Advertisement

புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறை

பாங்காக்:தென் கிழக்காசிய நாடான தாய்லாந்தில், பண மோசடி வழக்கில், முன்னாள் புத்த துறவிக்கு, 114 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தைச் சேர்ந்த புத்த துறவி, வைராபோன் சுக்போன், 39. சில ஆண்டுகளுக்கு முன், உலகின் மிகப் பெரிய புத்தர் சிலை அமைப்பதாக கூறி, பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடையாக பெற்று மோசடி செய்ததாக, அவர் மீது புகார்கள் பதிவாகின.
இதையடுத்து நடந்த விசாரணையில், அவரிடம் பல சொகுசு கார்கள் இருப்பதும், பல வங்கிக் கணக்குகளில், கோடிக்கணக்கான ரூபாய் இருப்பதும் தெரிய வந்தது. ஒரு சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததில், அந்த சிறுமிக்கு ஒரு குழந்தை பிறந்ததும் தெரிய வந்தது.இதற்கிடையில், அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற, சுக்போன் மீது, பண மோசடி மற்றும் கற்பழிப்பு வழக்கு இருப்பதை அறிந்த அந்நாட்டு அரசு, அவரை திருப்பி அனுப்பியது.
சுக்போன் மீதான பண மோசடி வழக்கை விசாரித்த, தாய்லாந்து நீதிமன்றம், அவருக்கு, 114 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, தற்போது உத்தரவிட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • தமிழ் -

    ஏற்ற தாழ்வு இல்லாத பெளத்த மதத்தில் இப்படியும் ஒரு பிறவி

  • ஸாயிப்ரியா -

    பணம் காமம் ஆடம்பரம் எதையும் துறக்காத துறவி! கேடு கெட்ட ஈனப் பிறவி.புத்தர் பெயரை ஏன் கெடுக்கிறான்.

  • amuthan - kanyakumari,இந்தியா

    அவன் புத்த பிசாசு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement