Advertisement

குத்துப்பாட்டுன்னா இஷ்டம் : குயிலாய் கூவும் அர்ச்சனா குப்தா

உத்தரபிரதேசத்தில் அரும்பிய குறிஞ்சிப்பூ; சென்னையில் மலர்ந்த செவ்வந்திப்பூ; வெள்ளித்திரையில் மின்னும் அல்லிப்பூ; இளையோரை கவர்ந்த மல்லிகைப்பூ; திறமையில் ஒருபோதும் 'வாடா'மல்லிப் பூ; எல்லோருக்கும் கிடைக்காத குங்குமப்பூ, அவர்தான் நடிகை 'அர்ச்சனா குப்தா'. அவர் தினமலர் வாசகர்களுக்காக பேசியது.


* சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்
கல்லுாரியில் படிக்கும் போது குறும்படங்கள், பாடல் ஆல்பங்களில் நடித்தேன். இணையதள ரசிகர்களின் வரவேற்பால் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.


* முதல் படம்
கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் பேசுவேன். முதல் வாய்ப்பு தமிழில் 'துப்பாக்கி முனை'படம் . துப்பாக்கி தோட்டா மாதிரி 'ஷார்ப்'பான கேரக்டர். இன்னும் சில படங்களில் நடிக்க
ஒப்பந்தமாகியுள்ளேன்.


* நடிப்பு தவிர என்ன தெரியும்
நான் ஒரு தொகுப்பாளினியும் தான். பள்ளி, கல்லுாரிகளில் விழா நடந்தால் நான்தான் தொகுத்து வழங்குவேன். அப்புறம் குத்துப்பாட்டுக்கு நன்றாக நடனமாடுவேன். நடனத்தில் சாதிக்க
பயிற்சிக்கு போகிறேன்.


* தமிழ் மொழி
அழகான மொழி. நான் பிறந்தது உத்தரபிரதேசம். சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்துட்டேன். தமிழ் கற்றுக் கொண்டு இருக்கிறேன். நாலு வார்த்தை சேர்ந்தாற் போல் தமிழில் பேசினால் குழம்பிடுவேன்.


* தமிழகம் எப்படி
உலகமே அறிந்த மாநிலம். பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை. வந்தாரை வாழ வைக்கும் ஊரு. மதுரை, மகாபலிபுரம், சென்னை பெசன்ட் நகர் பீச் எனக்கு பிடிச்ச இடங்கள்.


* பிடித்த உணவு
நல்ல வேளை சமைக்க தெரியுமானு நீங்க கேட்கலை. எனக்கு நல்லா சாப்பிட மட்டும்தாங்க தெரியும். தோசை, பொங்கல், இட்லி... ம்... அப்புறம் சட்னி, சாம்பார் பிடித்த அயிட்டங்கள்.


* காதல், கிசுகிசு
ஐய்யோடா... சத்தியமா கிடையாதுப்பா. என்னோட கனவுகள், ஆசையெல்லாம் சினிமாவில் பெரிய ஆளா வரணுமேங்கிறதுதான்.காதல்... கீதல்... 'கிசுகிசு'வே வேணாம்பா. நல்ல நண்பர்கள் போதும்.


* வீட்ல எப்படி
நான், அப்பா அம்மா செல்லம். அதனால் எனக்கும், அண்ணாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். எலியும் பூனையும் மாதிரிதாங்க நாங்க அடிச்சிப்போம்... அப்படியே கொஞ்ச நேரத்தில் சேர்ந்துப்போம்.


* அழகின் மந்திரம்
மந்திரமும் இல்ல; தந்திரமும் இல்ல. எட்டு மணி நேர துாக்கம், உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இருந்தால் போதும். நீங்களும் அழகா மாறிடுவீங்க.

இவரை வாழ்த்த archana.g7gmail.com
Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement