Advertisement

மெட்ரோ பணியால் சாலை சேதம் புழுதியால் வாகன ஓட்டிகள் அச்சம்

திருவொற்றியூர், திருவொற்றியூர் பகுதிகளில் நடக்கும் மெட்ரோ ரயில் பணி காரணமாக, சேதமடைந்துள்ள சாலைகளில் எழும்பும் புழுதியால், வாகன ஓட்டிகள்விபத்து அச்சத்தில் பயணிக்கின்றனர்.திருவொற்றியூரில் உள்ள சுங்கச்சாவடி முதல் விம்கோ நகர், ஐ.டி.சி.,வரை, மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான துாண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சாலையின் நடுவே நடக்கும் இந்த பணிகளுக்காக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகன போக்குவரத்திற்காக சாலையின் இருபுறமும், தலா, 10 அடி இடம் விடப்பட்டுள்ளது.குறுகலான பாதையில் அதிகளவிலான வாகனங்கள் பயணிக்க வேண்டிய நிலையால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் காலை, மாலையில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடுமையாக சேதமடைந்துள்ள சாலை, குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.இதனால், சாலையில் ஏற்படும் புழுதியால் வாகனங்களை இயக்க முடியால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். பிற வாகனங்கள் தெரியாத அளவிற்கு ஏற்படும் புழுதியால், விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.மெட்ரோ ரயில் பணிகள்நடக்கும் சாலையில், வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் தார் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement