Advertisement

இருமுறை நீட் தேர்வு : முடிவை மாற்றிய மத்திய அரசு

புதுடில்லி : இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறி இருந்தார். தற்போது தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.


இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அளித்துள்ள பதிலில், 2019 ம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை. 2019 ல் ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் எண்ணம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை. 2019 ல் குறைந்தபட்சம் ஆஃப்லைன் (offline) முறையில் நீட் தேர்வு தொடர்வது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்துடன், மனிதவள மேம்பாட்டு துறை ஆலோசித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டு துறைக்கு அளித்த அழுத்தம் காரணம் 2019 ல் பிப்ரவரி மற்றும் மே மாதங்கள் என இருமுறை நீட் தேர்வு நடத்தும் யோசனை மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், பேப்பர் - பேனா முறையிலேயே தேர்வை தொடர வேண்டும் எனவும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • ஆப்பு -

  இவங்க பொழப்பே இதுதான்...மொதல்ல ஒரு டம்மி அமைச்சரை வுட்டு ஏதாவது சொல்லி ஆழம் பார்ப்பது...ஒர்கவுட் ஆகலேன்னா, பின்னாடியே அதை மறுத்து அறிக்கை....நல்லாவெ இவங்களுக்கு ஒர்கவுட் ஆகுது....

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  கிராமப்புற மாணவர்கள் கனவிலும் "மருத்துவர் ஆக வேண்டும்" என்று நினைக்கவே கூடாது. எப்படியும் இந்தியாவை எங்கள் பதவி காலத்துக்குள் குட்டிச்சுவர் ஆக்கியே தீருவோம்.

 • MIRROR - Kanchipuram,இந்தியா

  சரியான முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் பாஜக அரசு. அரசு தனது நிர்வாகத்தில் தடுமாறுவதையே காட்டுகிறது. தனது ஒவ்வொரு அறிவிப்பிற்கும் பின்னால் அதன்படி உடனடியாக செயல்பட கோடிக்கணக்கான மாணவர்கள் உள்ளனர் என்பதை மறந்துவிட்டு நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என்ற வகையில் தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறது, அனைத்திற்கும் மேலாக சிபிஎஸ்இ அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகளை நடத்துவதில் தடுமாற்றம் தெரிவதாக அனைவரும் கருதுகின்றனர். பாதிக்கப்படுவது ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் மட்டுமே. அரசு தனது உறுதியான தெளிவான அறிவிப்பை வெளியிடுவது நல்லது

 • பாரதன். - ,

  எல்லா நல்ல திட்டங்களையும் தவணை முறையில் மாற்றி மாற்றி கெட்ட பெயர் வாங்குவது பிஜேபி அரசின் வாடிக்கை.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  என்னன்னவோ குளறுபடிகள். இதனால் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறதே . கொஞ்சமேனும் கவலைப்படுவார்களா?

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  A WISE DECISION .PAPER BASED EXAM ONCE IN A YEAR WOULD AVOID MANY A LEGAL DISPUTES AND WOULD VOUCH FOR THE RELIABILITY.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஒரே தேர்வு போதும் அனைவருக்கும் ஒரே வடிவிலான தேர்வுத்தாள்

 • Sasidaran - Chennai,இந்தியா

  குரங்கு கையில் பூமாலை கணக்கா இந்த மருத்துவ நுழைவு தேர்வு விஷயத்தில் மாணவர்களை குழப்பி கொண்டு உள்ளார்கள் .. மாநிலங்கள் அவர்கள் உருவாக்கிய கல்லூரிகளில் எப்படி சேர்க்கை நடத்துவது என்பதை அவர்களே பார்த்து கொள்வார்கள் .. மத்திய அரசு வீண் நாட்டாமை செய்ய வேண்டாம் .. மாணவர்களுக்கு மண உளைச்சல் ஏற்படுத்த வேண்டாம் ..

 • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

  அதே மாதிரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் இருமுறை தேர்வை தமிழக அரசு மாற்ற வேண்டும். இருமுறை தேர்வு என்பது இளைஞர்கள் தேர்வு எழுதுவதை தவிர்க்கவும் குறைந்த நபர்களை எடுப்பதற்கும் ஒரு முடிவு. ஒரு வருடத்திற்கு பல லட்ச மாணவர்கள் படிப்பினை முடித்து வெளியே வருகின்றனர் ஆனால் அரசு மிக குறைவான சொற்ப வேலைவாய்ப்பினையே ஏற்படுத்துகிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement