Advertisement

மாடம்பாக்கம் குடிநீர் திட்ட பணி விறுவிறு

மாடம்பாக்கம், அதிகாரிகள் பேச்சை அடுத்து, கிடப்பில் போடப்பட்டிருந்த மாடம்பாக்கம் குடிநீர் திட்டப் பணிகள், மீண்டும் விறுவிறுப்படைய துவங்கி உள்ளன.சிட்லபாக்கம் பேரூராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க, மாடம்பாக்கத்தில் இருந்து சிட்லபாக்கத்திற்கு குடிநீர் வழங்க, கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது.அதன்படி, மூன்று கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்திற்கான பணிகள் துவங்கப்பட்டு, தற்போது நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி நடந்து வருகிறது.இத்திட்டத்தின் மூலம் மாடம்பாக்கத்தில் இருந்து, தினமும், 18 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு, அதில், 16 லட்சம் லிட்டர், சிட்லபாக்கம் பேரூராட்சிக்கும், 2 லட்சம் லிட்டர், மாடம்பாக்கம் பேரூராட்சிக்கும் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கு, மாடம்பாக்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகளும் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில், பேரூராட்சியின் உயர் அதிகாரிகள், மாடம்பாக்கம் மக்களுடன் பேச்சு நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது.இந்நிலையில், நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகள் மீண்டும் விறுவிறுப்படைய துவங்கி உள்ளன. இதன்படி, மாடம்பாக்கத்தில் உள்ள ஏரியில், 20 லட்சம்லிட்டர் கொள்ளளவு உள்ள, ஐந்து கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.மேலும், சிட்லபாக்கத்தில், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள, ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது.இந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்து, நான்கு மாதத்திற்குள் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement