Advertisement

தமிழகத்திற்கு கூடுதல் உரம்: மத்திய அரசு ஒப்புதல்

புதுடில்லி : தமிழகத்திற்கு தேவையான கூடுதல் உரங்களை வழங்க, மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வேளாண்துறை உரங்கள் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேளாண் துறையிடம், தற்போது, லட்சம் டன் யூரியா, 54 ஆயிரம் டன் பொட்டாசியம், 1.25 லட்சம் டன் கூட்டு உரங்கள், 53 ஆயிரம் டன் டி.ஏ.பி., கையிருப்பில் உள்ளது. இந்த மாதத்திற்கு கூடுதலாக, ஒரு லட்சம் டன் யூரியா, 60 ஆயிரம் டன் பொட்டாசியம், 90 ஆயிரம் டன் கூட்டு உரங்கள், 50 ஆயிரம் டன் டி.ஏ.பி., வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம்.

இதை, மத்திய அரசு உடனடியாக ஏற்றது. காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள, 80 ஆயிரம் டன் யூரியாவை உடனே எடுத்துக்கொள்ள, அனுமதி வழங்கி உள்ளது. மீதமுள்ள உர வகைகளை, விரைவில் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு, தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க முடியும். இவ்வாறு கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Vaidhyanathan Sankar - chennai,இந்தியா

    இதனையும் தேர்தல் உத்தி என இயக்கங்கள் கூக்குரலிடக்கூடும்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    உண்மையான விவசாய்க்கா தருகிறீர்கள்...எவனோ வாங்கி வைத்து கொண்டு கள்ளச்சந்தையில் விக்கப்போகிறான்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement