Advertisement

பாலம் புதுப்பிப்பு: நெடுஞ்சாலை துறை அலட்சியம்

செங்குன்றம், தரைமட்ட பாலத்தை புதுப்பிக்காத, நெடுஞ்சாலை துறையினரின் அலட்சியத்தால், வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் பயணித்து வருகின்றனர்.செங்குன்றம் அடுத்துள்ளது, தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சி. கடந்தாண்டு நவம்பரில் பெய்த பலத்த மழையில், தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சியில் உள்ள சன் சிட்டி நகர், குமரன் நகர் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின.அப்போது, சன் சிட்டி நகர் மற்றும் குமரன் நகர்களை இணைக்கும், 40 அடி அகல சோத்துப்பாக்கம் சாலை, 100 அடி நீளத்திற்கு துண்டிக்கப்பட்டது.இதனால் போக்குவரத்து தடைபட்டு, மூன்று நாட்களாக, அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டிற்குள் முடங்கினர்.தற்காலிக பாலம்அப்பகுதிகளில், 10 அடிக்கும் மேலாக தேங்கிய மழைநீரை வெளியேற்ற, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.துண்டிக்கப்பட்ட, 40 அடி அகல சாலையில் குறுகலாக, 20 அடிக்கு மட்டும், பெரிய குழாய் பதித்த நெடுஞ்சாலைத் துறையினர், அப்பகுதி மக்களின் போக்குவரத்திற்காக, அவசர கதியில் தற்காலிக தரைமட்ட பாலம் அமைத்தனர்.வெள்ள நீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட பின், நிரந்தர தரைமட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இன்று வரை தற்காலிக தரைமட்ட பாலம் பலப்படுத்தப்பட வில்லை.தற்போது, 40 அடி அகல சாலையில், 20 அடிக்கு மட்டும் குறுகலாக அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட பாலத்தில், இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, லாரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கனரக வாகனங்களும் பயணித்து வருகின்றன.இதனால், 40 அடி அகல சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், திடீரென தரைமட்ட பால பகுதியை கடக்கும் போது, போக்குவரத்து நெரிசல், விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.கோரிக்கைகாலை, மாலையில் நெரிசலில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், கால்வாயில் விழும் அபாயம் நிலவுகிறது.எட்டு மாதங்களுக்கும்மேலாக, தரைமட்ட பாலத்தை சீரமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.இந்நிலையில், மூன்று மாதத்திற்கு முன், நெடுஞ்சாலைத் துறையினர் இப்பகுதியில் புதிய தார் சாலை அமைத்தனர். ஆனால், அந்த தரைமட்ட பால பகுதியை கண்டு கொள்ளவில்லை.ஓரிரு மாதங்களில், பருவமழை துவங்க உள்ள நிலையில், இப்பகுதி மக்கள் மீண்டும் வெள்ள அபாயத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தரைமட்ட பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    அந்தப் பாலம் என்ன 8 வழிச்சாலையா? சின்ன வேலையில்லெல்லாம் துட்டு வருமா? விவரமில்லாம பேசுறீங்களே...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement