Advertisement

107 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி

லண்டன் : லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் லார்ட்ஸில் துவங்கிய 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. 2வது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து பவுலர்கள் ஸ்விங்கில் அசத்த இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஷ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். பவுலிங்கில் அசத்திய ஆண்டர்சன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Aarkay - Pondy,இந்தியா

    இரண்டாம் இன்னிங்சில் சுதாரித்துக்கொள்ளவில்லையெனில், முரளி விஜய்யும், தினேஷ் கார்த்திக்கும் இத்துடன் மறக்கப்படுவார்கள். எவ்வளவு fail ஆனாலும், ரஹானேக்களும், பாண்டியாக்களும், ரோஹித்துகளும், தவான்களும் மட்டும், மீண்டும், மீண்டும் ஆடுவார்கள் அது அப்படித்தான்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    தொடர் தோல்விகள் புத்தி கொள்முதல் கொடுக்கும் இல்லையா...

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இனிமேலாகிலும் புத்தி வரட்டும்...

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    சூப்பர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement