Advertisement

கர்நாடக அணைகளில் இருந்து 1.40 லட்சம் கனஅடிநீர் திறப்பு

தர்மபுரி : கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் அங்குள்ள அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்திற்கு 1.40 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.


கபினி அணையில் இருந்து 80,000 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 60,000 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 9000 கனஅடியில் இருந்து 60,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மீண்டும் அதிகரித்திருப்பதன் காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் 33வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.கர்நாடக அணைகளில் மீண்டும் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடி வரை அதிகரிக்கும் என்பதால் 6 மாவட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேட்டூர் வந்த காவிரி நீர் :கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (35)

 • Senthil kumar - coimbatore,இந்தியா

  36 அணைகளை கலைஞர் கட்டியதாக தொலைக்காட்சியில் கூறுபவர்கள் அதை பட்டியிலடவேண்டும் மேலும் இத்தனை அணைகள் கட்டியிருந்தும் ஏன் இவ்வளவு நதிநீர் கடலில் சென்று கலப்பதற்கான காரணத்தயும் கூற முடியுமா ..? இன்றைய அரசியல்வாதிகள் 99 % வாய்ச்சொல் வீரர்கள் மட்டுமே...

 • நக்கல் -

  மழை நல்லது... இந்த வருஷம் தமிழ்நாட்டுக்கு நிரய நல்லது நடக்குது... எங்கந்த கோவணம் கட்டின audi கார்காரனை காணும்...

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  ஆந்திராவில் சந்திரபாபு நாய்டு ஆறுகளை கால்வாய் மூலம் இணைத்து எல்லா பகுதிகளுக்கும் நீர் கிடைக்குப்பின் படி செய்துள்ளார். இதனால் விவசாயம் செழிக்கிறது. அதே போல் இன்றும் ஆறுகளை இணைத்தால் கடலில் கலக்கும் நீரை குறைத்து விடலாம்.

 • Siva - Aruvankadu,இந்தியா

  சமவெளி பகுதியில் அணை கட்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்... சரி தடுப்பணை 2அடி. 3அடி அளவில். அமைக்கலாமே.

  • Siva Prakash - Bangalore,இந்தியா

   தடுப்பணை கட்டினால் பிறகு எப்படி மீத்தேன் எடுக்க முடியும் ? அதனால் தான் அவர்கள் கட்டாமல் இருக்கிறார்கள் ...

 • r.chandrasekaran - channai,இந்தியா

  வெத்து வேட்டு டுமிழர்கள் எங்கே. தண்ணிய புடிச்சி வைக்கலாமில்லே. மோடியை குறை சொல்லி எத்தனை நாள் தான் தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

   @r.chandrasekaran - சென்னை :: நீங்க தெலுங்கா சார்? தமிழர்களை டுமிழர் அப்படிங்கறீங்களே? நீங்க தமிழரா இருந்தா சொந்த மொழியினரையே கேவலப் படுத்தறோமே என்கிற எண்ணம் வரவில்லையா? தன்மானமே கிடையாது போல. .

  • Htanirdab S K - Hyderabad,இந்தியா

   தமிழர்கள் - தமிழ் மீது பற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது அக்கறையும் கொண்டவர்கள் ..

  • Ranga Ramanathan - coimbatore,இந்தியா

   தன்மான சிங்கம் ராமசாமி நாயக்கர் வகையறாக்கள் வாழ்க

  • Htanirdab S K - Hyderabad,இந்தியா

   டுமிழர்கள் - தமிழை வைத்து தங்களுக்கு ஆதாயம் தேடி வளர்ச்சியை நிறுத்துபவர்கள்

  • jagan - Chennai,இந்தியா

   SC ST மற்றும் அந்தணர் மட்டுமே நிஜ தமிழர் ...BC MBC OBC எல்லாம் தெலுங்கு கன்னட கூட்டமே

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  ஏரி, குளம் , குட்டை எல்லாம் நிரப்பி வைத்து கொள்ளுங்கள். இந்த வருடம் நமக்கு நீருக்கு பஞ்சமில்லை.

  • Jayasankar Sundararaman - Chennai,இந்தியா

   ஏரி, குளம் எங்கே இருக்கு தமிழ்நாட்டில்? 60 சதவிகிதம் ஆட்டம் போட்டாகி விட்டது. எல்லாம் வேஸ்ட்.. 60 வருடம் தி.மு.கவும் அண்ணா தி,மு,கவும் தமிழ் நாட்டை நாறடித்துவிட்டனர் . நீர் வளம் இல்லை. மணல் கடத்தல் மன்னர்கள் செய்தது , அவர்களுக்கு துணை தமிழ் நாடு பெரிய கட்சிகளே.

 • GOPAL - TRICHI,இந்தியா

  VANIN KANNEER NAMMAI VALA VAIKKUM THANNEER . KARANATAKA TAMIL NATTUKKU THANNEER THARA MARUPPATHINAL VANAM ANGU ATHIHAMAI ALUTHU NAMMAIYUM KONJAM VALA VAIKKIRATHO?

 • balasubramanian - coimbatore,இந்தியா

  தமிழகத்திற்கு நீர் திறந்து விட்டார்கள் என்று சொல்ல வேண்டாமே. உபரி நீர் திறப்பு என்று சொல்லலாம். ஆனால் இந்த ஆற்றை மனிதன் படுத்தும் பாடு சொல்லி மாளாது .அந்தக்காலத்து ஆற்றுப்படுகை பளிங்கு போல் இருக்கும். ஒருவகைக்குப் பார்த்தால் நாசிக் சர்தார் சொல்வதுபோல் ஆறு தன்னைத்தானே ஆக்ரோஷமாக சுத்தம் செய்து கொள்ளப்போகிறது.

 • சுப்ரமணியன் - ?????? ??? ,இந்தியா

  திறக்காம வச்சுக்க வேண்டியதுதானே?

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

   திறக்கலன்னா திட்டறீங்க. திறந்தாலும் , திறக்காம வெச்சுக்க வேண்டியது தானே ன்னு திட்டறீங்க

 • Sriramaprasad Balachandran - PUNE,இந்தியா

  Even it is not too late, we have enough time to do on war footing steps to store the water. Entire JCB used for sand transport has to be diverted for cleaning the water route, so that all lakes, small water storage units will store the rainwater. Even the political parties can help the government in this regard instead of doing politics and road shows. Are we ready for a change in our mind-sets?

 • Kaliyan Pillai - Chennai,இந்தியா

  இன்று ஒவ்வொரு கட்சிக்கும் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் அத்தனையும் கடைமட்ட தொண்டர்கள், கடைக்காரர்கள், கார்பொரேட் நிறுவனங்கள் அளித்த கொடை கடைமட்ட தொண்டனின் வியர்வையும் ரத்தமும் அவர்கள் கட்டிடங்களில் ஒன்றியுள்ளது. ஆனால் நிர்வாகத்தில் அவர்களுக்கு இடமில்லை. தேர்தல் நேரத்தில் குவாட்டரும் பிரியாணியும் தான் மிச்சம். ஆரோக்கியமான அரசியல் சூழலுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து கட்சிகளை குடும்பங்களின் பிடியிலிருந்து மீட்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத்தேர்தல் நடத்தி கட்சிகள் தலைவரை தேர்வு செய்யவேண்டும். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே ஒருவர் தலைவர், பொதுச்செயலாளர் பதவியை வகிக்கும்படி சட்டம் இயற்றினால்தான் நேர்மையான அர்ப்பணிப்புள்ள மனிதர்களுக்கு ஆளுமையில் வாய்ப்பு கிடைக்கும். படித்த இளைஞர்களும் அரசியலுக்கு வர வழிவகுக்கும். ரவுடிகள் சாம்ராஜ்யம் ஒழியும். உண்மையா இல்லையா?

 • Anbarasan Kandasamy - riyadh,சவுதி அரேபியா

  காவிரியிலிருந்து கிளை கால்வாய்கள் வழியாக கண்மாய்களுக்கும் ஏரிகளுக்கும் இந்த நீரை கொண்டு போயி சேர்க்க முயற்சி எடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படாது

 • Kaliyan Pillai - Chennai,இந்தியா

  நீர்நிலைகளை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்பது உள்ளூர் அரசியல்வாதிகளே. கிரிமினல் அரசியல்வாதிகளை மக்கள் அடித்து நொறுக்கத்தவரை எதுவும் விளங்கப்போவதில்லை. நாடு சுடுகாடாகத்தான் மாறும்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  எல்லா குளங்களும் தூர் வாரப்பட்டு நீரை சேமிக்கும் நிலை உருவாக்க வேண்டும் , இதை தான் அரசு செய்ய வேண்டுமே தவிர இலவச பொருட்கள் அல்ல , நீர் உயர நாடு செழிக்கும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  விவசாயிகள் இனி போராட வேண்டிய அவலம் இருக்காது , வருண பகவானை போற்றுவோம் அவர் என்றும் கருணை காட்டுவார் .

 • samaneethi R - Chennai,இந்தியா

  கர்நாடகா திறந்துவிடும் உபரிநீரை அப்படியே தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றும் இந்தநீர் கடலில் கலந்து வீணாகும்.இதை தடுக்க. இந்த நீரை காலியா உள்ள விளைநிலத்தில் பாய்த்து அதை தேக்கி வையுங்கள் நிலத்தடி நீர்மட்டம் உயரும். நீருடன் கலந்து வரும் வண்டல்மண் படிந்து நிலமும் வளம்பெறும். உபரிநீர் கடலில் கலப்பதை தடுக்கலாம். இந்த செயல் முறையை தினமும் மாலை வேளையில் செய்யுங்கள், காலையில் செய்தல் நீர் ஆவியாகிவிடும். (ஏரி குளங்கள் வெட்டவில்லை என்ற கவலை இனி வேண்டாம்)

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  We may also face flood threat if we release more water for agricultural purposes .We have to save enough water in all Dams in order to release the water when we need it very badly.We should not waste the water to flow into sea unnecessarily.

 • mohan - chennai,இந்தியா

  எங்களுக்கு நீர் சேமிப்பு பற்றி கர்நாடகா போல செய்ய வேண்டிய அவசியம் இல்லை... மக்கள் எக்கேடு கேட்டால் எங்களுக்கு என்ன.. இப்படிக்கு .. அணைத்து.. அர....

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  இங்கு பலா் வெறுமே சேமிப்பு, சேமிப்பு என பிதற்றுவது எரிச்சலாக இருக்கிறது. எல்லா நீரையும் எப்படி சேமிக்க இயலும். பல ஏாி, குளம், குட்டைகளை மக்களே ஆக்கிரமித்து வீடு கட்டி கொள்வாா்கள், நீா் வழித்தடங்களை ஆக்கிரமித்து கொள்வாா்கள் பிறகு எங்கு சேமிப்பது? மழை நீரை சேமிக்க சொல்லி பூமியின் நீா்மட்டத்தை உயா்த்த அரசு சொன்னால் அதை செய்வதில்லை, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் சென்றால் மக்களே போராட்டம் நடத்துவது என்று எல்லா தவறையும் தாங்களே செய்து விட்டு.அரசை குற்றம் சொல்வது என்ன முறை? சட்டத்திற்கும், தா்மத்திற்கும் கட்டுபடாத இந்த முட்டாள் அயோக்கியா்களை இயற்கை சீற்றம், பெருவெள்ளம் தான் தண்டிக்க வேண்டும். ஆற்றில் பிரவாகிக்கும் எல்லா நீரும் மனிதனுக்கு என்று நினைப்பது பேதமை. ஒரு குறிப்பிட்ட அளவு நீா் கடலில் கலந்தே ஆக வேண்டும். கடைமடைக்கு தண்ணீா் வரவில்லை என்பதெல்லாம் தவறான பொய் செய்தி. கடைமடை விவசாயிகள் வருட கணக்கில் வறண்டு கிடந்த ஆற்றை ஏன் சாியாக தூா் வாாி பராமாிக்கவில்லை எல்லாவற்றையும் அரசாங்கம் தான் செய்ய வேண்டுமா. 3 வருடமாய் விவசாய வேலையின்றி வெட்டியாக தானே இருந்தாா்கள் அப்போதே ஏன் தாங்களே தங்கள் தங்கள் ஊாின் பாசன வாய்க்கால்களை பராமாித்து சீா் செய்திருக்கக்கூடாது? இதை யாராவது, அரசாங்கம் தான் செய்யவேண்டும் என்று உட்காா்ந்திருந்தால் அது சோம்பேறிதனம். எங்கள் ஊா் விவசாயிகள் சும்மா புலம்புவதில்லை எங்கள் ஊாில் உள்ள 3 குளம், 7 குட்டைகள் அனைத்தும் நிரம்பி விட்டன, பக்கத்து ஊா்களிலும் ஓரளவு தண்ணீா் தேக்கி விட்டனா். வீட்டில் உள்ள குண்டான் சட்டிகளில் தான் இன்னமும் சேமிக்கவில்லை. இன்னம் நமக்கான மழை பொழிவு ஆரம்பிக்கவில்லை. ஆற்றை கண்ணால் பாா்க்காதவனும், விவசாயம் என்றால் என்ன என்று தொியாதவனும் தான் அளவிற்கதிகமாய் சமூக வலை தளங்களில் விவசாயத்தை காப்பாற்றுவோம் என பொங்குகிறாா்கள்.உண்மை விவசாயிகள் கடமையை செய்து கொண்டே தான் இருக்கிறோம். ஜெய் ஜவான், ஜெய் கிஸான்...

 • SridharSambandham -

  அது என்ன மத்திய அரசு அறிவித்துள்ளது அப்ப தமிழ்நாடு அரசின் தூக்கிக்கொண்டிருக்கிறதா

 • Sudarsanr - Muscat,ஓமன்

  என்ன தண்ணி வந்து ஆக போகுது. அத சேமிச்சு வைக்க ஒரு வழியும் இல்லையே. இந்த வருஷம் இறைவன் / இயற்கை கருணை அதிகமாவே இருக்கு. ஆனா நாம அத சரியாய் பயன்படுத்தாம வீணாக்கறோம். ரொம்ப வருத்தபடுவோம்

  • sardar papparayudu - nasik,இந்தியா

   சும்மா சேமிப்பு னு சேமிப்பு னு , நதிகள் அனைத்திலும் மலம் கழிப்பது , குப்பை போடுவது , சாக்கடை இணைப்பது இந்த அசிங்கங்களை எவன் சுத்தம் செய்வது . இயற்கை அன்னையே , அந்த நதியே பெரு வெள்ளம் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவேண்டும் . நதி கரைகளில் வீடு காட்டும் நாதாரிகள் அரசினை கண்டு பயம் கொள்ள மாட்டான் , இந்த மாதிரி பெரு வெள்ளம் வந்தால் தான் சிறிதாவது பயம் இருக்கும் . சேமித்த தண்ணீர் போதும் , அதனை கொண்டு விவசாயம் செயுங்கள் முதலில் . எதை எடு பஞ்ச பாட்டு . எதுவுமே வீண் இல்லை , நன்மையே .

  • Sudarsanr - Muscat,ஓமன்

   நீங்க அசுத்தம் செய்விங்க. அத சுத்தம் செய்ய காவேரி என்ன உங்க வீட்டு வேல ஆளா? சும்மா சொல்லாதீங்க. உங்களுக்கு உங்க வருங்காலத்துக்காக பணத்தை சேமிச்சு வெப்பிங்களா இல்ல இப்பவே செலவு செய்விங்களா. பணத்தை செலவு செஞ்சா கூட சம்பாதிக்கலாம். தண்ணிய சேத்து வெச்சாதான் நாளைக்கு தண்ணீர் பிரச்னை வராது. நீங்க தமிழ்நாட்டுல எந்த பகுதின்னு தெரியாது. ஆனா நான் காவேரி ஆறு போற கும்பகோணம். அதனால எனக்கு நல்லாவே அத பத்தி தெரியும். (தலை கணம் இல்ல). குளம் குட்டை ஏரி எல்லாத்தையும் ஆட்டய போட்டு குப்பைமேடு, அடுக்குமாடின்னு கட்டியாச்சு. நம்மளே எத்துணை வழிய கண்டுபுடிச்சாத்தான் உண்டு. இதே அடுத்த வருஷம் மழை சரியாய் பெய்யலனா என்ன செய்விங்க. இப்போ இருக்கும்போது வருங்காலத்துக்குனு கொஞ்சம் சேத்து வச்சாத்தான் நல்லது. அதைத்தான் நான் சொன்னேன். இதுக்கு பெரு பஞ்ச பாட்டு கிடையாது. புத்திசாலித்தனம். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தனும். குளங்களை தூர் வரணும். அடுத்தது வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கும். அதுக்குள்ள இத எல்லா செஞ்சாதான் அடுத்தது நமக்கு பிரச்னை இல்லாம இருக்கும். இல்லைனு சொன்ன ஒரு பெரிய தொகையை வெள்ள நிவாரண நிதினு ஒதுக்கணும்.

 • Gurumoorthy Padmanaban - chennai,இந்தியா

  நாம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உபரி நீரை சேமிக்க வில்லை என்றால் நம்மை போல் முட்டாள் யாரும் இருக்க முடியாது

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  உடனடியாக வீராணம் ஏரியை திறந்து அவர்கள் பாசனத்திற்கும், சென்னையின் குடிநீர் தேவைக்கும் மடைமாற்ற வேண்டும், கடைமடை பகுதிகள் இன்றுவரை அரசால் தூர்வாராத நிலையில், அதை செய்யும் விவசாய அமைப்புகளுக்கு சிறிய நிதியுதவிகளை உடனே செய்துவிட்டால் பலனும் அதிகப்படியாக கிடைக்கும். இது உதவியல்ல அரசின் கடமையாகும்.

 • டூமிழ்தமிழன் -

  இப்படி தொடர்ந்து மழை இந்தியா முழுவதும் பெய்தால் நாங்கள்(காங்கிரஸ்) எப்படி மீண்டும் ஆட்சிக்கு வருவது

  • Mohan Sundarrajarao - Dindigul

   திருடர்கள் இல்லாவிட்டால் நங்கள் போலீஸ் எப்படி பொழிப்பது? நாட்டில் வியாதியே இல்லாவிட்டால் நங்கள் டாக்டர்கள் எப்படி பிழைப்பது? மாணவர்கள் தாங்களாகவே படித்து தேறி விட்டால், நங்கள் tuition சென்டர்கள் எப்படி பிழைப்பது? நல்ல தரமான பொருள்களை தயாரித்தால், நாங்கள் உற்பத்தியாளர்கள் எப்படி பிழைப்பது? innum ....innum .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement