Advertisement

பாகிஸ்தானுக்கு ராணுவ பயிற்சி: கைவிரித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு அளித்து வந்த பயிற்சியை நிறுத்திக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச ராணுவ கல்வி மற்றும் தொழில் நுட்ப பயிற்சி மையம் பிரபலமானது. இங்கு பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் சேர்க்கப்படுவது வழக்கம். இங்குள்ள தேசிய பாதுகாப்பு பல்கலை.,யின் கீழ் உள்ள ராணுவ பயிற்சி மையத்திலும் பாகிஸ்தானியர்களுக்கு கணிசமான இடம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அமெரிக்கா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் ஆண்டு முதல், ராணுவ பயிற்சி மையத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை சேர்ப்பதை நிறுத்த, டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது 2வது முறை தடை





1960 முதல் பாகிஸ்தானுக்கு பயிற்சி அளித்த அமெரிக்கா 1990ல் நிறுத்தியது. 2001 செப்., தாக்குதலுக்கு பின் மீண்டும் பாகிஸ்தானியர்களை சேர்த்து கொண்டது. இப்போது மீண்டும் பாகிஸ்தான் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • anbu - London,யுனைடெட் கிங்டம்

    90 இல் நிறுத்த 2001 இல் தாக்குதல். பின்னர் பயிற்சி. மீண்டும் இப்போ நிறுத்தம். அப்படீன்னா புரியவில்லை. ஆனா மனசு டிக்கு டிக்கு என அடிக்குது. எப்படியானாலும் பாகிஸ்தான் திருந்த போவதுமில்லை. உருப்பட போவதுமில்லை.

  • kalyanasundaram - ottawa,கனடா

    SUPERB DECISION. NOW THEY MUST CHEW THEIR TAIL.

  • Siva - Aruvankadu,இந்தியா

    அதுதான் மோடி ஜி ராஜதந்திரம்.. பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள் நீடூழி வாழ வேண்டும் பிரதமராக....

  • vel - ,

    மோடி உலகம் பூர சுத்தி எல்லா நாட்டுக்கும் போறாரேன்னு வைத்தெரிஞ்சவங்களுக்கெல்லாம் இதுதான் பதில்...மோடியின் ராஜ தந்திரத்திற்க்கு கிடைத்த வெற்றி இது...

  • S S S - Chennai

    தீவிரவாத ஆதரவு ஆட்சி இருந்தப்போ இந்தியாவுக்கு தொல்லை கொடுக்குற நோக்குல பாக்கிற்கு பயிற்சி கொடுத்தான். | இம்ரான் கான் தீவிரவாதிகளை ஆதரிக்க மாட்டான்னு தெரிஞ்சு ஒதுங்குறான்.

  • Anand - chennai,இந்தியா

    பாகிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதும், தலிபான் மற்றும் அங்குள்ள இதர தீவிரவாத குழுக்களுக்கு பயிற்சியளிப்பதும் ஒன்றுதான்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    காரணம் இந்தியா தொடர்ந்து கொடுத்து வந்த நெருக்குதல் .... தவிர ட்ரம்ப் இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதில்லை ....

    • Arasu - Ballary,இந்தியா

      மிக சரி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement