Advertisement

மல்லையாவுக்கு சிறையில் வசதிகள்; வீடியோவை சமர்ப்பித்தது இந்தியா

புதுடில்லி: பண மோசடி வழக்கில் தப்பியோடிய பிரபல தொழிலபதிபர் விஜய் மல்லையாவுக்கு, மும்பை ஆர்த்தர் சாலையில் வழங்கப்பட உள்ள வசதிகள் குறித்த, எட்டு நிமிடங்கள் அடங்கிய, 'வீடியோ'வை, லண்டன் கோர்ட்டில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.


வங்கிகளில் கடன் வாங்கி, 9,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாமீது வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து, 2016 மார்ச் மாதம், பிரிட்டன் நாட்டின் லண்டன் நகருக்கு தப்பியோடினார். வழக்குகள் விசாரணைக்காக அவரை நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.


லண்டனில் உள்ள நீதிமன்றத்தில், இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. 'நாடு கடத்தப்பட்டால், மல்லையா, மஹாராஷ்டிர மாநிலம் மும்பை ஆர்த்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்படுவார்' என, மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், 'அந்த சிறையில், போதிய வசதிகள் இல்லை' என்று மல்லையா சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து சிறையில் உள்ள வசதிகள் குறித்த தகவல்களை தாக்கல் செய்யும்படி, லண்டன் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மல்லையாவை அடைக்க திட்டமிட்டுள்ள, பாதுகாப்பு அதிகம் உள்ள, 12ம் எண் சிறை வளாகத்தில் உள்ள வசதிகள் குறித்த, எட்டு நிமிட வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ, லண்டன் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை, செப்., 12ல் மீண்டும் நடக்க உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (50)

 • adalarasan - chennai,இந்தியா

  நம்ம காங்கிரஸ் தலைவர் வேறு இன்று, வெளிநாட்டிலேயே, இந்தியா சிறை சரி இல்லை என்று கூறிவிட்டார்…? நம்ம கேஸ் ஜெயிச்சமாதிரிதான்…?

 • Kailash - Chennai,இந்தியா

  நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா? முன்னால் இந்தியாவை ஆண்ட அவர்களுக்கு இன்னமுமா பயம் ஒரு இந்திய குற்றவாளியை பிடிக்க இந்திய சிறையில் உள்ள அவனுக்கு செய்ய கூடிய வசதிகளை அந்த நாட்டுக்கு அந்த கோர்ட் நீதிபதிகளுக்கு காண்பித்து ஒப்புதல் பெற்ற பிறகு அவனை இங்கே கொண்டு வந்து அதே வசதியை செய்து தருகிறோம் என்று கெஞ்சிய பிறகு அனுப்புவார்களாம் இந்த அரசாங்கத்திற்கு குருமூர்த்தி சொன்ன சமாச்சாரம் இருக்கிறதா? ஒரு வேளை வசதி குறைவு என்று அவர் கருதினால் திரும்ப அவரை அந்த நாட்டுக்கே அனுப்பி விடுகிறோம் என்று மறைமுகமாக ஒப்புதல் அளித்திருக்குமா? சட்டத்தை மீறியவனுக்கு சட்டப்படி நடக்க தேவையில்லை.. அங்குள்ள தீவிரவாத கும்பலை தொடர்பு கொண்டு அவனை கடத்தி மறைமுகமாக பார்சலில் அனுப்பி இந்தியாவுக்கு கொண்டு வர துணிவு இருக்கிறதா? மொசாத் அமைப்பு அப்படி செய்யும்... குருமூர்த்தி சொன்ன அந்த சமாச்சாரம் இஸ்ரேல் நாட்டுக்கு இருக்கிறது....

 • jagan - Chennai,இந்தியா

  இந்திய வக்கீல்கள் திறமை அவ்ளோதான் ...அங்க போய் வாதாடாம சாஷ்டாங்க நமஸ்காரம் செஞ்சிருப்பாங்க ...இட ஒதுக்கீடு எனும் கேன்சர் எப்பிடி எல்லாம் நாட்டை தாக்குது

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  சதிகாரி பக்கத்திலேயே (பரப்பன சிறை) அடைத்து விடலாம்

 • ருத்ரா -

  சிறையில் வசதிகள் அமைச்சர்களே ஏற்பாடு செய்து தருவார்களே. சித்தராமையா சினேகிதிக்கு உதவவில்லையா. இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. பரோலில் வந்தால் கூட மலர் தூவி வரவேற்பார்கள்.குற்றவாளிகள் டிமாண்ட் பண்ற காலம். மல்லய்யாவே வருக வருக.

 • bal - chennai,இந்தியா

  ஏன் ஒரு பப் கூட ஜெயிலில் இருக்கு என்று வீடியோ எடுத்து கொடுக்க வேண்டியதுதானே....ஜெயிலில் தூக்கி போட வேண்டியவனுக்கு இப்படியெல்லாம் திமிர்...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  சிறைச்சாலையில் அழகி போட்டி நடத்தாத விரும்புவார் , அனுமதிக்கலாமா . அழகிகள் இல்லாமல் தன்னால் இருக்கமுடியாது என்று கூறுவார், அனுமதிக்கலாமா , அதற்கும் பிரிட்டன் நீதி மன்றம் , ஏற்பாடு செய்யுமா ?

 • Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இவன் என்ன தியாகியா? இவனுக்கும் பொழப்புக்காக திருடும் திருடனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, அப்பிடீன்னா இவனுக்கு மட்டும் என்ன வசதிகள் வேண்டி இருக்கு? கூப்பிட்டு வந்து ஒண்ணுமே இல்லாத எடத்துல அடச்சீ முட்டிக்கு முட்டி தட்டி 9000 கோடி பணத்தை புடுங்கனும். பொறுக்கிங்க.

 • Anand - chennai,இந்தியா

  5 ஸ்டார் ஹோட்டல் போல வசதிகள் இருப்பதாக செட்டப் செய்து உன்னை இங்கு கொண்டு வந்து கூவம் போல ஒரு இடத்தில வச்சி கும்மு கும்முனு ஊமக்குத்தா நொங்கு எடுக்கிறார்களா இல்லையா பார். வாடி வா, வந்தபிறகு இருக்கு உனக்கு,

 • Ganthi - chennai,இந்தியா

  இந்திய நாட்டுக்காக தங்களது தூக்கம், உணவு, வீடு , மனைவி என அனைத்தையும் மறந்து சுதந்திர போராட்டத்தில் தங்களை இணைத்து கொண்டு ஆங்கிலேயன் ஆட்சியில் பல துயரங்களை அனுபவித்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு இன்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் திட்டங்கள் அனுபவிக்க முடியமால் வயதான காலத்தில் வறுமையில் நொந்து கொண்டுள்ளனர்...அப்படி இருக்கும் பொது அது என்ன இவருக்கு(திருடனுக்கு) மட்டும் வசதிகள் ஒரு கேடு....அவர் கேட்கும் அணைத்து வசதிகளும் இந்த அரசு செய்து கொடுக்குமா...??????

 • suresh kumar - Salmiyah,குவைத்

  பக்கிங்ஹாம் அரண்மனையை விட வசதி கூடுதலாக உள்ளதா இல்லையா? இல்லையென்றால், இன்னமும் வசதிகளை பெருக்கவும். அதுவரை, அந்த அரண்மனை விருந்தினர் மாளிகையிலேயே தங்க வைக்கப்படுவார்.

 • Balaji - Bangalore,இந்தியா

  சிறையில் பார் வசதி உண்டா?

  • sardar papparayudu - nasik,இந்தியா

   ஆமாம் ஜெயமாலினி , ஜோதி லட்சுமி புத்துணர்ச்சி நடனமும் உண்டு .

  • KSK - Coimbatore,இந்தியா

   ஐயோ, ரொம்ப கொடுமையா இருக்குமே சார் ?

 • Edisonkonnakuzhivilai -

  naanum kadan vaankalamnu ninaikkuren

 • Kailash - Chennai,இந்தியா

  என்னடா நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா? முன்னால் இந்தியாவை ஆண்ட அவர்களுக்கு இன்னமுமா பயம்... ஒரு இந்திய குற்றவாளியை பிடிக்க இந்திய சிறையில் உள்ள அவனுக்கு செய்ய கூடிய வசதிகளை அந்த நாட்டுக்கு அந்த கோர்ட் நீதிபதிகளுக்கு காண்பித்து ஒப்புதல் பெற்ற பிறகு அவனை இங்கே கொண்டு வந்து அதே வசதியை செய்து தருகிறோம் என்று கெஞ்சிய பிறகு அனுப்புவார்களாம்... ஒரு வேளை வசதி குறைவு என்று அவர் கருதினால் திரும்ப அவரை அந்த நாட்டுக்கே அனுப்பி விடுகிறோம் என்று மறைமுகமாக ஒப்புதல் அளித்திருக்குமா? சட்டத்தை மீறியவனுக்கு சட்டப்படி நடக்க தேவையில்லை.. அங்குள்ள தீவிரவாத கும்பலை தொடர்பு கொண்டு அவனை கடத்தி மறைமுகமாக பார்சலில் அனுப்பி இந்தியாவுக்கு கொண்டு வர துணிவு இருக்கிறதா? மொசாத் அமைப்பு அப்படி செய்யும்...

  • Kailash - Chennai,இந்தியா

   என்னடா நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா? முன்னால் இந்தியாவை ஆண்ட அவர்களுக்கு இன்னமுமா பயம்... ஒரு இந்திய குற்றவாளியை பிடிக்க இந்திய சிறையில் உள்ள அவனுக்கு செய்ய கூடிய வசதிகளை அந்த நாட்டுக்கு அந்த கோர்ட் நீதிபதிகளுக்கு காண்பித்து ஒப்புதல் பெற்ற பிறகு அவனை இங்கே கொண்டு வந்து அதே வசதியை செய்து தருகிறோம் என்று கெஞ்சிய பிறகு அனுப்புவார்களாம்... இந்த அரசாங்கத்திற்கு குருமூர்த்தி சொன்ன சமாச்சாரம் இருக்கிறதா? ஒரு வேளை வசதி குறைவு என்று அவர் கருதினால் திரும்ப அவரை அந்த நாட்டுக்கே அனுப்பி விடுகிறோம் என்று மறைமுகமாக ஒப்புதல் அளித்திருக்குமா? சட்டத்தை மீறியவனுக்கு சட்டப்படி நடக்க தேவையில்லை.. அங்குள்ள தீவிரவாத கும்பலை தொடர்பு கொண்டு அவனை கடத்தி மறைமுகமாக பார்சலில் அனுப்பி இந்தியாவுக்கு கொண்டு வர துணிவு இருக்கிறதா? மொசாத் அமைப்பு அப்படி செய்யும்... குருமூர்த்தி சொன்ன அந்த சமாச்சாரம் இஸ்ரேல் நாட்டுக்கு இருக்கிறது....

 • Meenu - Chennai,இந்தியா

  இங்கு எத்தனையோ திருடன், அயோக்கியன், ஊழல்வாதி, லஞ்சவாதி என்று எல்லாம் சிக்காமல் இருக்கின்றனர், அவர்களையும் இப்படி காச்சி காச்சினா பாராட்டலாம்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  வருவான்...ஆனா..வர மாட்டான்..

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  சிஸ்டம் சரியில்லை. எப்படி இருந்தாலும், இப்போ பேருக்கு இந்த வீடியோவை காட்டி விட்டு கத்தி சிக்கின பின் பின்னி பெடல் எடுக்க வேண்டும்.

 • Being Justice - chennai ,இந்தியா

  அதெல்லாம் சரிங்க. மல்லையா ஒருவன் மட்டுமே குற்றவாளி என்ற கோணத்தில் மட்டுமே வழக்கு நகர்வதாக தெரிகிறது. அவனுக்கு உதவியவர்கள், மேலும் மேலும் கடன் கொடுத்தவர்கள், கடன் அதிகரிப்பை கண்காணிக்க தவறியவர்கள் இவர்கள் எல்லாம் குற்றவாளி இல்லையா? அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது? அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்? வெளிப்படைத்தன்மையே இல்லையே? சட்டம் அனைவருக்கும் சமம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

  • S VENKATESAN - MADURAI,இந்தியா

   மொத மீனை பிடிச்சி அதற்கப்புறம் தான் முள்ள எடுத்துப் போட்டுட்டு சாப்பிட முடியும். மீனை பிடிக்கிறதுக்கு முன்னாலே புலம்பிக்கிட்டிருந்தா மீன் தப்பிச்சுரும்

  • Being Justice - chennai ,இந்தியா

   அப்படி இல்லீங்க வெங்கடேசன். வெளிய இருக்குற மத்தவங்க சாட்சிகளை கலைக்க மற்றும் தடயத்தை அழிக்க வேண்டிய எல்லா காரியங்களையும் செய்யக்கூடும்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  ஏதாவது சொல்லி இங்கு கொண்டு வந்த பிறகு, காலுக்கு காலு முட்டிக்கு முட்டி தட்டி நொங்கு எடுத்து கரையான்புற்றிருக்கு எத்தனை பங்கு கொடுத்தாய் என்று கேட்டு அறிய வேண்டும். ஆனால் இவனை இந்தியாவிற்கு வரவிடாமல் செய்வதற்கு அது மிகுந்த முயற்சி செய்யும். அதுவும் கவனம்.

 • chander - qatar,கத்தார்

  பிஜேபி ஆட்சியில் இதுவெல்லாம் சகஜமப்பா

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

   பிஜேபி இருக்க கொண்டு இந்த வீடியோ கொடுத்தாங்க. கான்+கிராஸ் அரசா இருந்தா அந்த மாதிரி ஜெயிலே இல்ல. அவனை அடைக்க வசதியே இல்லை.. அவருக்கு எம்பி பதவி வேணும்னா கொடுத்துடறோம் என சொல்லியிருப்பார்கள்

  • Krishna - Dindigul,இந்தியா

   எது லண்டன் ல பிஜேபி ஆட்சியா ??? லண்டன் கோர்ட் கேட்டு இருக்கு என்னென்ன வசதி இருக்கு ன்னு ...அதுக்கு பதில் குடுத்துருக்காங்க..... குடுக்கலன்னா அவன் இங்க வர தேவையில்லை ன்னு தீர்ப்பு குடுக்க போறாங்க.... உன்ன மாதிரி .....வாயில நல்லா வருது

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   லண்டனில் பிஜேபி ஆட்சி நடப்பதை அறிந்து கொண்ட ஓரே ஆள் இந்த புத்திசாலி தான். லண்டன் கோர்ட் கேட்கிறது அந்த நிபந்தனைகளை நிறைவேற்றி திருடனை இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாத அறிவீலிகள்.

  • rsudarsan lic - mumbai,இந்தியா

   வெளி நாட்டில் இருக்கும் பலருக்கு எவ்வளவு தேச பக்தி? ஒரு அயல்நாடு ஒரு திருடனை திருப்பி அனுப்ப கேள்விகள் கேட்கிறது. இன்னொரு நாடு தீவிர வாதியை அனுப்ப மறுக்கிறது. இந்த மாதிரி பதில் வேறு எந்த நாடாவது எப்போதாவது செய்த்துள்ளதா? வீர் சாவர்க்கர் போன்ற தேசபக்தர்களை அந்தமானில் கொடுமைப்படுத்திய நாட்டிற்கு இது தேவையா?

  • rsudarsan lic - mumbai,இந்தியா

   இந்த ஒன்றே போதும் மத்திய அரசின் தேச பக்தியை அறிய. தேசிய தலைவர்களை பிரிட்டன் நடத்திய விதம் வலித்தி ருந்தால் இது போன்ற பதிலை கொடுத்திருப்பீர்களா?

  • sardar papparayudu - nasik,இந்தியா

   கத்தார்ல வேல பாக்கற chandarukku இம்புட்டு அறிவானு பொறாமை படாதீங்க . ப்ளீஸ் .

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ஆர்தர் ரோடு ஜெயிலை கட்டியதே ஆங்கிலேயர்கள் தான் அவற்றிலுள்ள வசதிகளைப்பற்றிக் கேட்பது அசிங்கம்

 • ஆப்பு -

  இதெல்லாம் கேசை இழுத்தடிக்கிற வேலை....

  • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City

   ஆதங்கம் புரியுது

  • Agni Shiva - Durban

   உண்மை தான். ஆனாலும் நிச்சயமாக கூடிய விரைவில் மல்லையா சிறைக்கைதியாக இந்தியாவிற்கு வந்தே தீருவான்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  திருடனுக்கு அத்தை மடி கேட்குதோ...?

 • Navn - Newyark,யூ.எஸ்.ஏ

  குற்றவாளிக்கு எதற்கு வசதி? ஏழைக்கு ஒரு நீதி பணக்காரனுக்கு ஓவர் நீதியா?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பிரிட்டிஷ் நீதிமன்றத்துக்கு இன்னும் இந்தியா தங்களது ஆட்சியின் கீழ் இருக்கும் நாடு என்ற எண்ணம் போல இருக்கிறது...

 • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

  இந்த பிரிட்டிஷ் அரசு அந்த காலத்தில் இந்திய விடுதலைக்கு பாடுபட்டவர்களை அந்தமான் சிறைகளில் (அரவிந்தர் உட்பட) அடைத்து சித்திரவதை செய்ததை இங்கிலாந்து அரசு மறந்து விட்டது

 • jagan - Chennai,இந்தியா

  பிரிட்டானியா பிஸ்கட் ராஜன் பிள்ளை யை திஹார் சிறையில் அடைத்து, சர்க்கரை, ரத்த அழுத்த மருந்து கொடுக்காமல், 3 மாசத்தில் சாகடித்தார்கள். பின்னர் கிடைத்த ஆவணங்கள் படி அவர் நிரபராதி என்று தெரிய வந்தது ......இந்திய அதிகார வர்கத்தை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள கூடாது ...ரொம்ப கொடுமைக்காரர்கள் (அரசியல் வாதிகளே இவர்கள் கண்ட்ரோலில் தான்)

  • sardar papparayudu - nasik,இந்தியா

   ராஜன் பிள்ளை மரணம் . அந்நாளில் ஒன் சைடு மகாராஷ்டிரா கார்ப்பரேட் ஆதரவுக்கு உதாரணம் .

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  \\லண்டன் கோர்ட் உத்தரவிட்டிருந்தது//.....இந்தியாவிற்கு 1947 லயே சுதந்திரம் கிடைத்து விட்டதாக சொன்னாங்களே......

 • Mani Nrs - mumbai,இந்தியா

  திருட்டு பசங்களுக்கு இதுமாதிரி வசதிகள் செய்துதர கூடாது முதலில் அவனை கூட்டிவந்து ஜனங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் அவர்கள் பாத்துக்கொள்வார்கள்

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  அவனைப்பிடித்து வந்தவுடன், இந்தியர்கள் ஒவ்வொருவரும் முகத்தில் குத்துவிட ஏற்பாடு செய்யவேண்டும். பிறகு புழலேரியில் அடைக்கவேண்டும். ஏன்னா ஒரு தெனாவெட்டு

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நமது சுதந்திர போராட்ட வீரர்களை சிறையில் அடைத்திருந்த பொழுது இருந்த தரத்தை விட இப்போதைய தரம் சிறப்பாகவே உள்ளது. சந்தேகம் இருந்தால் லாலு, கனியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த திருடனுக்கு சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை விட அதிகமாக பிரிட்டிஷ் அரசாங்கம் முக்கியத்துவம் அளிப்பது கவலைக்குறியது

  • Madhu - Trichy,இந்தியா

   சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் நமது சுதந்திரத் தியாகி வீரர் திரு. சுப்ரமண்ய சிவாவை அந்தமானில் அடைத்து வைத்து அவருக்கு தொழு நோய் ஏற்பட வைத்தவர்கள் கூறுவதை இந்திய அரசாங்கம் இன்று ஏன் ஏற்க வேண்டும்? நமது 'கமாண்டோ' படையினரை இங்கிலாந்திற்குள் இறக்கி மல்லையாவைக் குண்டு கட்டாகத் தூக்கி இங்கு கொண்டு வந்து செருப்பால் அடிக்காமல் அவர்கள் சொல்வதற்கெல்லாம் நாம் என் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் ? மல்லையா, மோடி, நிரவ், தாவூத் போன்ற அனைவரையும் சட்டத்திற்குப் புறம்பாக இங்கு கொண்டு வந்தாலும் அதை நாம் வரவேற்போம். ஜெய் ஹிந்த்

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  வெளிநாட்டு கப்பல் பாதுக்காப்பில் ஈடுப்பட்ட கப்பல் ஊழியரால் இந்திய எல்லைக்குள் ஆயுத்தங்கள் வைத்து இருந்தார்ஹல் என்று கைது செய்யப்பட்டார்கள் . அதில பலர் UK வை சேர்ந்தவர்கள் . அவர்கள் சென்னை புழர் சிறையில் அடைக்கப்பட்டு பல வருடங்கள் கழித்து தான் விடுதலை செய்ய்ய்யப்பட்டார்கள் . அப்போ இங்கிலாந்து அரசு இப்படி வசதி உள்ளதா என்று கேட்கவில்லை .இவருக்கு வசதி இருக்கிறதா என்று கேட்பது விந்தையாக உள்ளது . பணம் கொடுத்து அங்கு நீதிபதியை வாங்கி உள்ளார்கள் அல்லது வசதி இருக்கிறதா என்று கேட்டார்கள் என்ற இந்த செய்தியே பொய்யாக தான் இருக்கும் .

 • Mohan Kumar - chennai,இந்தியா

  Only a slave country will submit like this. Saying Indian but behave like slaves

  • HSR - Chennai,இந்தியா

   MR. MOHAN KUMAR WANTS TO PROTECT HIM. CORRECT.,?

 • HSR - Chennai,இந்தியா

  போய் ஏதாவது 7 ஸ்டார் ஒட்டலை காட்டுங்கள்..இங்கே கூட்டி வந்து குமுறி எடுங்கள்.இவன் வந்தால் தெரியும் காங்கோவின் உண்மை முகம்.. பிரிச்சி மேயுங்க..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement