Advertisement

மாவட்ட செஸ் போட்டி மாணவர்கள் பங்கேற்பு

அச்சிறுப்பாக்கம்:பள்ளி மாணவர்களுக்கான, மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டி,

அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற்றது.


அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்திலுள்ள, 150 அரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளைச் சேர்ந்த, 200 மாணவர்கள் பங்கேற்றனர்.முன்னதாக, எட்டு குறுவட்டங்கள் அளவில் நடைபெற்ற போட்டிகளில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களே, இப்போட்டியில் பங்கேற்றனர். 11, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கு, நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.


இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு கள் வழங்கப்பட்டன. இவர்கள், மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement