Advertisement

பலுசிஸ்தானில் அடக்குமுறை: இந்தியா கவலை

புதுடில்லி: பலுசிஸ்தானில், அரசின் அடக்குமுறைகளையும், மனித உரிமை மீறலையும் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.


இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவிஸ் குமார் கூறுகையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலை தெளிவாக உள்ளது. தனது நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரை, சர்வதேச விதிப்படி பாகிஸ்தான் கவனித்து கொள்ள வேண்டும். பலுசிஸ்தானில் அடக்குமுறைகளையும் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதையும் அந்த நாடு நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  காஷ்மீரில் ஷரத்து முன்னூர்த்தி எழுபதை நீக்கிவிட்டு வெளி மாநிலத்தவர் அங்கு குடியேறலாம், சொத்துக்கள் வாங்கலாம் சொத்து உரிமை உண்டு என்று சட்டம் கொண்டுவந்தால் காஷ்மீர் பிரச்சனை எளிதாக தீர்ந்துவிடும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  காசுமீருக்கு அளிக்கப்பட்டுள்ள 370 சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்குமுள்ள சட்ட திட்டங்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்த வேண்டும்.

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  பாகிஸ்தான் மேலும் உடைவதற்கு வாய்ப்பு இல்லை, அங்கு பிடி ராணுவத்தின் கையில் இருக்கிறது. மக்களாட்சி என்பதெல்லாம் பெயரளவில் மட்டுமே. ஒருவேளை அவ்வாறு உடைந்தால் இந்தியாவிற்கு அகதிகளின் வருகை மேலும் அதிகமாகும். ராகுல், மம்தா, கெஜ்ரிவால் போன்ற தேசத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட தலைவர்கள் அகதிகளுக்கு முட்டு கொடுப்பார்கள். ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இருப்பதால், அகதிகளை எளிதாக நாடு கடத்த முடியாது. அதே அகதிகள் இங்கும் தனது அமைதி வேலையே கையிலெடுப்பார்கள். சிரியா அகதிகள் ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்து அங்கு அமைதியின் கைவரிசையை ஐரோப்பாவிற்கு காட்டிவருவது ஒரு உதாரணம். நமது பொருளாதார முன்னேற்றத்திற்கு அகதிகள் பாரமாக இருப்பார்கள். ஏற்கனவே காஷ்மீரில் இருக்கும் திருகுவலியை சமாளிப்பதற்க்கு நாம் அதிகம் செலவிடுகிறோம். பாகிஸ்தான் தோன்ற காரணமாக இருந்த அடிப்படை சித்தாந்தமே தவறு, அதையே அவர்கள் இன்றுவரை பற்றிக்கொண்டிருப்பது அவர்கள் மேன்மேலும் செய்துவரும் தவறு. அங்கு அமைதி ஏற்படுவது என்பது கானல் நீராகவே அமையும். வலுவான மக்களாட்சியுடனும், வலுவான பொருளாதாரத்துடனும், மதச்சார்பு அற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கையுடைய வலுவான பாகிஸ்தானே நமது இன்றைய தேவை. ஆனால் இந்த மூன்றில் ஒன்று கூட அங்கு நடக்கப்போவதில்லை.

 • Navn - Newyark,யூ.எஸ்.ஏ

  சிரிப்பு சிரிப்பா வருது... இந்திய தன் முதுகை முதலில் பார்க்க வேண்டும்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பலுசிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் ..... ஒரு ஜனநாயக நாடாக இந்தியா அக்கறை கொள்வதில் தவறில்லை ....

 • Arasu - Ballary,இந்தியா

  அப்படியே சிந்து மாகாண அடக்குமுறைகளை பற்றியும் கூறவேண்டும். முடியுமானால் அந்த இரு மாகாண தீவிர மாநில விரும்பிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவேண்டும். தீவிரவாதிகள் அல்ல அவர்கள் போராட்ட வீரர்கள், சுதந்திர விரும்பிகள்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  சரியான போட்டி. இனி பக்கிகள் காஷ்மீர் பற்றி பேச தயங்குவார்கள்

 • krishnan - Chennai,இந்தியா

  காஷ்மீரில் தேனும் பாலும் ஓடும் சுதந்தர பூமியா? Ops eps கேட்டுப்பாருங்க ?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பங்களாதேஷ் போல தனி நாடாக்கி ஆகிவிட வேண்டியதுதான்...

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  பலுசிஸ்தானில் அடக்குமுறை பெருகினால் ஒரு விதத்தில் நல்லது என்று கொள்ளவேண்டும் போல. அடக்குமுறை இருந்தால் புரட்சி வரும், அதன் பின்னர் ஜனநாயகம் பிறக்கும். அமைதி நாடி மக்கள் நன்மார்க்கம் திரும்புவர். பாகிஸ்தான் கத்தார் துபாய் பஹ்ரைன் போன்று சிறிய தேசங்களாக இருக்கட்டுமே. அதுதானே அவர்களுக்கு சரி. குட்டி தேசமாய் இருந்து விட்டு போகட்டும். அவர்கள் பெரிய தேசமாய் பெரிய நிலப்பரப்பை இருந்து கொண்டு சந்ததி பெருக்கத்தை கூட்டி கொண்டே செல்வது அவர்களும் சரி அல்ல நமக்கும் தொந்தரவு தான். காஸ்மீர் பிரச்சினை முடிந்து விடும். பாகிஸ்தான் நானோ பாகிஸ்தான், மினி நானோ பாகிஸ்தான் மைக்ரோ நானோ பாகிஸ்தான் என்று பிறந்தால் என்று சொல்கிறார்கள் அமைதி விரும்பும் அரசியல் நோக்கர்கள்.

 • Kaliyan Pillai - Chennai,இந்தியா

  மதம் மாறிய ஷியா முஸ்லிம்களை எந்த இசுலாமிய நாடும் இணைத்துக்கொள்ள விரும்புவதில்லை. அவர்கள் மீதுள்ள வெறுப்புணர்ச்சியின் வெளிப்பாடாக படுகொலைகள் அரங்கேறுகின்றன. இதெல்லாம் பார்த்தும் இங்குள்ள சிலர் பாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்வது வியப்பளிக்கிறது. விரும்பினால் அவர்கள் மூட்டை முடிச்சுக்களுடன் பாகிஸ்தான் வண்டி ஏறலாமே யாரும் அவர்களைத் தடுக்கப் போவதில்லையே

 • hasan - tamilnadu,இந்தியா

  இந்தியாவிற்கு தலைவலி காஷ்மீர், பாகிஸ்தானுக்கு தலைவலி பலுசிஸ்தான் , சூப்பர்

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  பாகிஸ்தான், அடக்குமுறை, தீவிரவாதம், மனித உரிமை மீறல், வன்கொடுமை, பெண் கொடுமை, அராஜகம், etc.. இவையெல்லாம் பாகிஸ்தானுடன் சேர்ந்து போகக்கூடிய வார்த்தைகள்....

 • Thangam - Chennai,இந்தியா

  அங்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும்...தனி நாடாக விரும்பி மக்கள் வாக்களித்தால் தனிநாடாக அறிவிக்க வேண்டும்...இப்ப பாருங்க பாக்கிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணி கருத்துக்கள் குவியும்...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இதன் விளைவு பலூச்சிஸ்தான் அகதிகள் இந்தியாவை நோக்கி அகதிகளாக படையெடுப்பார்கள். இந்த நிலையை சமாளிக்கவேண்டி இந்தியா பாடுபடவேண்டும்.

 • HSR - Chennai,இந்தியா

  நம்ம ரோஹிங்கியா சகோதரர்களை பலூசிஸ்தான் அனுப்பி பாக் அரசின் கொடுமைகளை தட்டிக்கேட்க சொல்லலாமா? முடிந்தால் கொஞ்சமா ஆயுதங்களையும் கொடுக்கலாமா? இது பற்றி நம்ம மார்க்க சகோஸ் கருத்து என்னவோ?

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  Why baluchistan. Look at India...சட்டப்பிரிவு 35A சொல்வது என்ன? காஷ்மீர முஸ்லிம்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம், வேலை பார்க்கலாம், சொத்துக்கள் வாங்கலாம்...... இப்படி பலப்பல "லாம்".... ஆனால்...... இந்தியாவின் பிற பகுதிகளில் வசிக்கும் எவரும் காஷ்மீரில் வசிக்கவோ, வேலை பார்க்கவோ, தொழில் செய்யவோ, சொத்து வாங்கவோ முடியவே முடியாது.... மதசார்பின்மை... இதை நீக்க சொல்பவன் காவி தீவிரவாதியாம், தக்க வைக்க சொல்பவன் மதசார்பற்ற x வியாதியாம்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement