதாரமும் தெரியாது.. ஒரு புண்ணாக்கும் புரியாது.. அவுன்னா மோடியை எதிர்க்க கிளம்பிடுவானுக.. அறிவை பயன் படுத்துங்க.. உலக நிகழ்வை பாருங்கள். தேவைன்னா நடந்து போக வேண்டியதானே???

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அரூராங்... வரிகளை அதிகரித்த போதும் உலக வங்கியிடம் பீஜேபீ அரசு கடன் வாங்காமல் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் 9.35 பில்லியன் டாலர்களை - ரிபீட் - 9.35 பில்லியன் டாலர்களை கடனாக பீஜேபீ அரசு வாங்கி யிருக்கிறது. கூகிளில் பார்க்க. நன்றி

 • R Sanjay - Chennai,இந்தியா

  அந்த மத்திய அரசு மூத்த அதிகாரியின் பேரை வெளியிடுவதற்கு கூட வக்கில்லாத மத்திய அரசாங்கம் இது.

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  "BJP condemns the continuous increase in price of petrol and diesel. This is absolutely unaccep. Government's contention that it is due to hike in global prices is unfair and untrue. How much will this government loot the people," party spokesperson Prakash Javadekar said...bjp 2013 செப் இல் கூவியது.. மேலும் He compared this additional burden on the people to "Jizya tax" which was levied by the Mughals on non-Muslims....இப்போது என்ன சொல்லி இவர்களை வசை பாடலாம்...

 • matheen - chennai,இந்தியா

  எங்களுக்கு ராமர் கோவில் மட்டும் தான் வேண்டும்... பஜனை பாடிக்குட்டு ஜாலியா இருப்போம்... இந்தியா வல்லரசு ஆயிடும்...இப்படிக்கு பிஜேபி சொம்பு தூக்கி...

 • DINAKARAN T S - CHENN,இந்தியா

  அதிகாரிகள் அரசை பற்றி கவலைபடுகிறார்கள். மக்களை பற்றி.....

 • Anbarasan Kandasamy - muscat,ஓமன்

  பெட்ரோல் விலையை குறைப்பதாக காங்கிரஸ் அல்லது 03 வது கூட்டணி தேர்தல் வாக்குறுதி அளிக்குமா. அவ்வாறு வாக்குறுதி அளித்தாலும் நிறை வேற்றுமா. அந்த வாக்குறுதி தான் 2019 தேர்தலில் முக்கிய அங்கம் வகிக்கும்.

 • கஞ்சிக்கு சிஞ்கி அடிப்பவன் - coimbatore,இந்தியா

  அரசியல் வியாதிகளுக்கு உழைத்து சாப்பிட கற்றுத்தர வேண்டும். தன் குடும்பம் பிள்ளைகள் சாப்பிடும் உணவு உழைப்பில் வாங்கின உணவாக இருக்க வேண்டும் என்ற ஒழுக்கம் பயில வேண்டும். தவறான வழியிலோ அல்லது மக்கள் பணத்திலோ தானும், தன் குடும்பமும், பிள்ளைகளும், குழந்தைகளும் சாப்பிட்டால் அவர்களுக்கு .... சாப்பிடுவதை போல உணர வேண்டும். அப்போதுதான் எல்லாம் நியமாக நடக்கும். எல்லாம் oc என்றால் அவர்களுக்கு உணர்வே இருக்காது தான்.

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  உலகத்திலேயே பெட்ரோலுக்கு 60 % வரி விதிக்கின்ற ஒரே தேசம் இந்தியா தான், இதன் மூலம் ஆண்டுக்கு கிடைக்கும் 2 .7 லட்சம் கோடி வரி வருவாய் எங்கே போகிறது, GST வரியும் அதிகரித்துள்ளது, வங்கியில் மக்களின் சேமிப்பிற்கும் கொடுக்கும் வட்டியும் குறைப்பு, மக்கள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு, டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சி, ஊழலற்ற ஆட்சி என்று சொல்லி மக்களுக்கு எதையும் செய்யாமல் மாறாக மக்களிடம் பணம் பிடிங்குகிறது இந்த அரசு, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது போல் கச்சா எண்ணெய் விலை 130 டாலருக்கு விற்றால் பெட்ரோல் விலையை ரூ 152 மேல் விற்பார்கள் போல. கச்சா எண்ணெய் விலை 130 டாலர் இருந்த போதும் பெட்ரோல் விலையை வெறும் 56 ரூபாய்க்கு விற்று இதை வீட குறைந்த வரி வருவாயை ஈட்டிய காங்கிரஸ் ஆட்சி மக்களுக்கு எந்த சிரமமும் கொடுக்கவில்லை உண்மையிலேயே அவர்களின் ஆட்சி இந்த ஆட்சிக்கு எவ்வளவோ மேல்,.............

 • Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா

  2019 தேர்தலில் உங்களுக்கு சங்கு.

 • Jeba Kumar - tirunelveli,இந்தியா

  மோடி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் 40 ரூபாய்க்கு வந்துரும் சொல்லி ஓட்டு போட்டாங்க......... பேராசை பெரு நஷ்டம் என்பது இப்போது மக்களுக்கு தெளிவாக புரியும்,

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  இதுவரை எந்த அரசும் ஒரு புராடக்ட்டின் மேல் கிடைக்கும் வரி வருவாயை மட்டுமே நம்பி ஆட்சி செய்யலை. அந்த கேவலமான ரெகார்ட் இந்த அரசு செஞ்சிருக்கு.... இது கள்ளு குடிச்ச குரங்கு மாதிரி... அடுத்த ஆட்சியாளரும் ஆட்டம் போட வழிவகுத்தது போல.... இதையே தமிழ் நாட்டில் சாராய வருமானம் மூலம் செய்த போது பகோடாஸ் என்னமா ஃபீலிங் உட்டாய்ங்க... (அட அவிங்க மொத்த ஆளுங்க ஓட்டு போட்டால் கூட ஒரு சமஉ வர முடியுமாங்கிறது வேற விஷயம்....)

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  வரியைக் குறைத்தால் பட்ஜெட் பற்றாக்குறைவரும். மன்மோகனின் மு முதலாளி உலகவங்கியிடம் கடன் வாங்கவேண்டியிருக்கும் . அதற்கு வட்டி கட்டவேண்டியிருக்கும் . அதனாலதான் அவர் வரியைக்குறைக்கச்சொல்கிறார்.

  • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

   பாஜக அரசு சாகரமாலா திட்டத்திற்கு 33 லட்சம் கோடி உலகமகா யூத ஜியோனிஸ்ட் பணமுதலைகளால் முதலீடு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட தெற்காசிய வளர்ச்சி வங்கியிலிருந்து கடன் வாங்கியதே அதற்கும் வட்டி கட்டி தான் ஆகா வேண்டும், இல்லையென்றால் நாட்டின் வளங்களை அந்நிய கார்ப்பரேட்டுகள் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும், ஆகா ஒருவரை மட்டும் குறை சொல்லி எதையும் நியாய படுத்த வேண்டாம் இரண்டுமே மக்களின் தலையை அடமானம் வைத்து கடன் வாங்கும் அரசுகள் தான்............

 • Tamil beggar - madurai,இந்தியா

  இது ஒரு நல்ல திட்டம் ஏழைகள் இல்லாத இந்தியா உருவாகும், ஏனென்றால் எல்லோரும் செத்துவிடுவோம் செல்வந்தர்கள் மட்டும் வாழ்வர். பாரத் மாதாகீ ஜே

  • Kailash - Chennai,இந்தியா

   இப்படி ஜால்ரா அடித்து வாழ்வதற்கு நீ ...

  • Yezdik Damo - Ch2Ch,இந்தியா

   ( comment you have mentioned removed)

  • Muhundan - Kumbakonam,இந்தியா

   //இப்படி ஜால்ரா அடித்து வாழ்வதற்கு நீ ......// Kailash ...எழுதாமல் விடுபட்டதை பூர்த்திசெய்யவும். மக்களை வதைத்து பிழியும் இந்த அரசும் அல்லக்கைகளும் தோற்று ஓடப்போவது உறுதி. மக்களின் வெறுப்பு மிக அதிகமாக உள்ளது.

  • Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   நீ செத்தால் கூட நஷ்டமில்லை என்று சொல்கிற அரசாங்கமும் அரசாங்க அனு பாதிகள் உள்ள நாட்டில் வாழ்ந்து இருக்கிறோம்

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  கலால் வரி க்கு பதிலா கலாம் வரின்னு போட்டு இருந்தா மக்கள் எந்தவித முணுமுணுப்பும் இல்லாம சந்தோசமா பெட்ரோல் போட்டுட்டு போயிட்டே இருந்திருப்பாங்க

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "அம்பானிக்கு நஷ்டம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமாக இருக்கிறது. எனவே பெட்ரோல், டீசல் மீது கலால் வரி குறையாது".

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  கவலை வேண்டாம். குஜராத் தேர்தலுக்கு முன், எப்படி ரெஸ்டாரெண்ட் GST வரியை குறைத்தார்களோ, அதே போன்று, வரும் லோக் சபா தேர்தலுக்கு முன் பெட்ரோல் விலையை அறுபது ரூபாயாக மோடி கண்டிப்பாக குறைப்பார். ஒரு வேளை மீண்டும் ஜெயித்தால், ஜெயித்த பிறகு, பெட்ரோல் விலையை 150 ரூபாய்க்கு உயர்த்தி மக்களுக்கு ஷாக் கொடுப்பார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement