Advertisement

ஆக.14ல் திமுக அவசர செயற்குழு கூட்டம்

சென்னை: வரும் செவ்வாய்க்கிழமை (ஆக.14) திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.


இது தொடர்பாக, திமுக பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை கலைஞர் அரங்கில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடக்கும். இதில் செயற்குழு உறுப்பிர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார். கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க இந்த கூட்டம் நடக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில், பொதுக்குழு கூட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என தெரிகிறது.

ஸ்டாலின் தலைவர்?
பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவது பற்றி பேசப்படலாம் என தெரிகிறது.முன்னதாக ஸ்டாலின், திமுக பொதுச் செயலர் அன்பழகனை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, ராஜா, துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


கூட்டம் எதற்கு-ஸ்டாலின் விளக்கம் :


திமுக.,வின் அவசர செயற்குழு எதற்கு என்பது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திமுக செயற் தலைவர் ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கவே அவசர செயற்குழு கூட்டம். கருணாநிதி நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்தவும், பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (47)

 • jagan - Chennai,இந்தியா

  அழகிரி ரெண்டாம் இடம், கனி முன்றாம் இடம், அன்பழகன் மூன்றாவது இடம்

 • jagan - Chennai,இந்தியா

  "செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு, " சோழி ஜோசியர் சொன்ன டைம்

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  Out and out a family affaire.

 • ஆப்பு -

  நம்பர் டூக்களுக்கு நம்பர் டூக்களாகவே இருந்து பழகிப் போய்விட்டது...கஷ்டப்பட்டு கலைஞர் ஆட்சியைப் பிடித்தால் இவர்கள் மந்திரிகளாக குளிர்காய்ந்து பழக்கப் பட்டு விட்டார்கள். அதுலதான் ரிஸ்க் குறைச்சல்....லாபம் அதிகம்.

 • LoveDemocracy - Houston,யூ.எஸ்.ஏ

  14 க்கு இன்னும் நாலு நாள் இருக்கு, இதில் எங்கய்யா அவசரம்? சும்மா திகில் கிளப்பறாப்பலயே தலைப்பு போடறது

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  1991 சட்டசபை தோ்தலில் துரைமுகம் தொகுதியில் கட்டுமரம் போட்டியிட்டது அதை எதிா்த்து கான்கிராஸ் க.சுப்பு போட்டியிட்டாா் அந்த தோ்தல் வாக்கு எண்ணிக்கையின் கடைசி சுற்று வரை க.சுப்பு 3000 வாக்குகள் முன்னிலையில் இருந்தாா் வெகு நேரம் கழித்து கட்டுமரம் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது அப்போது வாக்கு சீட்டு முறை, வாக்கு எண்ணிக்க சாவடியில் பல வாக்கு சீட்டு கட்டுகள் தனக்கு வேண்டியப்பட்ட அதிகாரிகள் மூலம் மாற்றப்பட்டும், செல்லாதவையாக ஆக்கப்பட்டதாகவும் பரபரப்பு புகாா்கள் வந்தது இவ்வளவு ஜெகஜ்ஜால கில்லாடி திருட்டு வேலை செஞ்சும் க.சுப்புவை விட கட்டுமரம் கூடுதலாக வாங்கி வாக்குகள் வெறும் 890 வாக்குகள் மட்டுமே. இந்த தோ்தலில் தான் ஜெயலலிதா முதல் முறை முதலமைச்சரானாா் ரௌடிகளின் கொட்டத்தை அடக்கினாா். இதையும் வெற்றி என்று மாா்தட்டி கூவினாா்கள் கட்டுமர கம்பெனி அடிமைகள்.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  // அவரின் குடும்பம்.... உறவுகள் அத்தனையும் படைசூழ அவர்கள் ஆத்மார்த்தமாய் கண்ணீர் விட்டு கதறி அழுத அந்த காட்சிகள்.... கலைஞரை இத்தனை வயதுவரை வாழ வைத்தது// தன் குடும்பத்திற்க்கே ஓயாது உழைத்து ஒரு நூறு தலைமுறைக்கு சொத்து சேர்த்தார். "மக்கள் நலம், மக்கள் நலம் என்ரே சொல்லுவார் தம் 'மக்கள் நலம்' ஒன்றய்த்தான் மனதில் கொள்ளுவார்"

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  ஜன நாயக கட்சி

 • SK Karuthapandi - Salem,இந்தியா

  திருந்தாத மூடர் கூட்டம்

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  கனி ராஜாவை ஓரம் கட்டி அழகிரிக்கு பதவி கொடுத்து கட்சி பிளக்காமல் பார்த்துப்பாங்க.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அதாவது இவர்கள் அயல் நாட்டில் இருப்பதால் விஷயம் கேள்வி பட்டு கூட்டம் நடத்தி கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்க போகிறார்களாம்.

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்ணதாசன் .... அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞனெனில் நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய கதையுரைத்து வகுத்துணரும் வழியறியா மானிடத்து தலைவரென்று பிழைத்திருக்கும் ஆண்மையில்லா பேதையனே கவிஞனெனில் நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல..

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  மரணத்தின்பாடம். கலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்..... என்னுடைய மனவோட்டம் இதுதான்👇 அவரின் குடும்பம்.... உறவுகள் அத்தனையும் படைசூழ அவர்கள் ஆத்மார்த்தமாய் கண்ணீர் விட்டு கதறி அழுத அந்த காட்சிகள்.... கலைஞரை இத்தனை வயதுவரை வாழ வைத்தது. அவரின் வாழ்க்கைக்கு பக்கபலமாய் இருந்த குடும்ப உறவுகள் உண்மையான நண்பர்கள்.....இவைகள் தான். அம்மா அவர்களின் இறப்புக்கு ஏன் என்று கேட்க நாதியில்லை..பல நாட்கள் சித்திரவதையில் சிம்ம சொப்பனமாய் இருந்தவரின் இறுதிநாட்கள் நரகம். ஜெயலலிதா அம்மையாரின் இறுதி சடங்களில் எந்த இரத்த உறவுகளும் தோழமைகளும். உண்மையில்ல போலிகள் சூழ்ந்து அவரின் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டவை எல்லாம் வேதனையின் உச்சம்..அனாதையை போல் ஒரு அரசி புதைக்கப்பட்டார். கலைஞரின் மரணம் உணர்த்திய பாடமும், அம்மாவின் மரணம் உணர்த்திய பாடமும் ....நமக்கு உணர்த்தியது ஒரே ஒரு பாடம் தான். குடும்ப உறவுகளை, நண்பர்களை, விசுவாசமானவர்களை சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே... பதவி பணம் புகழ் இவை அனைத்தும் இருந்தாலும் ....எந்த ஒரு மனிதனும் பாதுகாக்க வேண்டியது குடும்ப உறவுகளை தான் இரத்த பந்தங்களை உண்மையான நண்பர்களை..... கலைஞர் பாதுகாத்தார் ...பாதுகாத்து கொண்டார்....ஒட்டு மொத்த குடும்பத்தின் கண்ணீரில் ஆத்மா சாந்தியோடு விடைப் பெற்றார்.... நாம் நம் குடும்ப உறவுகளை ,இரத்த சொந்தங்களை ,உண்மையான நண்பர்களை சம்பாதித்து கொள்ள வேண்டும்....அவர்களே நம்முடைய சொத்துகள். மரணம்இயற்கையானது.. மரணித்தவனுக்கு மரணத்தின் வலி தெரியாது.......ஆனால் அவர்கள் மரணத்தால் வலியை சும்க்கும் இதயங்கள் வேண்டும்...... உறவுகளுக்குள் பகைமை வளர்திட வேண்டாம்....நாளை நம்க்கும் மரணம் வரும்....மன்னிப்பு கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடலாம். மன்னிக்க வேண்டியவர்களை மன்னித்து விடலாம்... இரத்த பந்தங்களை பத்திரமாய் வைத்து கொள்ளலாம்...... சுயநலத்தின் பெயரிலும் சூழ்நிலையின் பெயரிலும் உறவுகளை பகைத்து நிம்மதி இழந்து வாழ்வது ......மரணிக்காமலே மரணம் அடைவதற்கு சமம்.....

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  என்ன இருந்தாலும் சினிமாக்காரனுங்கள்ல, அழகாக பிளான் செய்து அருமையாக நாடகத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். முதலில் கட்டுமரம் உடல்நலக்குறைவு, சிறு அசெளர்யம்தான் மற்றபடி நலமாக இருப்பதாக ஷோ காட்டுவார்களாம், பிறகு கைப்புள்ள குடும்ப சகிதம் லண்டன் போவாராம், அவர் வந்த பிறகு கட்டுமரம் மருத்துவமனையில் சேர்ப்பாம். அப்புறம் டெல்லியிலிருக்கும் தலைவர்களை, சினிமா நடிகர்களை கூவி கூவி எல்லோரையும் அழைப்பாம். பிறகு தொண்டர்கள் மருத்துவமனை சுற்றி நின்று ஒப்பாரி. பிறகு சீரியஸ், 24 மணிநேரத்துக்கு பிறகுதான் எதுவும் சொல்லமுடியுமாம். பிறகு ஆபத்தான கட்டமாம். பிறகு மெரினாவில் இடம் கேட்டு முதலமைச்சர் சந்திப்பாம். பிறகு கட்டுமரத்தின் சாவு. இதை எந்த பிசிறும் இல்லாமல் தொடர்ந்து சூப்பராக பேக் கிரவுண்ட் மியூசிக்கோட டிவியில் ஒளிபரப்பு, இப்போது செயற்குழு, அடுத்து பொதுக்குழு, அதன் பிறகு கைப்புள்ள தலைவராவது, குடும்ப உறுப்பினர் ஒருவர் பொருளாளர் ஆவது. எல்லாம் திட்டமிட்டு அழகாக நடத்தப்படுகிறது. அழகிரி எதிர்ப்பே டிராமாத்தான். வேறு யாராவது எதிர்ப்பு குரலை கிளப்பி, அவர்கள் பின் சில ஆயிரம் பேர் திரண்டால் என்னாவது என்பதால் அல்லக்கை துரைமுருகனை வைத்துக்கொண்டு கட்டுமரக்கம்பெனி நடத்தும் சூப்பர் நாடகம். பேரறிஞர் அண்ணா உயிரை கொடுத்து உருவாக்கிய கட்சிக்கு தகுதியே இல்லாத ஒரு தற்குறி திறமையே இல்லாத ஒரு வெத்துவேட்டு தலைவராகும் வேலை நடக்கிறது. உடன்பிறப்புக்களே அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் எப்படி ஒன்று சேர்ந்து மன்னார்குடி மாஃபியாவை ஒழித்துக்கட்டினார்களோ அது மாதிரி திருக்குவளை மாஃபியாவை நீங்கள் ஒழித்துக்கட்டினால் உங்க கட்சிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களும் நல்லது.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  யாருக்கு அவசரம்? எதுக்கு அவசரம்?

 • Samaniyan - Chennai ,இந்தியா

  DMK and Congress today in parliament demanded conferring of Bharath Rathna to MK. But he richly deserved Nobel prize for practicing Scientic Corruption. Why settle for less which is for ordinary mortals like Abdul Kalam.

 • chails ahamad - doha,கத்தார்

  திமுக அவசர செயற்குழு கூட்டம் ஆக, 14ல் என்பதை பற்றி அக்கறை கொள்ள வேண்டியவர்கள் திமுக தொண்டர்களும் , அதன் அபிமானிகளும் என்ற நிலையில் , மனதிலே காழ்ப்புணர்ச்சியும் , ஆதிக்க உணர்வாளர்களை அடக்கி வைத்த வெறுப்புணர்விலும் , திமுக செயற்குழு கூடுவதை பற்றி சிலர் வன்ம உணர்விலே கருத்து என்ற பெயரில் வசை பாடி அவரவர் மனதில் பட்டபடி எழுத்தை பதிவு செய்துள்ளார்கள் என்பதை கவனத்தில் கொண்டால் , குருடர்கள் சிலர் சந்தைக்கு போனார்களாம் , அங்கே நின்ற யானையை தடவி பார்த்து விட்டு அவரவர் மனதில் பட்டபடி யானையின் முழு உருவம் கணிக்க முடியாமல் உலக்கை என்றும் உரல் என்றும் வர்ணித்தார்களாம் , அந்த கதையை நினைவுபடுத்துவது போல் , இந்த வன்ம உணர்வாளர்கள் மனதில் பட்டபடி , தமிழக மக்களின் அபிமானத்தை முழுமையாக பெற்று மக்கள் இயக்கமாக திகழுகின்ற திமுக வை பற்றி தாறுமாறாக எழுத்தை பதிவு செய்துள்ளார்கள் , என்ன செய்வது கண்ணிருந்தும் குருடராய் உலாவுகின்ற இந்த உலக அறிவீலிகள் இப்படியே புலம்புவதே அவர்கள் சார்ந்துள்ள நோட்டாவின் உறவினர் இயக்கத்துக்கு தமிழகத்தில் மனநோயாளிகள் கூடாரம் என்ற நற்பெயரை பெற்று தந்திடுமாம் என்பதில் நமக்கும் மகிழ்வுதானாம் .

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  1980 ம் ஆண்டு சென்னை அண்ணா நகர் தொகுதியில் நின்ற கலைஞர் பெற்ற வாக்குகள் 50290 ...இவரை எதிர்த்து அதிமுகவின் எச். வி. ஹண்டே பெற்ற வாக்குகள் 50591....MGR ன் பெருந்தன்மையால் கலைஞர் ஜெயித்தார்.. அதற்கு பிறகு கருணா அண்ணா நகரில் நிற்கவே இல்லை.இது சரித்திரம்.எதிலும் தோற்காதவரே என கூவாதிங்க உபிஸ்..

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஸ்தாலினைவிட திறமையானவர்கள் திமுகவில் இல்லியா ???

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  திமுகவை ஏற்று நடத்த சரியான நபர் வைகோ மட்டுமே , ஆனால் அதற்கு கலைஞர் குடும்பம் ஏற்று கொள்ளாது , இன்று கழகமே குடும்பம் குடும்பமே கழகம்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  சூட்டோடு சூட்டாக கட்சி தலைவர் ஆகிடுங்க , இல்லை என்றால் பொது குழுவில் சல சலப்பு ஏட்ட் பட வாய்ப்பு ஆகி விடும்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அதாவது பாகிஸ்தானின் சுதந்திர தினத்தன்று ....

 • sridhar - Chennai,இந்தியா

  DMK is heading for a split. Our state will soon be relieved of this evil.

 • narayanan iyer - chennai,இந்தியா

  சாதாரணமாக இறந்தவர்கள் உடலை அவர்கள் சொந்த ஊரில்தானே புதைக்கவோ எரிக்கவோ செய்வார்கள். கருணாநிதியை ஏன் நடராஜனைபோல திருக்குவளையில் அடக்கம் செய்யவில்லை? கருணாநிதி பெற்றோர்களை மதிக்காத்தவர், மதித்திருந்தால் வெளிப்படையான இறை நம்பிக்கை இருந்திருக்க வேண்டும் .அது இருந்திருந்தால் எரிக்கப்படவேண்டியவர் ஏன் புதைக்கப்பட்டார்? கருணா மறைந்து ஈரம் காயும் முன் அவசர கூட்டம் கூட்டி கட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஸ்டாலினும் துரைமுருகனும் பாடுபடுகிறார்கள் .அனுதாபம் இருக்கும்போதே அனைத்தையும் சாதித்துக்கொள்ள பறக்கிறார்கள் .பேராசிரியர் ஓரம் கட்டப்படுவார் .

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  நாஞ்சில் சம்பத்து கூட இப்போ வூட்ல ..திண்ணையை தேய்ச்சிகிட்டு தான் இருக்காப்டி...கூப்டு தலைவர் பதவி குடுக்கலாம்...அவரும் தமிழ் யாவாரி தான்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  ஜேம்ஸ் முத்து வந்து சிந்திட்டு போனாரே...ஞாபகம் வெச்சுக்கோங்க சுடாலின்... யாராவது தமிழ் யாவாரி தான் ஒங்க கட்சி தலைவருக்கு சரிப்படும்... அம்புட்டுதேன் நாஞ்சொல்லுவேன்...

 • siriyaar - avinashi,இந்தியா

  Stalin : leader, udhaynithi youth wing leader sabareesan general secaratory this will actual functional and implemented slowly. May be few of these post will go to some real slaves for some time. Alagiri and kanimozhi has to start new party or take rest with existing wealth thats all. Now onwarss DMK under stalin family changed from karunanithi famili. All the cadres now to change slogan stalin vaazha. But briyani and quarter will be served in all protests no change in that part. May be in future something else like nayanthara dance party organised additionally when udayanithi become youth wing leader.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  சங்கர மடத்தில் எதுக்கு பொதுக்குழு..?...வாழைப்பழமும் மிச்சரும் தருவாய்ங்களோ..?

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  // கருணாநிதி செத்ததுக்கு உணர்ச்சி வசப்பட்டவர்கள் சிந்திக்க தொடங்கு முன், வாரிசுகள் கட்சி முழுவதையும் கைப்பற்றிவிடவேண்டும்// எங்களுக்கு முட்டாள்கள்தான் தேவை- திமுக என்கிற மாஃபியா.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அதான் மொத்தெ குடும்பமும் பொத்தெச்செப்ப ஆஜராய்ட்டங்களே.... பொறவு பொதுக்குழு, புதுக்குழெல்லாம் எதுக்கு...?

 • Ksrinivasan Kbalaji - BANGALORE,இந்தியா

  dmk தொண்டர்கள் வெறும் வேலை செய்வதற்கு மட்டுமே. கருணாநிதியை தொடர்ந்து இன்று ஸ்டாலின் நாளை உதய நிதி ஸ்டாலின் மற்றும் அவன் மகன் மட்டுமே தலைவர். இனியாவது DMK ஆதரவளிக்கும் ஹிந்துக்கள் ஹிந்து விரோதி DMK வை புறக்கணிக்க வேண்டும்

 • mindum vasantham - madurai,இந்தியா

  கே என் நேருவும் , ஆற்காட் வீராசாமியும் கட்சியை நடத்தினால் நல்லா இருக்கும்

 • karupanasamy - chennai,இந்தியா

  கருணாநிதி செத்ததுக்கு உணர்ச்சி வசப்பட்டவர்கள் சிந்திக்க தொடங்கு முன், வாரிசுகள் கட்சி முழுவதையும் கைப்பற்றிவிடவேண்டும். அதற்க்கு ஏற்றாற்போல் அடிமைகளை ஏவல் பதவிகளுக்கு அமர்த்த வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement