Advertisement

ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாது: மத்திய அரசு கடும் எதிர்ப்பு

புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.


முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடுசெய்தது.


தவறான முன்னுதாரணம்
இந்த வழக்கில், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்; ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில் பலக்கட்ட விசாரணை முடிந்து அவர்கள் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பல கட்ட பணிகளுக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களை விடுவித்தால் நாட்டில் தவறான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.

முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதால், அவர்களை விடுதலை செய்ய முடியாது. இந்த முடிவு தமிழக அரசுக்கு தெரிவிக்கபட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (63)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  டாக்டர் தர்மாம்பாள் பூங்கா என்று எழுபதுகளில் ராஜா அண்ணாமலைபுரத்தில் paratha ஞாபகம் உள்ளது.இது யார்?

 • ManiS -

  Thani Manidha Ozhukkam oruvanukku thaanaaga vara vendum.

 • Swamidoss - Florida,யூ.எஸ்.ஏ

  ஒரு பிரதம மந்திரியை கொடூரமாக கொலை செய்த பாதகர்களுக்கு ஏன் இவ்வளவு ஆதரவு? இவர்களை தூக்கில் போட்டிருந்தால் எதற்கு இவ்வளவு பிரச்சனை

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  ஏழைகளை இறைவன் சோதிப்பார். ஆனால், தாமதமானாலும் அவர் அருள் பாலிப்பார். சுதந்திரப் பறவைகளாக வலம் வருவோரை எல்லாம் வல்ல இறைவன் சரியான தருணத்தில் தண்டனை அளித்து வையகத்து மக்களுக்குக் காட்சி தருவார். யாரையும் ஏமாற்றலாம் ஆனால், அந்தக் கடவுளை ஒருபோதும் ஏமாற்ற முடியாது.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது ஆயுள் தண்டனையா? அல்லது ஆயுள் முழுவதும் தண்டனையா? ஏனென்றால் ஆயுள் தண்டனை என்பது 14 வருடம் மட்டுமே. அதில் வார விடுமுறை, அரசு விடுமுறை முதலியவைகளை கழித்தால் 12 வருடம் போல் தான் வரும். (உத்திர பிரதேசத்தில் கிரிமினல் குற்றவாளியே தன் மீதுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்து கொண்டாரே, அது சரிதானுங்களா எசமான்?).

 • Nivas - Detroit,யூ.எஸ்.ஏ

  இவரை வெளியே விட்டால் இவர் ஒரு கட்சியை தொடங்குவார்.. எதற்கு இருக்கும் சைமன், திருமுருகன் காந்தி போதும் இதுக்கும் மேலும் தமிழகம் தாங்காது

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  மத்திய அரசுக்கு எதிர்ப்புக் கொடுக்க சட்டத்தின் மூலமாகவோ அல்லது மத்திய அமைச்சரவைக் கொண்ட அதிகாரங்கள் மூலமாகவோ எல்லா உரிமையுமுண்டு. ஆனால் மத்திய அரசு இதை மட்டும் தெளிவாகச் சொல்ல வேண்டும். இவர்கள் ஏன் எதற்க்காக ராஜிவ் காந்தியைக் கொல்ல வேண்டும். அப்படி ராஜிவ் காந்திக்கும் இவர்களுக்கும் அப்படியென்னப் பகை? சொல்லிவிட்டால் மக்கள் குழப்பங்கள் தீர்ந்து விடும். சொல்லமுடியுமா?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பீஜேபீ வாசகர்கள் ராஜீவ் குடும்பத்தை அவமரியாதையாக பேசுவதும் இலங்கை தமிழர்களை காங்கிரஸ் காப்பாற்றவில்லை என்று பிதற்றினாலும், இந்திய தமிழர்களை கொல்லாமல் கொல்கிறது பீஜேபீ அரசு. இந்திய தமிழர்களையே உங்கள் கட்சி காப்பாற்றாமல் சித்திரவதை செய்கிறது. இதை ஆதரித்து எழுதுகிறது வெட்கம் கெட்ட தமிழக பீஜேபீ வாசக கும்பல்.

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  இந்தியாவில் அதிகார வர்க்கங்கள் ( ஊழல் அரசியல் தலைவர்கள் நீதித்துறை, காவல்துறை, வருமானவரித்துறை, மற்றும் காசு கொழிக்கும் துறையில் நாட்டு மக்களை கொள்ளையடிக்கும் தேச துரோகிகளை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இல்லை என்பதே அனைவருக்கும் தெரிந்த உண்மை . மாட்டிக்கொள்பவன் மட்டுமே குற்றவாளி . மற்ற துரோகிகள் அனைவரும் தியாகிகள் இதுவே இந்நாட்டின் எழுதப்படாத சட்டம் நீதி .

 • jagan - Chennai,இந்தியா

  இவர்களை தூக்கிலிட்டு புதைத்த இடத்தில புல் இல்ல மரமே வளர்ந்திருக்க வேண்டும்....மஞ்ச சோறு இல்லாத மதிய அரசு/கோர்ட்டுங்க ...இன்னும் நம்ம வரி பணத்தில் சிக்கன் பிரியாணி துண்ணுதுங்க

 • ஆப்பு -

  சிறுமிகளின் வாழக்கையை நாசம் பண்ணியவர்களை ஒண்ணும் செஞ்சுறாதீங்க....அப்பாவிங்க அவங்க.... அமைதிப்படைங்கற பெயரில் இலங்கைக்கு காட்டுமிராண்டிகளை, அங்கே பெண்களை கொடுமை செய்ய அனுப்பிச்சவரை உத்தமர்னு சொல்லுங்க....

 • Edisonkonnakuzhuvilai -

  Ethanaiyo kaithihal Ulla irukkanka ethunala avankala release panna namma tamilnadu government sollala...Rompa periya manusana kola seitha thaniya news panranka anuthaba padranka release pannavum solranka...Vera ellaraum intha government release panna solluma?

 • RangaRamanathan -

  நல்ல முடிவு. வெளியே விட்டால் அடுத்து யாரையாவது கொல்ல மாட்டார்களா, உத்திரவாதம் உண்டா.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  வீணாப்போன ரெண்டு டவுசருங்க, வைக்கோலு இதுங்க மட்டும்தான் கூவுதுங்க ....

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  கோடி கோடியாக செலவு செய்து தமிழ் மக்கள் மீது யாழ்குடா நாட்டில் போர் தொடுத்தார் ராஜிவ் யாழ்குடா நாட்டில் கொல்லப்பட்டது மனித உயிர் இல்லையா. ..?மத்திய அரசு இவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

 • Jaya Ram - madurai,இந்தியா

  அதாவது எங்கள் ஆள் எங்களை கொன்றால் ஏழாண்டு மட்டுமே, வெளி ஆள் எங்களை கொன்றால் ஆயுள் தண்டனைதான் அது காங்கிரஸ் ஆனாலும் சரி, பிஜேபி ஆனாலும் சரி முடிவு ஒன்றுதான் எங்கள் ஆள் துப்பாக்கி, குண்டு போன்றவை கொடுத்து உதவிசெய்தால் கூட கண்டுகொள்ள மாட்டோம் ஆனால் வெளி ஆள் பாட்டரி கொடுத்தால் கூட பிடித்து உள்ளே போட்ருவோம்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இந்திய நீதித்துறை கோமாளிகளால் உருவாக்கப்பட்ட கோமாளிகளைக் கொண்ட அமைப்பு ..... இந்த ராஜீவ் விவகாரம் தவிர்த்த மற்றொரு சமீபத்திய உதாரணம் கலைஞருக்கு மெரினா கிடைப்பதில் சர்ச்சை .... நான் """" இந்தியாவுக்குச் சுதந்திரம் தேவையற்றது ..... தன்னைத்தானே ஆண்டுகொள்ள இந்தியா லாயக்கில்லை """" என்றெல்லாம் சொல்வதற்கு காரணங்கள் பல .... அவற்றில் இதுவும் ஒன்று .....

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மரண தண்டனை விட கொடுமையான தண்டனை அனுபவித்து விட்டார்கள் இவர்கள் நிரந்தர ஜாமீனில் வெளியில் விடலாம்.

 • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

  கொல்ல சொன்னவர்கள் இப்போது இல்லை. (யார் கொல்ல சொன்னது என்பதே நிறைய கேள்வி இருக்கிறது). கொன்றவர்கள் முன்பே இறந்து விட்டனர். இவர்களை பற்றி சட்டம் என்ன சொல்கிறது ? வீட்டு காவலில் ??

 • Navn - Newyark,யூ.எஸ்.ஏ

  கேமராவுக்கு பேட்டரி வாங்கி கொடுத்தவர் கொலை குற்றவாளியா? நல்ல நீதி உங்க நீதி

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  இரண்டு ஆயுள் தண்டனையை அனுபவித்திருக்கிறார்கள் இதற்க்கு மேல் என்ன வேண்டும்

 • raja - Kanchipuram,இந்தியா

  இவர்களை வைத்து எதற்கு திராவிட கழகங்கள் அரசியல் செய்கின்றன. சட்டத்தின் ஆட்சி நடக்க அனுமதிக்க வேண்டும். மத்திய அரசுகள் தைரியமாக முடிவெடுக்க வேண்டும்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இவெங்களயெல்லாம் release பண்ணினா தமிழ்நாட்லயிருக்கிற மத்த ஆயுள் கைதிங்களையும் release பண்ணனும்...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  .நிதர்சனத்துக்கு எதிரான வழக்கு. இவர்களில் முருகனும் சந்தானும் இலங்கைக் குடிமகன்கள். இவர்களை விடுவித்தாலோ இலங்கைக்கு அனுப்பி  இலங்கை அரசிடம்  ஒப்படைக்க வேண்டும் என்பது சட்டம். அவர்களிடம் மாட்டிக்கொண்டால் மரணம் நிச்சயம். இவர்களை விட்டுவிட்டு மற்றவர்களை மட்டும் தனியாக விடுவிக்க சட்டத்தில் இடமேயில்லை.

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  தூக்குத்தண்டனை தொடரவேண்டும் என்பதே அரசு உட்பட, பெரும்பான்மையினரின் கருத்து, இவர்களுக்கு ஏதோ காரணத்தால் விடுபட்டுபோனதால் இன்றுவரை தொடரும் சட்டப்போராட்டமே இக்கருத்துக்கு மேலும் வலுசேர்க்கிறது.

 • arun - ,

  தமிழகர்களின் ஓட்டை இவர்களை விடுவித்தாலே அள்ளலாம்... ஓட்டுக்காக சோரம் போக பிஜேபி விரும்புவதில்லை...தேச நலன்தான் முக்கியம்...

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  மிக மோசமான முன்னுதாரணம். ஒரு நாட்டின் முன்னாள் பிரதமரை கொடூரமாக கொன்றவர்களுக்கு வக்காலத்து வாங்கும் டுமீளர்கள் உடைய நாடு உலகத்திலயே நம் தமில் நாடு ஒன்றுதான் இருக்கும். பிரான்ஸ் நாட்டின் தலைவரை (சார்லஸ் டீ gaal) கொல்ல முயற்சி செய்த அனைவருமே ஷூடிங் squad முலம் நிர்மூலமாக்கபட்டார்கள். கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும். டூமீளர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசாங்கம் உடன்படவே கூடாது.

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  ஒன்று அவர்களை கொன்று விடுங்கள். அல்லது வெளியே விடுங்கள். ஆயுள் தண்டனை எத்தனை வருஷம் என்று சொல்ல உச்ச நீதி மன்றத்துக்கு தைரியமில்லை????? நீதி மன்றங்கள் ஆளும்கட்சிக்கு அடி பணிய கூடாது. 27 வருஷமா அவர்களை சிறையில் அடைத்து எவன் அப்பன் வீட்டு காசில் சோறு போடுறீங்க??? மோடி மற்றும் கான் கிராஸ் அரசின் தண்ட செலவுகள். முடிவெடுக்க வக்கற்ற அரசுகள் நாட்டின் பெரு வியாதிகள்.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  அவங்க வாழ்க்கையே முடிஞ்சு போச்சு...இனிமே நீங்க விடுவிச்சா அவங்க என்ன ஏரோ பிளேனா ஓட்ட போறாங்க.....அப்படியே விட்டுட்டு போங்க...........

 • JB -

  They have served so many years of Jail term ....They should be let free now... In Sunanda death case suspects are moving freely and even giving talks of democracy only because they are high profile...

 • r.chandrasekaran - channai,இந்தியா

  சரியான முடிவு. இந்த வெத்து வேட்டு டுமிழர்கள் பற்றி பயம் இல்லாமல் எடுத்த முடிவு சபாஷ்.

 • Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ

  ஏன் இந்த சட்டம் அவர்களை தூக்கில் போடாமல் காலத்தை கழிக்கிறது .. இந்தியா சட்டம் ஒரே ஒரு சட்டம் தான் சாதாரண மனிதனுக்கும் தீவிரவாதிக்கும் ஒன்னுதான் அவர்கள் தப்பூ செய்யும் போது .. ஒன்னு செய்யுங்கள் இதுவரை அமைத்த விசாரணை கமிஷன் களின் ரிப்போர்ட்டை நல்ல நீதிபதிகளை கொண்டு தீர விசாரிங்கள் அப்போதுவது உண்மை குற்றவாளிகள் தண்டிக்க படுவார்கள் .. ஏமாளிகள் விடுவிக்க வாய்ப்பு உள்ளது ..

 • s.rajagopalan - chennai ,இந்தியா

  நியாயமான முடிவு. தூக்குக் கயிற்றில் இருந்து விடுதலை கொடுத்தாயிற்று. ஆகவே வாழ்நாளை சிறையிலேயே கழிக்கவேண்டும். விடுதலை செய்துவிட்டால் பிறகு புரிந்த குற்றத்திற்கு என்ன தண்டனை ? மேலும் 'நாங்கள் குற்றவாளிகள் இல்லை' என்று வேறு இவர்களில் சிலர் சொல்லுவதுதான் கொடுமை நமது நீதிமன்றங்கள் இவர்களுக்கு கிள்ளுக்கீரை போலும்

 • King of kindness - muscat,ஓமன்

  அவர்கள் ஒரு ஆயுள் கைதி அனுபவிப்பதை விட அதிகமாகவே கஷ்டங்களை அனுபவித்து விட்டனர். விடுதலை செய்வதே நியாயம். தவிர ராஜிவ் காந்தி ஒன்றும் அந்த அளவுக்கு உத்தம புருஷரூம் அல்ல.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  சாமியோவ்...விட்டு தள்ளுங்க...பேட்டரி வாங்கி குடுத்தார் ன்னு இப்படி போட்டு வதம் பண்ணுறீங்களே.. இது ராசீவ் அனுபவிச்சதோட பெரும் சித்ரவதை...

 • thangavel.a - banglore

  சரியான ! தெளிவான முடிவு!

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  இவனுங்கள இன்னுமா தூக்குல போடல..... தேசத்துரோகின்னு சொல்றது தப்பே இல்லை....இது என்ன பிரமாதம்... . தி.மு.க இங்கே மீண்டும், மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்ததால் தான், தமிழையும், தமிழனையும் காட்டுமிராண்டிகள் என்று வார்த்தைக்கு வார்த்தை சாடிய -கன்னடன் ஈ.வே. ராமசாமிக்கு தமிழகம் முழுவதும் சிலைகள், சென்னையில் மட்டும் 29 சிலைகள் -தமிழகம் முழுவதும் சாலைகளுக்கு ஈவேரா பெயர் -அது மட்டுமல்ல தன் வாழ்நாளெல்லாம் இந்துக் கடவுள்களைப் பழிப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்தவனுக்கு -தமிழகத்தின் மிக முக்கியமான திருத்தலமாகிய ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரத்திற்கே எதிராக பிரம்மாண்ட சிலை அதுவும் கோவில் நிலத்தில் -போதாதென்று காலம் போன கடைசியில் மணந்த வளர்ப்பு மகள் மணியம்மைக்குக் கூட சிலைகள், தலைநகராம் சென்னையில் எழும்பூரில் கூட இருக்கிறது -இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் என்று கூறிய கயவனை,தன் வாழ்நாளெல்லாம் தன் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்தே கூறி வந்தவனை _பெரிய சுதந்திரப் போராட்ட வீரனாகவும், சாதி ஒழிப்புப் போராளி என்று வைக்கம் வீரர் என்ற அடைமொழியுடன் -பள்ளிகளில் இவன் வரலாற்றை வேறு படிக்க வைத்த அநியாயம் -இவன் சிலைகளையும், இவன் கொள்கைகளையும் பார்த்து, படித்து கெட்டுக்குட்டிச் சுவரான ஒரு தலைமுறையையும் உருவாக்க முடிந்தது -அதே போல்தான் -இனியொருமுறை தி.மு.க ஆட்சிக்கு வரும் அபாயம் நிகழ்ந்து விட்டால் _வீதிதோறும் கருணாவின் சிலைகள் நம் வரிப்பணத்தில் வைக்கப்படும் -மதுரை மீனாட்சியின் நான்கு மாட வீதிகளிலும் கோபுரத்திற்கு எதிராக கருணாவின் சிலைகள் நிறுவப்படும் - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் கலைஞர் நிலையமா மாற்றப்படும் -ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் இருக்கும் முக்கியச் சாலைகளுக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் -அத்தோடு விடுவார்களா?-சென்ரல் ரயில் நிலையத்தில் ராசாத்தியம்மாள் சிலை நிறுவுவார்கள் -பள்ளி பாடப்புத்தகங்களில் கேவலமான மஞ்சள் பத்திரிக்கை கதைகளை எழுதிய இவனை _தமிழைக் காத்தவன், முத்தமிழ் வித்தகன் என்றெல்லாம் பாடங்கள் வைத்து விடுவார்கள் -ஏற்கனவே பெரியார் என்ற பெயரில் சிறியான் ஒருவனின் தத்துவங்களைப் படித்து ஒரு தலைமுறை குட்டிச் சுவரானது போல -இந்த மூன்று பொண்டாட்டிக்காரனின் வரலாற்றைப் படித்து இனிவரும் தலைமுறையும் வீணாய்ப் போய் விடும் -ஏற்கனவே, இந்தப் புண்ணியவானால் ஒரு தலைமுறையே குடிக்கு அடிமையாகி வீதியில் வீழ்ந்து கிடக்கிறது -இனிமேலும் இவர்களை கொண்டு வந்து விடாதீர்கள்இளைய தலைமுறையே -

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  தீவிரவாதத்திற்கு மற்றும் பிரிவினைவாதம் என்றுமே இந்தியாவின் ஆதரவு இருந்தது இல்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement