Advertisement

மண்புழு உரம் தயாரிப்பு அண்ணா நகரில் பயிற்சி

சென்னை, மண்புழு உரம் தயாரிப்பது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பயிற்சி அளிக்கஉள்ளது.அண்ணா நகரில் இயங்கி வரும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:மண்புழு உரம் தயாரிப்பது குறித்த ஒருநாள் பயிற்சி, 16ல், பயிற்சி மையத்தில் நடக்கிறது.இது நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுயஉதவிக்குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும்.பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், 044 - 2626 3484 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சி, காலை, 9:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை நடக்கும்.இதில் பங்கேற்பவர்களுக்கு கையேடு, குறிப்பேடு, சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்படும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement