Advertisement

கிளாமர் ஓ.கே., தாங்க : ப்ரீத்தி பிரதிபா 'பளீச்'

எட்டி நிற்கும் வானமும் தாலாட்டும்; எட்டாத மேகமும் தேகம் பார்த்து நீராட்டும்; விழிகளில் கவிநயமும், விரல்களில் அபிநயமும் காட்டி, பொன்னழகை விட மின்னும் இவள் அழகு தான்
இளைஞர்களை கட்டிப்போடும்... அவர் நடிகை 'ப்ரீத்தி பிரதிபா' தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் மனம் திறந்ததாவது...


* சினிமா வாய்ப்பு
முகநுால் வழியாக முதல் வாய்ப்பு கிடைத்தது. என் போட்டோக்களை பார்த்து நடிக்க வர்றீங்களான்னு கேட்டாங்க. உடனே ஓ.கே., சொல்லிட்டேன்.


* நடித்த படங்கள்
ஆணிய புடுங்க வேணாம், சவாலே சமாளி, பொறியாளன், வை ராஜா வை. தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு படம் பார்ட்டி, நடிகர் பிரபு தேவாவுடன் சார்லி சாப்ளின்-2 படத்தில் நடித்து வருகிறேன்.


* பிடித்த நடிகர்கள்
கமலஹாசன் படங்களை பார்த்து தான் நடிக்க ஆசையே வந்தது. நயன்தாரா, அனுஷ்காவை ரொம்ப பிடிக்கும். நடிகர் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும்.


* விரும்பும் கேரக்டர்
நாச்சியார் படத்தில் ஜோதிகா கேரக்டர் போல தில்லான, மிரட்டலான
கேரக்டரில் நடிக்க ஆசை. ஆனா, நான் கொஞ்சம் சாப்ட் கேரக்டர்.


* கிளாமர்...
தற்போது கிளாமர் இல்லாமல் எதுவும் இல்லை.. கிளாமர் இல்லாத சினிமா இருக்குமா. மக்கள் முகம் சுளிக்காத மாதிரி கிளாமர் காட்சிகளாக இருந்தால் ஓ.கே., தான்.


* சினிமாவில் பாலியல்
அது தெரியலைங்க. திறமையை மட்டுமே வச்சிக்கிட்டு சினிமா வாய்ப்புக்காக நிறைய பேர் காத்திருக்காங்க. பெண்களுக்கு ஆண்கள் தான் பாதுகாவலாக இருக்க வேண்டும்.


* அழகுக்கு
எதுக்கும் கவலைப்படாமல், எப்பவுமே சந்தோஷமா இருந்தால் போதும். தினமும் உடற்பயிற்சி, யோகா பண்ணலாம். எத்தனை வயதானாலும் அழகாகவே இருப்பீங்க. இது தெரியாம பல பேரு பியூட்டி பார்லர் போறாங்க.


* பொழுது போக்கு
மாடலிங் பண்ணுவேன், தோழிகளுடன் ஊர் சுற்றுவது, சினிமான்னு பொழுது போறதே தெரியாதுங்க.


* ரஜினி, கமல் அரசியல்
புதுசா அரசியலுக்கு வர்றவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும். சினிமாக்காரங்கனு ஓரங்கட்ட கூடாது. மக்களுக்கு யாரால நல்லது பண்ண முடியும்னு தோணுதோ அவங்களுக்கு ஆதரவு
கொடுக்கலாம்.


வாழ்த்த : preethiprathiba177gmail.com
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement