Advertisement

கர்நாடக முனிசிபல் தேர்தலிலும் பா.ஜ., தேறவில்லை! குமாரசாமிக்கு நெருக்கடி

பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலில் கோட்டை விட்ட பா.ஜ., முனிசிபல் தேர்தலிலும் தேறவில்லை. இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சி நடத்தும் முதல்வர் குமாரசாமி பதவிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக பா.ஜ., உருவெடுத்தது.


ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 80 தொகுதிகளிலும், முன்னாள் முதல்வரான குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும் வென்றன. தேர்தலுக்குப் பின் குமாரசாமியின் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தந்தது. ஆனால் தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்கும்படி பா.ஜ.,வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


பல்வேறு சட்ட பிரச்னைகளுக்கு இடையில் பா.ஜ.,வின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். போதிய ஆதரவு இல்லாததால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் அடுத்த நாளே பதவி விலகினார்.தற்போது, ம.ஜ.த., மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தாலும் கர்நாடகாவில் தினமும் ஒரு அரசியல் குழப்பம் நடந்து வருகிறது.


காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வென்றதால் முதல்வர் பதவியை தங்களுக்கு தர வேண்டுமென முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா
வலியுறுத்தி வருகிறார். மற்றொரு பக்கம் தன் ஆட்சியைக் கவிழ்க்க சிலர் சதி செய்வதாக முதல்வர் குமாரசாமியும் கூறி வருகிறார். இந்த அரசியல் குழப்பங்களுக்கு இடையே கர்நாடகாவில், 'முனிசிபல்' எனப்படும் நகராட்சி தேர்தல் ஆக., 31ல் நடந்தது.


இதில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., தனித்து போட்டியிட்டன. தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்து நிர்வாகம் செய்யவும் திட்டமிட்டன. அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாகவும், தற்போதுள்ள ஆட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை நிரூபிக்கும் களமாகவும் இந்த தேர்தல் கருதப்பட்டது.


மொத்தமுள்ள 2,662 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் நேற்று இரவு நிலவரப்படி காங்கிரஸ், 982 இடங்களில் வென்றுள்ளது. பா.ஜ., 929 இடங்களிலும், ம.ஜ.த., 375 இடங்களிலும் வென்றன. மற்ற இடங்களில் சுயேச்சை மற்றும் பிற கட்சிகள் வென்றன. காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., இணைந்து 1,357 இடங்களைப் பிடித்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை இருந்த போதும் சட்டசபை தேர்தலில் அதைப் பயன் படுத்த பா.ஜ., தவறியது.


தற்போது அரசியல் குழப்பம் நிலவும் நிலையில் முனிசிபல் தேர்தலிலும் பா.ஜ., தேறவில்லை. ''வழக்கமாக நகர்ப் பகுதிகளில் பா.ஜ., தான் அதிக இடங்களில் வெற்றி பெறும். இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்பதையே காட்டுகிறது,'' என முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.


''இந்தத் தேர்தல் முடிவுகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம்,'' என பா.ஜ., மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கூறியுள்ளார். ஆனால், 'மிகப் பெரிய வாய்ப்பை பா.ஜ., தவறவிட்டது; இது, அந்தக் கட்சிக்கு ஏற்பட்ட சறுக்கலே' என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


கடந்த, 2013ம் ஆண்டில் 4,976 இடங்களுக்கு நடந்த முனிசிபல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 1,960 இடங்களில் வென்றது. பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலா 905 இடங்களில் வென்றன. சட்டசபை தேர்தலைப் போல தற்போது முனிசிபல் தேர்தலிலும் காங்கிரஸ் தயவுடனே, நகராட்சிகளை நிர்வகிக்க வேண்டிய நிலையில் ம.ஜ.த., உள்ளது.


ஏற்கனவே முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர்கள் குறி வைத்துள்ளனர். தற்போதைய தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் கட்சியின் கை மேலும் ஓங்கியுள்ளது. அதனால் எந்த நேரத்திலும் தன் பதவிக்கு ஆபத்து வரலாம் என்ற நெருக்கடியுடனே முதல்வர் குமாரசாமி ஆட்சி நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிட் வீசி தாக்குதல்; காங்., வேட்பாளர் காயம்: மர்ம நபர் ஆசிட் வீசியதில் தும்கூரு நகராட்சியில் வார்டு எண் 16ல் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இனாயதுல்லா கான் உள்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த வார்டுக்கான தேர்தல் முடிவு நேற்று காலை அறிவிக்கப்பட்டது. இனாயதுல்லா கான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கட்சியினருடன் அவர் சாலைகளில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒருவர்கையில் எடுத்து வந்த பாட்டிலில் இருந்த திரவத்தை இனாயதுல்லா கான் மீது வீசியுள்ளார். இதில் கான் மற்றும் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. 'வீரியம் குறைந்த ஆசிட் வீசப்பட்டுள்ளது. அதனால் பெரும் அசம்பா விதம் தடுக்கப்பட்டுள்ளது. ஆசிட் வீசி தப்பியோடிய நபரை தேடி வருகிறோம்' என போலீசார் தெரிவித்தனர்.

காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. -குமாரசாமி, முதல்வர்

இந்தத் தேர்தல் முடிவுகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம். -எடியூரப்பா, பா.ஜ., மாநிலத் தலைவர்
Advertisement
 

வாசகர் கருத்து (47 + 17)

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    நான் ஒருபோதும் ஆரியன் திராவிடன் என்று எழுதியதே இல்லைTamil Selvan - Chennai, தவறாக சொல்கிறார். பீஜேபீ வாசகர்கள் தாம் எல்லாவற்றையும் இன ரீதியாக பார்த்து எழுதுவீர்கள். திருட்டு திரவியம், டுமிளன் பச்சை பாவாடை என்றெல்லாம் யார் எழுதுவார்கள் என தெரியாதா? நான் இன, மத, ஜாதி வெறி யை தூண்டாதீர்கள் என்று மன்றாடிக் கொண்டே இருப்பவன்.

  • balu - Chennai,இந்தியா

    பட்ட காலிலே படும்.

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    பகட்டு பத்துநாள் என்பது விரைவிலேயே வரும்

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    //கூட்டணி கொண்டு லோக்சபாவில் வெல்லும் யுக்தியை பாஜக வகுக்கும் என நம்பலாம்// பிற கட்சி களை தனியாக நிற்க திராணி இருக்கா என்று எழுதுவார்கள். யார் முதுகிலாவது சவாரி செய்ய பார்க்கிறார்கள் என்பார்கள். பீஜேபீ என்றால் அது வியூகமா? செம காமெடி

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    பழமொழி கேள்விப்பட்டதுன்டா "" ரயிலோடியும் கர்நாடகம் """"

  • siriyaar - avinashi,இந்தியா

    Fox talking about walking speed of lion.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    குமாரசாமி அவர்கள் அவர் கட்சி MLA எண்ணிக்கைக்கு ஏற்ப இதிலும் வெற்றி பெறுள்ளார். ஆகவே பிரச்சனையை தூண்டுபவர்களுக்கு செவி சாய்க்காமல், தொடருங்கள் உங்கள் பணியை. நோக்கம் லோக்சபா வெற்றியை நோக்கியதாக இருக்க வேண்டும். இதில் தோல்வி அடைந்தவர்கள் பிஜேபி மட்டுமே

    • I love Bharatham - chennai,இந்தியா

      நீ நீயா இருப்ப...நான் நானா இருப்பேன் ....தி pure ராம் ராஜ்யம்....

    • Rafi - Riyadh,சவுதி அரேபியா

      ராம் ராஜ்ஜியம் சட்டமன்றத்தில் முதல் இடத்தில் இருந்து விட்டு உள்ளாச்சியில் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்றாமிடத்தில் உள்ள கட்சி அதிலேயே தக்க வைத்துள்ளது.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    கா மணி பா. மீண்டும் இனவாதம் எழுதிவிட்டார். கன்னடிகா வாம்? அப்படின்னா யாரு? ஏன் பிற மொழி, இன வாக்காளர்களே பெங்களூருவில் இல்லையா? ஏன் தான் இப்படி சி. போரில் இருந்து இன, மத, மொழி, ஜாதி வாதமான கருத்துக்களை தொடர்ந்து எழுதுகிறார்? மாறவே மாட்டாரோ? இந்தியாவில் இன/ ஜாதி/ மொழிக்கு கலவரம் ஏதாவது நடக்கணும். சி. போரில் இருந்து ரத்த ஒழுகல்களை ரசிக்கணும் என்ற இவரது எண்ணத்தில் இடி விழட்டும்.

    • Tamil Selvan - Chennai,இந்தியா

      \\\இந்தியாவில் இன/ ஜாதி/ மொழிக்கு கலவரம் ஏதாவது நடக்கணும்.///. யோக்கிய சிகாமணி ஏன் ஆரியன், திராவிடன் என்று எழுதுகிறீர்கள். தமிழ் மட்டுமே பேசிக்கிறவர்களை ஏன் தமிழன் என்று சொல்லாமல் ஆரியன் திராவிடன் என்று பிரிவினைவாதம் செய்கிறீர்கள்.

  • ganapati sb - coimbatore,இந்தியா

    தனித்து போட்டியிட்டால் வார்டு வாரியாக எவ்வளவு சதம் வாக்கு வருகிறது என தெரிந்து அதன் பின் தேவையான கூட்டணி கொண்டு லோக்சபாவில் வெல்லும் யுக்தியை பாஜக வகுக்கும் என நம்பலாம்

    • Anandan - chennai,இந்தியா

      அடுத்தவர் முதுகில் சவாரி செய்து பின் அவர்களை கவிழ்க்கும் சாதுர்யம் பிஜேபிக்கு நிறையவே உண்டு.

  • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

    குமாரசாமி ஆதரவில் ஜெயித்து இப்போ அவருக்கே ஆபத்தா ?? நம்பர் விளையாட்டில் , தேர்தல் முறை ஒரு தோல்வி முறைதான். மக்களே நேரடியாக முதல்வர் மந்திரிகள், பிரதமர், கவர்னர் ஜனாதிபதி அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

  • christ - chennai,இந்தியா

    இனி எல்லா இடங்களிலும் ப ஜ க விற்கு சங்குதான் .

    • Tamil Selvan - Chennai,இந்தியா

      \\\இனி எல்லா இடங்களிலும் பா ஜ க விற்கு சங்குதான் .///. கடந்த, 2013ம் ஆண்டில் 4,976 இடங்களுக்கு நடந்த முனிசிபல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 1,960 இடங்களில் வென்றது. ஆனால் இந்த முறை 982 இடங்களில் வென்றுள்ளது. அதாவது 1960-982=978. அதாவது ஏறக்குறைய சரி பாதி அளவுக்கு, அதாவது 978 இடங்களில் கடந்த முறை வெற்றி பெற்ற இடத்தை இழந்து இருக்கிறது. ஆனால் பாஜகவோ கடந்த முறை 905-யில் இருந்து 929 இடங்களுக்கு முன்னேறி இருக்கிறது. இதில் இருந்தே தெரியவில்லையா உண்மையான சங்கு யாருக்கு என்று?.

  • Imayan - Madurai,இந்தியா

    பீஜெபீ ஆட்சி ஒழிக

  • Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    இதற்க்கு தமிழிசை ஒரு உதாரணம்

  • MurugeshsivanBjpOddanchatram -

    முதல்வர் குமாரசாமியை மக்கள் நம்பவில்லை என்பது தெளிவாகிறது.

    • Appavi Tamilan - Chennai

      குமாரசாமி இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளார். மக்கள் மோடியை நம்பவில்லை என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

  • Solvathellam Unmai - Chennai,இந்தியா

    பாசிச பாஜக ஆட்சி ஒழிக....

    • Appavi Tamilan - Chennai,இந்தியா

      அய்யா இங்கயுமா? நேற்றுதான் ட்விட்டரில் தமிழர்கள் பாஜகவை தெறிக்க விட்டனர். தற்போது அந்த நெருப்பை இங்கும் பற்ற வைக்காதீர்கள். பாவம் டுமீலிசை. ஒருவகையில் அவரும் ரைட் வுமன் இன் எ ராங் பார்ட்டி. எதோ தெரியாமல் தவறு செய்துவிட்டார். இந்நேரம் மோடி அண்ட் ஷா இருவரும், இசையை வறுத்தெடுத்து இருப்பார்கள். விட்டுவிடுங்கள்.

  • MurugeshsivanBjpOddanchatram -

    காங்கிரசும்,பாஜகவும் கிட்டத்தட்ட சம அளவில் தான் வெற்றி பெற்றுள்ளது... இதில் பாஜக எங்கே மண்ணைகவ்வியுள்ளது. இதில் காங்கிரஸ் ஆளும் கட்சி வேறு..

    • KV Pillai - Chennai

      நீங்க கணக்குல ரொம்ப வீக் சார்...

    • Appavi Tamilan - Chennai

      அவரு பாஜக கட்சிக்காரரா இருக்காரு. அதனாலதான் கணக்குல புலி மாதிரி பின்னி எடுக்குறாரு. கண்ணு வைக்காதிங்க பிள்ளை.

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    குசராத்துலயே இவுனுங்களுக்கு அஸ்தமனம் ஆரமிச்சிடிச்சி....NDA ல இருக்கற ஒன்னு ரெண்டு கூட்டணி கச்சிங்களே "இந்தெ மோடிய எங்களால இனியும் ஏத்துக்க முடியாது" அப்டீன்னு சொல்லிட்டிருக்காங்க ....

  • tamil - coonoor,இந்தியா

    உள்ளாட்சி தேர்தல் முடிவை வைத்து எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது, ஆனாலும் இது பி.ஜெ.பி க்கு ஒரு பின்னடைவு தான், எதிர்காலத்தில் குமாரசாமியோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும்போது பி.ஜெ.பி க்கு பெரிய நெருக்கடி ஏற்படும்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    அவங்க தேறலே... நீங்களே முழுசா தேறலே

  • Kounder Bell - Kodambakkam

    கன்னடர்களுக்குத் தெரியுது தாமரையை நம்பினால் தண்ணீரில் மூழ்கி சாகவேண்டியது தான் அது கண்ணா காசி இது வெறும் ஆரம்பம் தான் அடுத்த எலக்சனில் தான் உங்களுக்கெல்லாம் ஆப்பு வருகிறது

  • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

    தேறவில்லை மட்டுமல்ல, இந்த 'படுகுழி' பாஜக அரசு தேறப் போவதில்லைனு சொல்லுங்க.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இந்தத் தேர்தல் முடிவுகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம். எடியூரப்பா அவரது வாழ்வில் கண்ட மறக்க முடியாத அருமையான கனவு இதுதான்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இவங்கள் ( பி ஜெ பி )எல்லாம் பணம் பதவி வெறியர்கள்.. பட்டாலும் திருந்த மாட்டார்கள்...

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    தென்னாடு உருப்படாது தமிழ்நாட்டுலே காசு தந்ததால் அவனே ஜெயிப்பான் நேர்மையானவர் இதுவரை ஜெயித்ததே இல்லீங்க கடந்த அம்பது வருஷமா காமராசருக்குப் பிறகு காங்கிரெஸ்க்கு சங்கூதியாச்சே போட்டி போட்டுண்டு திமுக அண்ட் அதிமுக ரெண்டும் வாரி வழங்கிடுதே இப்போ இருவது ரூவா நோட்டுக்காரன் வந்துருக்கானே திருநாவுக்கரசு கஜகர்ணம் போட்டாலும் ஒரு ஓட்டும் விழாது பிஜேபில்லே ஜெயிச்சா நன்னாயிருக்கும் ஆனால் இவ்ளோ கோடிலே துட்டு அதுக்கு இல்லீங்க தரவும் கூடாது தந்தா கொள்ளைக்கூட்டம்ன்னு ஆயுடுமே, மக்களேதான் திருந்தவேண்டும் ஆனால் திருந்தமாட்டாங்களே காசுவந்தால் தண்ணீருக்கு ஆவும்னு கிடைப்பானுகளே பொம்பளென்னா ஆராத்தி சுத்துவா வறவன் தான் அவ்வீட்டு மருமகன் என்று எண்ணிண்டு கண்ராவி கேரளாலே கம்யுனிஸ்டுதான் குலதெய்வம்

    • BoochiMarunthu - Paradise papers,பனாமா

      //தென்னாடு உருப்படாது // இந்தியாவில் முன்னேறிய மாநிலங்கள் தென் மாநிலங்கள் தான் . இந்த மாநிலங்களால் தான் இந்தியாவே பிழைக்கிறது .

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    தேர்தலுக்கு பின் கூட்டணி என்றாலும், காங்கிரஸ் க்கு தான் முதல்வர் பதவி கிடைக்கவேண்டும். ஆனால் குறைந்த மதிப்பெண் எடுத்தவர் கோட்டாவை உபயோகப்படுத்தி மருத்துவக்கல்லூரிக்கு போவதை போல், குமாரசாமி முதல்வர் ஆகிவிட்டார். அந்த எரிச்சல் காங்கிரஸ் க்கு இருக்காதா? இல்லை சப்பாணி ஹீரோவிற்கு தனது ஹீரோயினை விட்டு கொடுத்து, ஊட்டிக்கு அனுப்பி வைக்க காங்கிரஸ் என்ன ஜோக்கரா? வலுவானவர் தானும் மாப்பிள்ளை ஆகவேண்டும் என்ற ஆசை நியாயமாக உள்ளது தானே. அந்த வகையில் காங்கிரஸ் ஐ குற்றம் சாட்ட முடியாது. ராகுலின் லோக் சபா வெற்றிக்காக, கர்நாடக காங்கிரஸ் பலிகடா ஆகி உள்ளது.

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    பா.ஜெ.க ஒரு சில விஷயங்களை செயல்படுத்த முடியவில்லை என்றால் இவர்களே காங்கிரஸிடம் தேடி போயி ஜெயிக்க வைத்து விடுவார்கள்... காங்கிரஸாக ஜெயிக்க முடியாது...பா.ஜெ.க செய்யும் தவறுகளால் தான் காங்கிரஸ் ஜெயிக்கும்.....உதாரணத்திற்கு பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்கிறது..ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா என்னை விலை மிக குறைவு...காங்கிரஸ் ஆட்சி காலத்தை ஒப்பிடும்போது அம்பது சதவீத விலை தான் இப்போது சர்வேதேச சந்தையில் இருக்கிறது.....அதே போன்று ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்டு பண பதுக்கலுக்கு எளிதாக வழி விட்டு வைத்து இருக்கிறது பா.ஜெ.க ஆனால் அவர்கள் உறுதி கொடுத்தது, கள்ள பணத்தை ஒழிக்க போவதாக.....அதே போன்று விலை வாசியை கட்டுக்குள் வைக்க தவறுவது....இதை தவிர பெண்களுக்கு எதிராக மற்றும் மத துவேசத்தை மற்றும் வன்முறை கருத்துக்களை அள்ளி வீசும் இரண்டாம் கட்ட தலைவர்களை தட்டி வைக்காமல் இருப்பது....... எதெற்கெடுத்தாலும் அவன் காலை கொண்டு வா, கையை கொண்டு வா தலையை கொண்டு வா இத்தனை லட்சங்களை தருகிறேன் என்று கூறும் தலைவர்களை தட்டி வைக்காமல் இருப்பது........

  • Appan - London,யுனைடெட் கிங்டம்

    பிஜேபிக்கு இந்த மரண அடி தேவை.. போன வரம் சமூக சேவகர்கள் ,ஏழைகளின் கவிஞ்சர் வரா வரராவை கைது செய்து ஜெயிலில் அடைத்து உள்ளார்கள்.. இது அதிகார மமதையின் உச்ச கட்டம்.ஏழைகளுக்கு உதவினால் கைது அதே சமயம் கோடீஸ்வரர்களும் -அத்வனி ,. அம்பானி.. இவர்களுக்கு உதவினால் ..புகழ்மாலை..நாடு எங்கே போகிறது..?. தாமரை மலர்ந்தால் நாட்டிற்கு நல்லது என பெரும்பாலோர் நினைக்கிறார்கள்..ஆனால் பிஜேபியின் செயல் அது தப்பு ஏன்னு சொல்லுது..எல்லோரையும் காவி மாயம் ஆக்கி கமண்டலத்தை கையில் கொடுத்தால் நாடு என்ன ஆகும்..?>

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    //இந்தத் தேர்தல் முடிவுகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம். -எடியூரப்பா, பா.ஜ., மாநிலத் தலைவர் // என்ன எட்டி வோட்டிங் மெஷின் இப்ப இருந்தே செட்டிங்கா..?

    • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

      இந்த நகராட்சி எலெக்ஷன்ல என்ன யூஸ் பண்ணினாங்க? வாக்கு சீட்டா... இல்லே... வோட்டிங் மெஷினா? தெரியாமத்தான் கேக்குறேன்.... வாக்கு சீட்டுனா நீங்க சொல்ற கருத்துக்கு ஒரு நல்ல மதிப்பு உண்டு.... வோட்டிங் மெஷினை யூஸ் பண்ணியிருந்தால், உங்களுடைய கருத்து வெறும் குப்பையாகிவிடும்... காரணம் வேணும்னாலும் சொல்றேன் .... வோட்டிங் மெஷினை வெச்சுதான் காங்கிரஸ் ஜெயிச்சிருக்கு

    • நக்கல் - ,

      நீங்களும் வோட்டிங் மெஷீன் பத்தி இப்பவே ஆரமிச்சாசா.. பயம் குறையல..

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    தோத்து மண்ணை கவ்வி மானம் கெட்டு போனது பாஜக.. ஆனா, தலைப்பு, "குமாரசாமிக்கு நெருக்கடி" ... சூப்பர்..

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    கன்னடிகாக்கள் இன்னும் காங்கிரசை நம்புவது ஆச்சரியம்...

    • nicolethomson - bengalooru,இந்தியா

      இல்லை இங்குள்ள எட்டப்ப மகாராஜா சித்தராமையா சிறப்பாக பிளான் செய்யுறாரு

    • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

      கத்திரிக்கா முத்தி போனா கடைத்தெருவுக்கு வந்தாகணும் காசீ..

    • Asokan - Kumbakonam,இந்தியா

      வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியின் படுமோசமான தோல்விக்கு அவர்களின் மக்கள் விரோத திட்டங்கள், கொள்கைகள் வழிசெய்துவருகிறது. ஆட்சியாளர்கள் ஆணவ போதை ஏறி அந்தரத்தில் மிதக்கின்றனர். மக்களை வாட்டி வதைக்கும் பிரச்சினைகள் எதைப்பற்றியும் கவலை கொள்வதில்லை.... கவலை கொள்ளப்போவதும் இல்லை. பல ஆண்டுகள் காத்திருந்து கிடைத்த நாட்டை ஆளும் வாய்ப்பை இழக்கப்போகின்றனர். தேர்தல் நேரத்தில் அவர்கள் கொண்டுவரப்போகும் வெளிவேஷ திட்டங்கள், அழுகை நாடகங்கள் மக்களிடத்தில் இனி எடுபடாது. ஆட்சியின்மீது ஒரு பொதுவான வெறுப்பை மக்களிடம் காணமுடிகிறது. 2014 இல் விட்ட வாய் சவடால்கள் காற்றில் போனது. மக்கள் பல விதங்களில் அல்லல் பட்டது தொடர்ந்துகொண்டுள்ளது. இனி எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாத சூழல் அந்த கட்சிக்கு உருவாகும். ஊழல் கான் கிராஸ் மறுபடியும் நாட்டை ஆளும் வாய்ப்பை பெறப்போகிறது. நாட்டு மக்களின் தலையெழுத்து....125 மக்கள்தொகை உள்ள ஜனநாயக நாட்டில் ஊழல், லஞ்சம், கொள்ளை இல்லாத நல்ல ஆட்சியை தர ஒரு கட்சி இல்லாதது கேவலம்.

    • மணிமாறன் - trichy,இந்தியா

      இன்னும் 8 மாதங்கள் தானே ..இப்படியே அவர்கள் தொடரட்டும்... அப்போதுதான் மக்கள் மொத்தமாக வேறு பக்கம் திரும்புவார்கள்...

கர்நாடக உள்ளாட்சி தேர்தல்: காங்., வெற்றி (17)

  • MurugeshsivanBjpOddanchatram -

    ரிஸ்வான்.. உன் கனவு பகல் கனவாகத்தான் முடியும்

  • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

    நகர்ப்புறங்களில் பாஜாக வெற்றி பெற்றுள்ளது. படிச்சவன் வெவரம் தெரிஞ்சவன் யாரும் காங்கிரஸுக்கு ஒட்டு போடமாட்டேங்குறது நல்லா தெரியுது இதுல இருந்து. கிராமத்தில் பழைய காங்கிரஸ் பேரை வைத்து ஜெயிச்சுகிட்டு இருக்கான். இன்னும் எத்தனை நாளுக்குன்னு பார்ப்போம்.

    • Dubuk U - Chennai,இந்தியா

      படிச்சா தா சொல்லறவன் வோட்டே போடமாட்டான்

  • suraGopalan -

    நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் -

  • HSR - Chennai,இந்தியா

    காங்கோ கையில் பிடிக்காமுடியாது..

  • ParthaMannai -

    ரிஸ்வானுக்கு.பயம் தாங்க வில்லை.

  • mindum vasantham - madurai,இந்தியா

    க்ராமப்பகுதில் பிஜேபி வளர வேண்டும் , காங்கிரஸ் ஆள் பலத்தினாலேயே கிராம பகுதியில் ஜெயிக்கிறது

  • vns - Delhi,இந்தியா

    For the BJP, which emerged as the single largest party in the state assembly elections, there were some reasons to cheer, not least its performance in some ULBs in the southern districts, where the Congress and JD(S) had been the dominant players. The party continued its stellar performance in the coastal districts, winning seven of the 15 ULBs. Even in the central districts, the BJP won five of the seven ULBs.

  • Appavi Tamilan - Chennai,இந்தியா

    சோனமுத்தா போச்சா? காதுக்குள்ள குருவி சும்மா ரிங்குன்னு சுத்துமே... இது வெறும் ட்ராயிலர்தான். சங்கிமங்கி கூட்டம் அடுத்து வரும் தேர்தல்களில் படுதோல்வி அடையும் திருநாளை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    இதுக்கப்றம் ராஜஸ்தானு, ம பி, சட்டிஸ்கர் பொறவு அடுத்த வருசம் இந்தியா முளுக்க இப்படித்தான் நடக்கும் news சும் வரும்...

    • Ramamoorthy P - Chennai,இந்தியா

      ஐந்து வருடமாக இதோ அதோ என்று கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். பாவம், மக்கள் தான் இப்படி இவர்களை படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    ~" அப்டி போடு, போடு..., போடு..."~

  • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

    பாஜகவிற்கு ஆப்பு தென்னகத்தில் இருந்து ஆரம்பம்

    • Ramamoorthy P - Chennai,இந்தியா

      வெறும் 53 ஸீட் வித்தியாசத்துக்கு இந்த ஆர்ப்பாட்டமா? காங்கிரஸ் அங்கு ஆளும் கட்சி என்பதை நினைவில் கொள்ளவும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement