Advertisement

ஓட்டுனரில்லா காரில் வீடு வரும் மளிகை!

உயர் தொழில்நுட்பத்துடன் மளிகை பொருட்களைக் கலந்தால் கிடைப்பது என்ன? ஒரு புதிய தொழில் தான்! இன்னமும் பரிசோதனையில் இருக்கும் ஓட்டுனரில்லா கார்களை வைத்து, வாடிக்கையாளரின் வீட்டுக்கே பொருட்களைக் கொண்டு வந்து தரும் சேவையை, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில், 'ஆட்டோ எக்ஸ்' சோதித்து வருகிறது.
வீட்டில் இருக்கும் வாடிக்கையாளர், ஒரு மொபைல் செயலி மூலம் வேண்டிய மளிகை பொருட்களை, 'ஆர்டர்' செய்தால், அவர் கேட்கும் நேரத்தில் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து சேர்க்கிறது, ஓட்டுனரில்லா வாகனம்.
மொபைலில் ஆர்டர் செய்தவரின் வீட்டு முகவரியை, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பம் உறுதி செய்ய, செயற்கை நுண்ணறிவும், ஓட்டுனரில்லா வாகன தொழில்நுட்பமும் சேர்ந்து, காரை பத்திரமாக ஓட்டி வந்துவிடும்.
மொபைல் செயலியில் ஒரு பொத்தானை அழுத்தினால், ஓட்டுனரில்லா காரின் கதவு திறக்கும்; மளிகை பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். தவிர, காரின் ஜன்னலில் அடுக்கப்பட்டுள்ள குளிர்பானம், சாக்லேட் போன்ற வற்றையும் விரும்பினால் வாங்கிக் கொள்ளலாம்.
'சூப்பர் மார்க்கெட்'டுக்குப் போய் பொருட்களை வாங்கி வர நேரத்தைச் செலவிடுவதற்குப் பதிலாக, அதை வீட்டில் இருப்பவர்களுடன் செலவிடலாமே என்கிறது, ஆட்டோ எக்ஸ்! அதுவும் சரிதான்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement