Advertisement

சேதம்:கனமழையால் ஏலச்செடிகள். தோட்டங்களில் பணிகள் நிறுத்தம்

கம்பம்:இடுக்கியில் கொட்டும் கன மழையால் ஏலத்தோட்டங்களில் செடிகள் சேதமடைந்துள்ளன. மரங்களும் விழுவதால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கேரளா, இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த 10 நாட்களாக குறைந்தது.
இதனால் நிம்மதியடைந்த விவசாயிகள் ஏலத்தோட்டங்களில் பணிகளை துவக்கினர். இந்நிலையில் ஆக.7 நள்ளிரவில் மீண்டும் மழை பெய்யத் துவங்கியது. பலத்த காற்றுடன் பெய்யும் கனமழையால் ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்து மின்சப்ளை துண் டிக்கப்பட்டது.
கல்தொட்டி, மாதவன்கானல், சுல்தானியா, வண்டன்மேடு, ஆமையாறு, நெடுங்கண்டம், வெங்கலப்பாறை, பாரத்தோடு உள்ளிட்ட மாவட்டத் தின் பல பகுதிகளில் குறிப்பாக ஏலத்தோட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஏலச்செடிகளுக்கு அருகில் வளர்க்கப்படும் நிழல் தரும் மரங்கள் தண்ணீரால் சாயத் துவங்கியது.
ஆயிரக்கணக்கான ஏலச்செடிகள் ,மரங்கள் விழுந்து நசுங்கியுள்ளது. கடந்த 36 மணி நேரத்திற்கும் மேலாக மழை விடாமல் பெய்து வருவதால் செடிகளில் ஏற்கனவே இருந்த அழுகல் நோய் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவிக்கின்றனர். பணிகள் நிறுத்தப்பட்டு தோட்டங்களில் தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement