Advertisement

வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை சரிந்தது

கோயம்பேடு, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்ததால், காய்கறி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதி, 7ம் தேதி இறந்தார். மறுநாள், உடல் அடக்கம் நடைபெற்றது. இதன் காரணமாக, தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த, அக்கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், சென்னையில் குவிந்தனர். அன்றைய தினம், கடையடைப்பு நடைபெற்றது. விமானம் மற்றும் ரயிலை தவிர, மற்ற போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது.இதனால், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, வழக்கமாக, காய்கறி ஏற்றி வரும் லாரிகளின் எண்ணிக்கை, இரண்டு நாட்களாக, மிக குறைந்த அளவே வந்தன.இதனால், நேற்று முன்தினம், காய்கறி விலை, 30 சதவீதம் அதிகரித்தது. பெரும்பாலான காய்கறிகளின் விலை, இரு மடங்காக உயர்ந்தது.இந்நிலையில், போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியதால், வழக்கமான அளிவில், காய்கறி லாரிகள், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்தன.நேற்று முன்தினம், 110 லாரிகள் வந்த இடத்தில், நேற்று, 280 லாரிகள் வந்தன. இதனால், பெரும்பாலான காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது.இதில், 1 கிலோ, 110 ரூபாய்க்கு விற்பனையான கேரட், நேற்று, 50 ரூபாய்க்கு விற்பனையானது. காய்கறிகளின் விலை சரிவால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement