Advertisement

தொழில் துறையினரை கவர்ந்த 'நிட்-ஷோ':ரூ. 500 கோடிக்கு வர்த்தக விசாரணைடூ தொழில் துறையினரை கவர்ந்த 'நிட்-ஷோ':ரூ. 500 கோடிக்கு வர்த்தக விசாரணை

திருப்பூர்:திருப்பூரில் 'நிட்-ஷோ' கண்காட்சி நிறைவடைந்தது. மூன்று நாட்களில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக விசாரணை நடந்துள்ளது.
சர்வதேச பின்னலாடை வர்த்தக சந்தையில், திருப்பூர் எப்போதும் வெற்றிக்கொடி நாட்டி கொண்டிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், பருத்தி நுாலிழையில் தயா ரிக்கும், திருப்பூர் பின்னலாடைகளுக்கு, மிகுந்த வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டில் கண்டறியப்படும் புதிய தொழில்நுட்பம், பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு அடிப் படை ஆதாரமாக உள்ளது.ஆடை உற்பத்தி துறைக்கான, நிட்டிங், சாயமிடுதல், பிரின்டிங், காம்பாக்டிங், தையல் என பனியன் உற்பத்தியில் பங்கு வகிக்கும் மெஷின்களே, ஆடையின் தரத்தை நிர்ணயிக்கின்றன. திருப்பூர் தொழில் துறையினர், வெளிநாடுகளுக்கு சென்று, தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்வதில், சிரமமாக இருப்பதால், வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து, திருப்பூரிலேயே கண்காட்சி நடத்தப்படுகிறது.'சிட்டி லீவ்ஸ்' நிறுவனம், கடந்த 2000ம் ஆண்டு முதல், நிட்-ஷோ கண்காட்சியை நடத்தி வருகிறது. நடப்பாண்டு கண்காட்சி, வேலன் ஓட்டலில், 5ம் தேதி துவங்கியது. மொத்தம் உள்ள, நான்கு அரங்கங்களில், 520 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது; மொத்தம், 372 நிறுவனங்கள், கண்காட்சியில் பங்கேற்றிருந்தன.
ஜப்பான், சீனா, தைவான், கொரியா, ஐரோப்பா என, பல்வேறு நாடுகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள், கண்காட்சியில் பங்கேற்று, தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தின. கண்காட்சியை, கோவை, திருப்பூர், கரூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட அருகாமை மாவட்டங்கள் மட்டுமின்றி, லுாதியானா, மும்பை, பெங்களூரு போன்ற நாட்டில் பிற ஜவுளி நகர ஆடை உற்பத்தி, 'ஜாப் ஒர்க்' துறையினரும் கண்காட்சியை பார்வையிட்டனர்.
கண்காட்சி குறித்து, 'சிட்டி லீவ்ஸ்' நிறுவனர்கள் கிருஷ்ணா, மகேந்திரன் கூறுகையில், 'மூன்று நாட்கள் நடந்த கண்காட்சிக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டு, 500 கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தக விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்தாண்டு நடந்த கண் காட்சியில், 400 கோடி ரூபாய்க்கு வர்த்தக விசாரணை நடந்த நிலையில், தொழில்துறையினர் வரவேற்பு காரணமாக, இந்தாண்டு, 500 கோடி ரூபாய்க்கு வர்த்தக விசா ரணை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது,' என்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement