Advertisement

போலீஸ் டைரி,.

லாரி மோதி வாலிபர் பலி
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கங்காதுரை, 26, சித்துார் மாவட்டம் சத்தியவேடு தொழிற்பேட்டையில், இளநிலை பொறியாளராக பணியாற்றினார். இரு சக்கர வாகனத்தில் நேற்று, தொழிற்பேட்டைக்கு வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த மினி லாரி மோதி, சம்பவ இடத்திலேயே, கங்காதுரை பலியானார். அவருடன் பயணம் செய்த, மதன், காமராஜ் லேசான காயமடைந்தனர். சத்தியவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி
சித்துார் மாவட்டம், ரேணிகுண்டா அடுத்த, பூடி - தடுக்கு ரயில் நிலையம் இடையே, எஸ்.வி.,புரம் அருகே, விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே ஒருவர்
பலியானார். இறந்தவரின் வயது, 35 என்றும், கருப்பு கலர் சட்டையும் ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்தாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் குறித்து, ரேணிகுண்டா ரயில்வே போலீசார்
விசாரிக்கின்றனர்.


பெண் துாக்கிட்டு தற்கொலை
சித்துார் மாவட்டம், கார்வேட்நகர் அடுத்த கத்திரிப்பள்ளி காலனியைச் சேர்ந்தவர் வினோத்குமார், 27, மனைவி சொப்னா, 21. இவர்களுக்கு, திருமணம் முடிந்து, மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், வினோத்குமார், வரதட்சணை கொண்டு வருமாறு, சொப்னாவை துன்புறுத்தி வந்தார். இதனால் மனமுடைந்த சொப்னா, வீட்டில் உள்ள மின் விசிறியில், துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். கார்வேட்நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement