Advertisement

15 வயது சிறுமிக்கு திருமணம்

காஞ்சிபுரம்:ஊத்துக்காடு கிராமத்தில், திருமணம் செய்து வைக்கப்பட்ட, 15 வயது சிறுமியை, போலீசார் தேடி வருகின்றனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்தில், சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள சிறுமியின் வீட்டில், சமூக நலத்துறை அலுவலர் சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரித்தனர்.
விசாரணையில், 15 வயது சிறுமி எனவும், ஒரு மாதத்திற்கு முன், திருமணம் நடைபெற்றிருப்பதும் தெரிய வந்தது. மேலும், சிறுமி வசிக்கும் இடத்தை, பெற்றோர் தெரிவிக்க மறுத்து வந்தனர். இதனால், வாலாஜாபாத் போலீசில், சமூக நலத்துறை சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.
போலீசார், சிறுமியின் பெற்றோரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். சிறுமி கண்டுபிடிக்கப்பட்டவுடன், வழக்கு பதிவு செய்ய, சமூக நலத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்ய உள்ளனர்.
சிறுமி கண்டறியப்பட்டவுடன், குழந்தை நலக் குழுமம் முன் ஆஜர்படுத்தப்பட்டு, காப்பகத்தில் பராமரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement