Advertisement

ஓய்வூதியதாரர் காப்பீடு கட்டணம் உயர்வு

-நமது நிருபர் -வங்கி ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீடு கட்டணம், 144 சதவீதம் வரை உயர்த்தப்பட்டற்கு, அனைத்து வங்கி ஊழியர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.பொது துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மருத்துவக் காப்பீடு கட்டணம், ஏற்கனவே இருந்த தொகையை விட, 29 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.மேலும், ஓய்வூதியதாரர் மருத்துவச் செலவுகளை திரும்ப பெறும் திட்டத்தில், 144 சதவீதமும்; திரும்ப பெற முடியாத திட்டத்தில், 110 சதவீதமும் உயர்த்த, இந்திய வங்கிகள் சங்கத்திடம், யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் முன்மொழிந்துள்ளது.இதற்கு, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம், கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கூறியதாவது:வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மருத்துவக் காப்பீடு கட்டணம், அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு கட்டணம், மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், தற்போது நடைமுறையில் உள்ள காப்பீடு காலம், செப்டம்பருடன் முடிகிறது. இதை, டிசம்பர் வரை நீட்டிக்க வேண்டும். மேலும், மாற்றியமைக்கப்பட்ட காப்பீடு கட்டணத்தை குறைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளோம்.இதுகுறித்து, 18ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement